கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை!

சென்னை, மார்ச்.13- காவேரி பிரச்சினையில் தி.மு.க. மீது பழி போடுவதை நிறுத்தி விட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவேரி மேலாண்மை வாரியத்தை அமைப் பதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லையென்றால் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு மாநில உரிமைக்காக தனது அமைச்சர் களை மத்திய அரசிலிருந்து ராஜினாமா செய்ய வைத்ததைப் போல முதல்வர் எடப்பாடி பழனிச் சாமியும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்று கழக முதன்மைச் செயலாளர் - சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் அவர்கள் விடுத் துள்ள அறிக்கையில் வலியுறுத்தி யுள்ளார். இது குறித்து கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :- காவேரி பிரச்சினையில் தி.மு.க. எதையும் செய்யவில்லை. மத்தியில் காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி யிலும், மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி இருந்த போதும் அதைப் பயன் படுத்தி காவேரி விவகாரத்தில் தி.மு.க. தீர்வு கண்டிருக்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய தினம் கோவை விமான நிலையத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறார். நான் முதலமைச்சரை கேட்டுக் கொள்வதெல்லாம் தயவு செய்து காவிரி பிரச்சினை குறித்த கோப்பு களை மட்டுமல்ல - தற்போது வெளி வந்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பை யும் நன்றாக படித்து முதலில் காவிரி பிரச்சினையின் வரலாற்றை முழு மையாக தெரிந்து கொண்டு பிறகு தி.மு.க. மீது பொய் குற்றச்சாட்டு சுமத்த முன்வர வேண்டும் என்பதுதான். தி.மு.க.வின் சாதனைகளை மறைக்க முயலவேண்டாம்! காவிரி நடுவர் மன்றம், இடைக் கால தீர்ப்பு பெற அந்த நடுவர் மன்றத்திற்கு அதிகாரம், அந்த இடைக்காலத் தீர்ப்பின்படி காவிரி நதி நீர் ஆணையம், இறுதி தீர்ப்பு - இப்படி அனைத்துமே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், குறிப்பாக தலைவர் கலைஞர் அவர் கள் முதல்வராக இருந்த போது நிகழ்த்திய சாதனை கள். ஆகவே இலைச் சோற்றில் முழுப் பூசணிக் காயை மறைப்பது போல் தி.மு.க.வின் காவிரி சாத னைகளை மறைக்க முதலமைச்சர் முனைய வேண்டாம். காவிரி இறுதி தீர்ப்பு 5.2.2007 அன்று வெளிவந்தது. அந்த தீர்ப்பு தமிழகத்திற்கு பாதகமான தீர்ப்பு என்று வாதிட்டவர் மறைந்த அம்மையார் ஜெயலலிதா. இந்த இறுதி தீர்ப்பு குறித்து சில விளக்கங் களைக் கேட்டு கர்நாடகா மாநிலம் நடுவர் மன்றத்தில் மாநிலங் களுக்கு இடையிலான நதி நீர் தாவா சட்டம் விதி 5(3)-ன்கீழ் மனுக்கள் தாக்கல் செய்தது. முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழகத்தில் கூட்டினார். ஒரு முறை அல்ல. 19.2.2007 மற்றும் 15.4.2007 ஆகிய தேதிகளில் கூட்டி ஆலோசித்தார். அந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க.வின் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்த தற்போதைய துணை முதலமைச்சர் திரு ஓ.பன்னீர் செல்வமும் கலந்து கொண்டார். 15.4.2007 அன்று கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் காவேரி நடுவர் மன்றம் தமிழகத் திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய தாக கர்நாடக அரசு தவறாக கற்பனை செய்து, அதை உச்சநீதி மன்றம் சென்று தடை செய்வதற்கும், அரசிதழில் பதிவு செய்வதை தடுப் பதற்கும் முயற்சி மேற்கொண்டுள் ளது என்று குறிப்பிடப்பட்டு, முதலில் நடுவர் மன்றத்தில் நமது உரிமைகளை, தேவைகளை விளக் கிக்கோரும் மனு தாக்கல் செய்வது, அதன் பிறகு தேவைப்பட்டால் நாமும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வது என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. எடப்பாடிக்கு என்ன நிர்ப்பந்தமோ தெரியவில்லை! ஆகவே அ.தி.மு.க.வின் கருத் தையும் ஏற்றுத்தான் அன்றைக்கு இறுதி தீர்ப்பு குறித்து நடுவர் மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. அனைத்து மாநிலங்களும் மேல் முறையீடு செய்திருந்ததால்தான் அரசிதழில் தீர்ப்பை வெளியிட இயல வில்லை. இறுதி தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டிருந்த விவரத்தை 10.3.2018ஆம் தேதி வெளியிட்ட தனது அறிக்கையில் ஒப்புக் கொண்டிருக்கும் முதலமைச் சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன நிர்பந்தமோ தெரியவில்லை, திடீ ரென்று தமிழக நலன் கருதி காவிரி பிரச்சினையில் அரசுக்கு முழு ஒத்து ழைப்பு தரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பாய்ந்து பிராண்டியி ருக்கிறார். ஒரு வேளை டெல்லி எஜமானர் கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் செய்யப் போகும் துரோகத்தை மறைக்க இப்போதே முதலமைச்சர் தி.மு.க. மீது பழி போட்டு திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாரோ என்ற சந் தேகமே எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிட தாமதமானதற்கு உச்சநீதி மன்றத்தில் அனைத்து மாநிலங் களும் தாக்கல் செய்த மேல் முறை யீட்டு மனுக்கள்தான் காரணமே தவிர, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி காரணமல்ல!இன்றைய தேவை என்ன? இறுதி தீர்ப்பையும் கடந்து, அந்த தீர்ப்பை கடந்த 16.2.2018 அன்று சில மாற்றங் களுடன் உச்சநீதிமன்றம் உறுதியும் செய்து விட்டது. இனி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க எவ்வித தடையும் இல்லை. உச்சநீதி மன்றத் தீர்ப்பின் மீது பேச்சு வார்த்தை நடத்த வேண்டிய தேவையு மில்லை. காவேரி மேலாண்மை வாரியம் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து காவேரி நடுவர் மன்றம் சுட்டிக் காட்டியுள்ள விவரங்களை உச்சநீதி மன்றமே தனது தீர்ப்பில் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறது. எங்கள் தளபதி அஞ்சியது போல மத்திய அரசு வஞ்சித்து வருகிறது! அதனால் தான் இனியும் காலதாமதம் ஆகிவிடக் கூடாது என்று தொடர்ந்து எங்கள் தளபதி அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வலியுறுத்தி வருகிறார். காவேரி பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் என்று முதலமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்தை அறிவித்ததும் தி.மு.க. அறிவித்த கூட்டத்தை ரத்து செய் தார் எங்கள் தளபதி. சட்டமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் போடுவோம் அ.தி.மு.க. எம்.பி.க் களுடன் சேர்ந்து தி.மு.க. எம்.பி.க் களும் ராஜினாமா செய்யத் தயார் என்று ஒத்துழைப்பு நல்கினார். கர்நாடக தேர்தலை மனதில் வைத்து தமிழகத்தை காவேரி பிரச்சினையில் மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சித்து விடப் போகிறது என்று எச்சரித்தார். எங்கள் தளபதி அஞ்சியது போலவே இப்போது மத்திய பா.ஜ.க. அரசு காவேரி பிரச்சி னையில் தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் குழப்பமான நிலைப்பாடுகள்! உச்சநீதிமன்றம் விதித்த ஆறு வார கெடுவில் நான்கு வாரங்கள் முடியப் போகிறது. ஆலோசனை, ஆலோசனை என்று இழுத் தடித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு அமைச்சரை விட்டும், செயலாளரை விட்டும் குழப்பமான நிலைப்பாடு களை பேட்டி என்ற பெயரில் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அது மட்டுமின்றி மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரியே உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சீராய்வு மனு செய்ய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியிருக் கிறார் என்று இன்றைய தினத்தந்தி நாளிதடிழ் தலையங்கத்தில் வெளி வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியாக இருக்கிறது. தமிழக விவசாயிகளுக்கு எடப்பாடி மாபெரும் துரோகம்! இதைத்தான் சில நாட்களுக்கு முன்பு டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழில் சீராய்வு செய்யலாம் என்று நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங் பேட்டியளித்து அதை எங்கள் தளபதியும் கண்டித் திருந்தார். மத்திய அமைச்சர்கள், மத்திய நீர்வளத்துறை செயலாளர் எல்லாம் கர்நாடக தேர்தல் லாபத் திற்காக செயல்பட்டுக் கொண்டி ருக்கும் போது அந்த மத்திய பா.ஜ.க. அரசை காப்பாற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தி.மு.க. மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தி யிருப்பது தமிழக விவசாயிகளுக்கு செய்யும் மாபெரும் துரோகம் என்று தெரிவித்துக் கொள்ள விரும்பு கிறேன். ஆகவே உச்சநீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது காவேரி மேலாண்மை வாரியம்தான். அதுவும் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் குறிப் பிட்டுள்ளது போல் பக்ரா நங்கல் மேலாண்மை வாரியம் போன்றது தான். இந்நிலையில் கஜானா வை கொள்ளையடிக்கும் ஒரு மைனாரிட்டி ஆட்சியை தமிழகத்தில் அனு மதித்துக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசை திருப்திபடுத்தவும், தமிழகத்தில் காவேரி பிரச்சினையில் உருவாகியுள்ள ஒற்றுமையை சீர்குலைக்கவும் தி.மு.க. மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவேரி மேலாண்மை வாரியத்தை அமைப் பதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்படி முடியவில்லையென்றால் அண்டை மாநிலமான ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு மாநில உரிமைக்காக போராடி தனது அமைச்சர்களை மத்திய அரசிலி ருந்து ராஜினாமா செய்ய வைத் திருப்பது போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரையும் ராஜி னாமா செய்ய வைக்க வேண்டும் என்றும் எங்கள் தளபதியின் கட்டளையை ஏற்று தி.மு.க. எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு துரைமுருகன் அவர்கள் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.