தமிழ்நாட்டை பாலைவனமாக்குவதா?

சென்னை, மார்ச் 12 - ``விவசாயத்தை முற்றிலுமாக அழிக் கும் வகையில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து தமிழ்நாட்டை பாலைவனமாக்குவதா என தி.மு.கழகச் செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டா லின் அவர்கள் கண்டனம் தெரிவித் துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், கழகச் செயல் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு;- தமிழ்நாட்டின் விவசாயப் பெருங்குடி மக்கள் - குறிப்பாக காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மத்திய அரசிடமிருந்து காவிரி மேலாண்மை வாரியத்திற்கான அறிவிப்பு எப்போது வரும் என இன்னமும் எஞ்சியிருக்கும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். காவிரி விவகாரத்தில் - ஆக்கபூர்வ நடவடிக்கைக்கு தி.மு.க. ஆதரவு! கர்நாடக சட்டமன்றத் தேர்தலை, பா.ஜ.க. கண்வைத்துக் காத்திருக்கிறது என்பதற்காக, உச்சநீதிமன்ற தீர்ப்பைக்கூட மதிக்காமல், நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிட்டாலும் பரவாயில்லை என்று, காவிரி மேலாண்மை வாரியம் உருவாக்கு வதை வேண்டுமென்றே காலந்தாழ்த்தியும், புதிய திட்டம் என்ற பெயரில் தீர்ப்பைத் திசை திருப்பியும் தமிழ்நாட்டு மக்களை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. நடுவர்மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின் படியும், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பின் படியும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் வகையில் மாநில அரசு திட மாகச் செயல்பட வேண்டும் என்றும், எக்கார ணம் கொண்டும், சொந்த நலன்களுக்காக வும் சுய லாப வேட்டைக்காகவும் மாநில ஆட்சியாளர்கள் மத்திய அரசின் மாற்றாந் தாய் போக்குக்கு பணிந்து போய்விடக் கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், காவிரி விவகாரத்தில் மாநில அரசு மேற்கொள்ளும் ஆக்கப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தி.மு. கழகம் முழுமையான ஆதரவு வழங்கும் என்பதையும் தெரிவித்துள்ளேன். சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை அவசர மாகக் கூட்டி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள் ளேன். தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சினை யான காவிரி விவகாரத்தில் தொடர்ந்து வஞ்சகம் செய்து வரும் மத்திய அரசு, இப் போது மேலும் ஒரு பயங்கரத் தாக்குதலை பகிரங்கமாக நடத்த முனைந்துள்ளது. மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராகத் தமிழகத்தின் நெடுவாசல், கதிராமங்கலம் மக்கள் சற்றே னும் அயராமல் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதியான உத்தரவாதம் எதுவும் வழங்கப் படாமல், புதிதாக ஹைட்ரோ கார்பன் எடுப்ப தற்கு காவிரிப் படுகை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் மத்திய அரசு அனுமதி அளிக்க முன்வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி யுள்ளது. பாதிக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்பதில் உறுதி! மீத்தேன் திட்டம் தொடர்பாக, தி.மு. கழகம் தனது நிலையைத் தொடர்ந்து தெளி வுபடுத்தி வருகிறது. ஆய்வுப் பணிக்காக மட்டுமே தி.மு.கழக அரசில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது என்பதையும், எக்காரணம் கொண்டும் விவசாயிகளின் நலன்கள் மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக் கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்பதை அன்று முதல் இன்று வரை உறுதியாகச் சொல்லி வருவதுடன், போராட்டக் களத்தில் இரவும் பகலும் ஈடுபட்டிருக்கும் மக்களையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இந்நிலையில்தான் மீத்தேன், ஷேல்கேஸ் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் திட்டங் களுக்கு ஹெல்ப் (ழநுடுஞ- ழலனசடிஉயசடி நுஒயீடடிசயவடி யனே டுஉநஉபே ஞடிடஉல) என்ற ஒற்றை உரிமம் வழங்கு வதற் கான அனுமதியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி, எண்ணெய்க் கிணறு கள் தோண்டத் தேவைப் படும் இடங்களை மத்திய அரசு நிறுவனம் ஆய்வு செய்து கண்டறி வதற்குப் பதில், தனியார் நிறுவனங்களே அத னைத் தேர்ந்தெடுக்க, மத்தியில் ஆட்சி செய் யும் தனியார் நிறு வனங் களைத் தத்தெடுத் துள்ள நரேந்திர மோடி தலைமை யிலான மத்திய அரசு, அனுமதி அளித்துள்ளது. புதிய திருத்தத்தால் விபரீத விளைவுகள்! இதற்கு முன்பு, கச்சா எண்ணெய், மீத்தேன், ஷேல்ஆயில் மற்றும் காஸ் எடுக்க தனித்தனியாக லைசென்ஸ் பெற வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இருந்தன. தற்போது அவை நீக்கப்பட்டு. ஹெல் இ.எல்.பி.-ஓ.ஏ.எல்.பி. (டீஹடுஞ-டீயீந ஹஉசநயபந டுஉநளேபே ஞடிடஉல) என்ற கொள் கைப்படி ஒரே உரிமம் பெற்றாலே போதும், அதைவைத்து எல்லாவித ஹைட்ரோ கார்பன்களையும் எடுக்க முடியும் என்ற வகையில் இந்த புதிய திருத்தத்தில் விபரீத மான வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தமிழ் நாளேடு களும், ஆங்கில நாளேடு களும் விரிவாக சுட்டிக் காட்டியுள்ளன. இந்தியா முழுவதும் ஆய்வுப் பணிகளை மேற் கொள்ள சர்வதேச டெண்டர், மத்திய அரசின் ஹைட்ரோ கார் பன் இயக்குநரகம் மூல மாக கடந்த ஜனவரி 19ம் தேதி வெளியிடப்பட்டது. 100 சதவீதம் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் உள்பட உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங் கள் வரும் ஏப்ரல் 3ம் தேதிக்குள் விண்ணப் பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் நிறுவனங் களுக்கு வருவாய்ப் பங்கீடு அடிப்படையில் ஆய்வு மற்றும் எண்ணெய், எரிவாயு உற்பத்திப் பணிகளைத் தொடங்க வருகிற ஜூன் மாதம் அனுமதி அளிக்கப் படும். இதில் இமயமலை, கங்கை, காவிரி, கோதாவரி, தாமோதர், காம்பே, கட்ச் வடிநில பகுதிகள் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளி லும் ஹைட்ரோ கார்பன் எடுக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 24 கிணறுகள் அமைக்க நடவடிக்கை! இதில் தமிழ்நாட்டில் மரக்காணம் முதல் கன்னியாகுமரி வரை 2,40,000 சதுர கிலோ மீட்டர் பரப்பள விலான நிலம் மற்றும் கடல் பகுதிகள் காவிரி வடிநில பகுதியாக அறிவிக்கப்பட்டு, நிலத்தடி எரி பாருள் வள இருப்பு மண்டலமாக அடையாளம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு நிலப்பகுதி, 2 கடல் பகுதிகள் என புதிய பகுதி களில் முதல்கட்ட மாக 4,099 சதுர கி.மீ. பரப்பளவில் 4 கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி, கடலூர் மாவட்டம் தியாகவள்ளி முதல் நாகப்பட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் வரையிலான 731 சதுர கி.மீ. நிலப் பகுதிக்குள் 10 கிணறுகள், புதுச்சேரி அருகே மரக்காணம் முதல் கடலூர் வரை 1,794 சதுர கி.மீ. கடல் பகுதியில் 4 கிணறுகள், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை தொடங்கி நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண் ணியை அடுத்த புஷ்பவனம் வரை 2,574 சதுர கி.மீ. கடல் பகுதியில் 10 கிணறுகள் என மொத்தம் 24 கிணறுகள் அமைக் கப்பட உள்ளன. காவிரி டெல்டா பகுதியை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயத்தைப் பாதுகாக்க வேண் டும் என தி.மு.கழகமும் தமிழ்நாட் டில் உள்ள பிற அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்பு களும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலை யில், அதற்கு நேர்மாறாக, விவசா யத்தை முற்றிலும் அழித்து விவ சாயப் பெருமக்களை நடுத் தெரு வில் நிறுத்தும் வகையில், ஹைட் ரோகார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிப்பது, தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கி பாழ்படுத்த நினைக்கும் பயங்கரமாகும். எதிர்மறைப் போக்கை கைவிட அழுத்தம் தருக! தமிழ்நாட்டையும், தமிழக விவ சாயிகளையும் வாட்டி வதைக்கும் இந்த எதிர்மறைப் போக்கை மத்திய அரசு உடனே கைவிடுமாறு மாநில அரசு அழுத்தம் தரவேண்டும். ஹெல்ப் என்ற ஆங்கிலச் சொல் லுக்கு உதவி என்று பெயர். ஆனால், மத்திய அரசு உதவி செய்யாவிட்டா லும் பரவாயில்லை, ஹெல்ப் என்ற திட்டத்தின் மூலம் உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும்; நன்மை செய்யா விடினும் தீமை செய்யக்கூடாது. தொடர்ந்து வலிமையாக எழுந்துவரும் எதிர்கு ரலுக்குச் செவிமடுத்து, காவிரிப் படுகை விவசாயிகளையும் தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த வேளாண் நலனையும் காக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட் டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என வலி யுறுத்துகிறேன். தமிழ்நாட்டு மக்களை மீண்டும் மீண்டும் போராட்டக் களத்திற்கு மத்திய அரசு அழைக்க வேண்டாம்! அவர்களது பொறுமையைச் சோதித் துப் பார்த்திட எண்ண வேண்டாம்! இவ்வாறு கழகச் செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.