சிறையில் இருப்போரை விடுதலை செய்திடுக!கழகச்

சென்னை, மார்ச் 13- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண் டிக்கப்பட்டவர்களை தாம் மன்னித்து விட்டதாக அவரது புதல்வரும், காங்கிரஸ் கட்சி யின் தலைவரு மான ராகுல் காந்தியின் மனித நேயமிக்க கருத்தை கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரவேற் றுள்ளதுடன், பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை இத்தருணத் தில் மத்திய, மாநில அரசுகள் விடுதலை செய்ய முன்வர வேண்டும் எனவும் வலி யுறுத்தியுள்ளார். சிங்கப்பூர் சென்றிருந்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி அங்கு மாணவர் களுடன் உரையாடுகையில், தாமும், தமது தங்கையும் தங்களது தந்தை ராஜீவ் காந்தி கொலையில் சிறைப்பட்டுள்ள வர்களை மன்னித்து விட்டோம் எனக் கூறியுள்ளார். ராகுல் காந்தியின் இந்தக் கருத்தை கழகச் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மனமுவந்து வரவேற்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (12.3.2018) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்ட வர்களை தானும், தனது சகோ தரியும் முழுமையாக மன்னித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்திருக்கும் மனித நேயமிக்க கருத்தை பெரிதும் வரவேற்கிறேன். இதனை வரவேற்கும் அதே வேளையில், குற்றம் சுமத்தப்பட்டு 26 வருடத்திற்கும் மேலாக சிறை யிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்டோரை காலந்தாழ்த்தாமல் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலி யுறுத்துகிறேன். இவ்வாறு கழகச் செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.