முரசொலி பவளவிழா வாழ்த்தரங்கிற்கு

சென்னை, ஆக.12- முரசொலி பவளவிழா வாழ்த் தரங்கில் உரையாற்றிய கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள், இந்த விழாவிற்கு அரசு அரங் கத்தை பிடித்த மு.க.ஸ்டாலின் விரைவில் ஆட்சியைப் பிடிப்பார் எனக் குறிப்பிட்டார். விழாவில் கவிப் பேரரசு வைர முத்து அவர்கள் பேசியதாவது:- திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் - சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களை நான் பெரிதும் பாராட்டுகிறேன். ஒரு பத்திரிக்கை, பவள விழா நிகழ்கிறபோது, அந்த மேடையில் பெருமை பேசத்தக்க, பெருமை தரத் தக்கவர்கள் யார் என்ற ஒரு கேள்வியை எழுப்பி, பத்திரிக் கையைப் பாராட்ட பத்திரிக்கை யாளர் கள்தான் சிறந்தவர்கள் என்ற ஒரு சொந்த முடிவை எடுத்த தற்காக, அந்த முழுப் பெருமை அவரையே சாருகிறது. நீங்கள் இந்தப் பத்திரிக்கை யாளர்களை அழைத்தது, அவர் களை நீங்கள் மதித்ததாகும். இந்தப் பெருமக்கள் எல்லாம் ஒரு நட்சத்திரங்களைப் போல் ஒரு மேடையில் கூடியிருப்பது, அவர் கள் உங்களை மதித்ததாகும். இந்தப் பரஸ்பர மதிப்புதான், தமிழ் நாட்டின் ஊடகத் துறையில் புதிய பண்பாட்டைத் தோற்றுவிக்கும் என்று நான் நம்புகிறேன். அதைத் தோற்றுவித்த செயல் தலைவர் தளபதி அவர்களை நான் பெரிதும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். பேசிய பெருமக்கள் எல்லாம், முரசொலி என்ற ஆல விருட்சத் தின் கிளைகளைப் பேசினார்கள், இலைகளைப் பேசினார்கள், அதில் அமர்ந்த கிளிகளைப் பேசினார் கள். அந்த விருட்சம், விழுது இறக்குவதற்குப் பட்ட பாடுகளைச் சொன்னார்கள். நான் அதன் வேர்களைக் கொஞ்சம் பேச வேண்டும் என ஆசைப்படு கிறேன். திருமண வயதில் திராவிடத்திற்குப் பத்திரிக்கை அடித்த தலைவர்! முத்தமிழறிஞர் கலைஞர் முரசொலியைத் தொடங்கியபோது அவருக்கு வயது 18. கனவு காண வேண்டிய வயது, காதலியைத் தேடுகிற வயது, பூமியிலும், வானத் திலும் இருக்கும் இன்பங்களைத் தேடி, துய்க்கத் துடிக்கிற வயது. திருமணத்திற்குப் பத்திரிக்கை அடிக்க வேண்டிய வயதில், திராவிடத் திற்குப் பத்திரிக்கை அடித்த ஒரே தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். (கைதட்டல்) இன்னும் கூட நினைத்துப் பார்த்தால், என் கழுத்து எலும்பு வலிக்கிறது. கலைஞர் அவர்கள் 2000 பிரதிகள் அச்சடிக்கிறார். அவருடைய தோழர் தலைச் சுமையில் 1000 பிரதிகள், அவர் தன் தலைச் சுமையில் 1000 பிரதிகள். இந்தப் பிரதிகளை தலையில் துண்டையே சும்மா டாகக் கட்டி தூக்கிச் சுமந்து வருகிறார்கள். ஓடம் போக்கி ஆற்றைக் கடந்து போகிறார்கள். எனக்கு ரொம்ப ஆச்சரியம். முரசொலியைத் தூக்கிச் சுமந்த அந்தத் தலைவனை தமிழ்நாடு, தன்னையே சுமந்து போ - என்று பணித்ததே, அதுதான் அவ ருடைய லட்சியத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய விஷயம். கலைஞரின் மூலதனமெல்லாம் தமிழ்தான்! எனக்கு என்ன தெரியுமா மகிழ்ச்சி? இங்கு வந்திருக்கிற பெருமக்கள் எல்லாம், பத்திரிக்கை தொடங்கிய பேராளர்கள் எல்லாம் செல்வந்தர்கள். செல்வாக்கு மிக்கவர்கள். சமுதாயத்தின் அடித் தளத்தை அறிந்தவர்கள். ஆனால் முத்தமிழ் அறிஞர் கலைஞர், தன்னுடைய முரசொலி பத்திரிக் கையைத் தொடங்கிய போது, அவர் ஏழை, அவர் சாமானியர். அவரது மூலதனமெல்லாம், அவரது தமிழ்! அவரது விநியோ கம் எல்லாம் லட்சியம். அச்சடித்த மை எல்லாம் அவரது ரத்தம். அச்சடித்த தாள் எல்லாம் அவரது தோல். (கைதட்டல்) இப்படிப்பட்ட ஒரு ஆச்சரிய மான ஏழை, இந்தச் சமுதாயத் தைக் கருதி, ஒரு லட்சியப் பத்திரிக்கை தொடங்கியிருக் கிறார் என்பதுதான், எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். இன்றைக்கு முரசொலி 75 ஆண்டுகளைத் தாண்டி வந்திருக் கிறது என்றால், அதன் தொடக்கம் என்பது ஒரு கண்ணீர்க் கோடு மாதிரி. கண்ணீர்க் கோடு அரு வியான கதைதான், முரசொலி வளர்ந்த கதை. ஒரு போன்சாய் மரம் காடானதுதான் முரசொலி யின் கதை. முரசொலி பத்திரிக்கை தொடங்கப்பட்டதற்கும், இந்தப் பெருமக்கள் தொடங்கியதற் குமான கால வித்தியாசத்தை நான் பார்க்கிறேன். இதைச் சொல்வதன் மூலம், கலைஞரின் பெருமையும், சமுதாயத்தின் நிலையும் இளைய தலை முறைக்குத் தெரிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பெரும் செல்வந்தர்களோடு போட்டியிட்டு வென்ற தலைவர்! 1878ல் தொடங்கப்பட்டது. தி இந்து. 1925 ல் தொடங்கப்பட்டது குடியரசு. 1934ல் தொடங்கப் பட்டது தினமணி. 1942ல் கலைஞர் முரசொலியைத் தொடங் குகிறார். இதில் என்ன ஆச்சரியம் தெரியுமா? தினத்தந்தி, முரசொலி, அண்ணாவின் திராவிட நாடு - மூன்றும் தொடங்கப்பட்டது ஒரே ஆண்டு, 1942. இந்தப் பெருமக்களோடு போட்டியிட்டு கலைஞர், தன் லட்சியத்தைத் தூக்கி நிறுத் தியிருக்கிறாரே, இதைப் பார்த் துத்தான் நாங்கள் ஆச்சரியப் படுகிறோம். பல விஞ்ஞான உண்மைகள் சொன்னது முரசொலி மற்ற ஏடுகளுக்கும், முர சொலிக்கும் ஒரு வேறுபாடு உண்டு. என்ன வேறுபாடு எனில், மற்ற ஏடுகள் செய்தியை செய்தி யாக மட்டுமே தந்தன. அண்ணா வின் திராவிட நாடும், நம்நாடும், முரசொலியும், செய்திகள் எப்படி எழுகின்றன என்பதோடு மட்டு மல்லாமல், செய்திகள் எப்படி எதிர்காலத்தில் நிகழ வேண்டும் என்ற சிந்தனையையும் தமிழ னுக்கு விதைத்தன. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்று திருக்குறளை பாமரத் தமிழனை உச்சரிக்க வைத்தது, முரசொலி. கொல்லேற்றுக் கோல் எஞ்சு வானை, மறுமையும் புல்லாளே ஆயர் மகள் - என்ற கலித் தொகையை ஒரு திண்ணைத் தமிழன் வாசிப்பதற்குத் தந்தது, முரசொலி. வடவேங்கடம் தென் குமரி ஆயிடை தமிழ்கூறு நல்லுலகு என்று தமிழ்நாட்டின் எல்லையை தமிழன் தெரிந்து கொள்ள வைத்தது, முரசொலி. கண்ணாடி என்பது திடப் பொருளும் அல்ல, திரவப் பொருளும் அல்ல, அது விறைத்த திரவம் என்ற விஞ்ஞான உண் மையைச் சொன்னது, முரசொலி. தமிழன் காற்றுக்குப் பெயர் வைத்தான் என்ற செய்தியைச் சொன்னது முரசொலி, வடக்கே இருந்து வருவது வாடை! தெற்கே இருந்து வருவது தென்றல்! கிழக்கே இருந்து வருவது கொண்டல்! மேற்கே இருந்து வருவது கோடை! - என்று, தமிழன் காற்றுக்குப் பெயர் வைத்த வரலாற்றைச் சொன்னது முரசொலி. வட இந்தியாவில், மத்திய அரசில் மாநிலங்களின் அதிகாரங் கள் எல்லாம் குவிக்கப்பட்டிருக் கின்றன, குவிக்கப்பட்ட அதி காரம், மாநிலங்களுக்குப் பகிர்ந்து தரப்பட வேண்டும், அப்போதுதான் இந்திய ஒருமைப்பாடு சமத்துவம் பெறும் என்று ஓங்கிக் குரல் கொடுத்தது முரசொலி. இந்த முரசொலிக்குத்தான் இன்றைக்கு 75 வயது என்று நினைக்கிறபோது, நான் ஆதி நாளை நினைத்துப் பார்க்கிறேன். விழாக்கள் நடத்துவதில் கலைஞருக்குப் பெருவிருப்பம் ஏன்? கலைஞருக்கு ஒரு ஆசை யிருக்கிறது. முரசொலி தொடங்கி ஓராண்டு ஆயிற்றே, விழாக் கொண்டாட வேண்டாமா என்று தோன்றுகிறது. விழா என்பதில் அவருக்கு ஒரு பெரிய ஆசை உண்டு. விழாவினை கலைஞர் ஏன் விரும்புகிறார் என்று நான் யோசித்து யோசித்துப் பார்த்தேன். தான் புகழ் கொள் வதற்கா? தான் பட்டாடை சூட்டிக் கொள்வதற்கா? பூமாலை, பொன் னாடை அணிந்து கொள்வ தற்கா? அல்ல. எப்போதுமே அவர் விழாக்களை நேசிப்பதற்கான மூலத்தை நான் துருவிப் பார்த்த பொழுது, ஒன்று கண்டறிந்தேன். மக்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிற வரைக்கும் தான் (கைதட்டல்) ஒரு தலைவன் சமுதாயத்தோடு ஒட்டி உறவாட முடியும் என்பதுதான் அவரின் முதல் கொள்கை. வீட்டுப்பொருள்களை விற்று விழா நடத்திய தியாகம்! முதல் ஆண்டு முரசொலிக்கு விழா நடக்கிறது. அதுவரைக்கும் அவர் பார்த்ததில்லை, அந்த இரண்டு இளைஞர்களை! அந்த இரண்டு இளைஞர்களை விழா விற்கு அழைக்கிறார். விழாவில் அவர்கள் பேசுகிறார்கள். விழா நிறைவடைகிறது. கலைஞரைக் காணோம், கொஞ்சம் தாமதமாக வருகிறார். இந்தப் பேச்சாளர் களுக்குப் பணம் தந்து அனுப்ப வேண்டும். போக ஒண்ணே கால் ரூபாய். வர ஒண்ணே கால் ரூபாய். ஒரு பேச்சாளருக்கு இரண்டரை ரூபாய். இரண்டு பேச்சாளர் களுக்கு 5 ரூபாய். இந்த 5 ரூபாய்க்கு தன் வீட்டில் இருந்த வெள்ளிக் கிண்ணத்தை அட மானம் வைத்து எடுத்து வருகிறார் கலைஞர். இரண்டரை ரூபாய் ஒரு இளைஞருக்கு வழங்குகிறார். இன்னொரு இரண்டரை ரூபா யினை இன்னொரு இளைஞ ருக்கு வழங்குகிறார். அதனைப் பெற்றுக் கொண்ட அன்றைய இளைஞர்கள் - ஒருவர், பேரா சிரியர். மற்றொருவர், நாவலர் நெடுஞ்செழியன். (கைதட்டல்) முரசொலிதான் பேராசிரியரை அவர் பக்கத்தில் இணைத்து வந்திருக்கிறது, நாவலரை அவர் பக்கத்தில் அழைத்து வந்திருக் கிறது. இப்படி தொடங்கப்பட்ட இந்த முரசொலி எப்படி வளர்ந்தது தெரியுமா, தோழர்களே! இங்கே சொன்னார்களே! கலைஞர் கலைத்துறைக்கு சென்றது பொரு ளீட்டுவதற்காக என்று! அப்படி யெல்லாம் யாரும் சொன்னால் அதை நம்பாதீர்கள், பொருள் ஈட்டுவது, அவருடைய நோக்கம் என்றாலும் கூட அந்தப் பொரு ளுக்கான நோக்கம் வேறு. வார ஏடாக வெளிவருகிறது முரசொலி. அச்சடிக்கப்பணம் இல்லை. 54ல் வெளி வருகிறது மனோகரா, 54ல் வெளி வரு கிறது முரசொலி வார ஏடு. எதிர்பாராவிதமாய் என்ன நடக்கிறது என்றால், ஒரு ஆயிரம் பிரதிகள் மனோகரா வசனப் புத்தகம் அச்சடித்துவிட்டால், அந்தப் புத்தகத்திலிருந்து விற் பனையாகிற பணத்தை முர சொலிக்குத் தந்துவிடலாமே என்று கலைஞர் கருதுகிறார். அடித்தார், என்ன ஆயிற்று தெரியுமா? 5 ஆயிரம் பத்தாயிர மாயிற்று, 10 ஆயிரம் 20 ஆயிர மாயிற்று, 20 ஆயிரம் லட்சமா யிற்று, அச்சகத்திலிருந்து ஒரு புகார் வந்தது. பிளாக் தேய்ந்து விட்டது என்று! கலைஞர் சொன்னார், செம்பில் பிளாக் செய்யுங்கள், கட்டையைத் தூக்கிப் போடுங்கள் என்றார். இப்படி அடிக்கப்பட்ட மனோ கரா படத்தின் வசனத்தை விற்ற அந்த லட்சம் பிரதிகளின் தொகைதான் வார ஏடு முரசொலிக்கு மடை மாற்றம் செய்யப்பட்டது. மனோகராவில் வசனம் எழுதி அவர் வீடு வாங்கியிருக்கலாம், அன்றைக்கு வளசர வாக்கத்தில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி யிருக்கலாம். ஆனால் அந்தப் பணத்தை தன் லட்சியத்திற்காகத் திருப்பி விட்டவர் கலைஞர் அவர்கள். இந்த நேரத்தில் நெருக்கடி நிலையில் அவர் சமாளித்தார் அல்லவா, அதனை ஒருகணம் நினைத்துப் பார்க்கிறேன். நெருக் கடி நிலையைத் தாண்டி வந்தார் அல்லவா? இந்தியாவில் எந்த வொரு தலைவரும் நெருக்கடி நிலையில் இவ்வளவு பாதிப்பிற்குப் பிறகு ஒரு இயக்கத்தைத் தூக்கி நிறுத்தியிருக்க முடியாது, கலை ஞரைத் தவிர! எல்லாப் பத்திரிக்கைகளுக் குமே ஒரு அடக்குமுறை உண்டு. இந்தியாவின் முதல் பத்திரிகை 1780ல் நிறுவப்பட்டது. அது `கல்கத்தா கெசட் என்று ஒரு பத்திரிகை. அந்தப் பத்திரிகை இரண்டே ஆண்டுகளில் நிறுத் தப்பட்டது. காரணம் அந்தப் பத்தி ரிகை மூன்று பேரை விமர்சித்தது. வாரன் ஹேஸ்டிங்ஸ், வாரன் ஹேஸ்டிங்ஸின் மனைவி, அன் றைய உச்சநீதிமன்ற நீதியரசர் எலிசா. இந்த மூன்று பேரையும் விமர்சித்த ஒரே காரணத்திற்காக இரண்டே ஆண்டுகளில் அந்தப் பத்திரிகை மூடப்பட்டது. ஒரு பத்திரிகையையே வெள்ளைக் காரன் காலத்தில் நிறுத்த முடி கிறது என்றால், கலைஞர் எவ் வளவு சோதனைகளைத் தாண்டி 75 ஆண்டுகளாக முரசொலியை நடத்திக் கொண் டிருக்கிறார் பாருங்கள். நெருக்கடி நிலையின் போது எவ்வளவோ நிகழ்வுகள் நடந்து விட்டன. ராஜீவ்காந்தி கொல்லப் பட்டபோது, எவ்வளவோ நிகழ் வுகள் நடந்தேறின. ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட இரவை என்னால் மறக்க முடியாது. எனக்கும் அது தனிப்பட்ட பாதிப்பை ஏற்படுத் தியது. கலைஞரோடு இருந்தேன், கலைஞரோடு உரை யாடுகிறேன். கலைஞரோடு உறவாடுகிறேன், அவரோடு மேடையில் பேசுகிறேன் என்ற ஒரே காரணத்திற்காக என் வீடு எரிக்கப்பட்டது. என் கார் எரிக்கப்பட்டது, வீடு எரிந்து முடிந்தது. கார் எரிந்துவிட்டது. நல்லவேளையாக என் காரில் அப்போது பெட்ரோல் டேங்க்கை நிரப்பக்கூடிய வசதி எனக்கு இல்லை! இருந்திருந்தால் அந்த டேங்க் வெடித்திருந்தால் நான் உயிரோடு கீழே வந்திருக்க முடியாது. எரிக்கப்பட்ட வீட்டை விட்டு வெளியே வருகிறேன். பக்கத்தில் பிராமணர் வீடு, மனை வியை, பிள்ளைகளை அங்கே தஞ்சம் கொடுத்துவிட்டு அங்கே உட்கார்ந்து இருக்கிறேன். ஆச் சரியம், சொன்னால் நம்ப மாட் டீர்கள். அந்த வீட்டுக்குச் சொந் தக்காரர், `சார் உங்களுக்கு போன் என்று சொல்கிறார். எனக்கா, நான் இங்கே வந்தது உங்களுக்கு மட்டும்தானே தெரியும் என்றேன். எப்படி என்று கேட்டு விட்டு போனை எடுத்தால் கலைஞர் பேசுகிறார்! `எப்படி இருக்கீங்க என்று கேட்டார் நான் நல்லாயிருக்கேன் அய்யா ; எங்களுக்கு ஆபத்து இல்லை என்றேன் ; கேள்விப்பட்டேன் என்றார். நான், அய்யா இந்தத் தொலைபேசி நம்பரை எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்; உங்க உதவியாளர் மூலமா என் உதவி யாளர் மூலமாகக் கண்டுபிடித் தேன் என்றார். நான், நீங்க எப்படி இருக்கிறீர்கள்,? நம் முடைய தோழர்கள் எப்படியிருக் கிறார்கள்? என்று கேட்டேன். கடைசியாகச் சொன்னார் அவர், `அதெல்லாம் சரி, முரசொலி எரியுது அதை நினைத்துதான் என் வயிறு எரியுது என்றார். அதைக் கேட்டவுடன் அதி காலையில் ஒரு லுங்கியைக் கட்டிக்கொண்டு நான் மட்டும் போனேன். டிரஸ்ட் புரத்திலிருந்து கோடம்பாக்கம் சென்று பாலத்தின் மேலே நின்று பார்த்தேன். என் னோடு மூன்று பேர் நிற்கிறார்கள். ஊரே மயான அமைதியாக இருக் கிறது. நான் நின்று பார்க்கிறேன். ஒரு புகை மண்டலம் சூழ்ந்து விட்டது. நான் ஆசையோடு படித்த முரசொலி, எங்கள் வாழ்வை நிர் மாணித்த முரசொலி, எங்களுக் குத் தமிழ் சொல்லிக் கொடுத்த முரசொலி, எங்களுக்கு இன மானம் சொல்லிக் கொடுத்த முரசொலி, கலைஞரின் மூத்த குழந்தை முரசொலி, எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், எரிந்த என் வீட்டை மறந்துவிட் டேன். இந்தச் சோகம் அந்தச் சோகத்தைவிடப் பெரியதாக இருக்கிறது. திரும்பிப் போய் கலைஞரிடத்திலே சொன்னேன், பார்த்தேன். நான் உள்ளே செல்லவில்லை. வெளியே இருந்து பார்த்துவிட்டு வந்தேன். என்னால் தாங்க முடியவில்லை என்று சொன்னேன். இலட்சியத்தில் உறுதி கொண்டவரை யாரும் அழிக்க முடியாது! ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன் நண்பர்களே! ஒரு இயக்கம், ஒருமனிதன், ஒரு தொழில் நிறுவனம் எதுவாக இருந்தாலும், லட்சியத்தில் உறுதிப் பாடு இருந்தால் எவனையும், எவனும் அழிக்க முடியாது. கிரேக்க நாட்டில் ஒரு தொன் மைப் பறவை உண்டு. பீனிக்ஸ் என்று பெயர். அந்தப் பறவையை எரிப்பார் களாம். அது சாம்பலாகி விடுமாம். சாம்பலிலிருந்து அது மீண்டும் கிளர்ந்தெழுந்து பறந்து வானத்தை அளாவுமாம். அந்தப் பறவைக்கு `பீனிக்ஸ் என்று பெயர். முரசொலியும் ஒரு `பீனிக்ஸ் பறவைதான். எரிக்கப்பட்டபிறகும் ஒரு புத்தம் புதிய உணர்வோடு வெளிவந்திருக்கிறது, வெளி வந்து கொண்டிருக்கிறது. முரசொலிக்கு இன்னும் நிறையக் கடமைகள் இருக்கின் றன. செயல்தலைவர் ஸ்டாலின் அவர்களுடைய மேற்பார்வையின் கீழ், அவருடைய வழிகாட்டுதலின் பேரிலும் ஒரு அழகான வடிவத் தோடு புத்தம், புதிய கருத்தோடு வெளிவந்து கொண்டிருக்கிறது. நீங்கள் (தளபதி மு.க.ஸ்டாலின்) கலைஞரின் மகனாக மட்டும் இருந் தீர்கள். இப்போது எங்களில் ஒருவனாக நீங்கள் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். உங்க ளுக்கு என் வாழ்த் துக்கள். ஒரு தலைவனுக்கான குணம் என்பது என மேல்நாட்டில் சொல் லுவார்கள்; ஒரு சிங்கத்தின் இருதயம் வேண்டும், யானையின் நினைவாற்றல் வேண்டும், கொக் கின் பொறுமை வேண்டும், ஒட்ட கத்தின் உறுதி வேண்டும். இந்த நான்கும் இருந்தால் அவன் தலை வனாகலாம் என்று இந்த நான் கின் அடையாளங்கள் பொருந்திய ஒரு தலைவராக செயல் தலைவர் ஸ்டாலின் திகழ்கிறார். உங் களு