ஆலந்தூர் தொகுதியின் பல்வேறு கோரிக்கைகளை நி

சென்னை, மார்ச் 13- சென்னை மாநக ராட்சி ஆணையரை ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன் பரசன் நேரில் சந்தித்து ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியின் பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி மனு வழங்கினார். ஆலந்தூர் பகுதி செயலாளர்கள் பி. குணாளன், என்.சந்திரன் ஆகியோர் இச்சந்திப்பின் போது உடன் இருந்தனர். ஆலந்தூர் தொகுதி யின் சட்டமன்ற உறுப் பினரும், முன்னாள் அமைச்சருமான தா.மோ. அன்பரசன் சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் டி.கார்த்தி கேயனை நேரில் சந் தித்து ஆலந்தூர் மக்களின் 6 மிக முக்கிய கோரிக்கை களை விரைவில் நிறை வேற்றிட வலியுறுத்தி மனுக்களை வழங்கினார். ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசன் மாநகராட்சி ஆணையரி டம் வழங்கியுள்ள மனுக் களின் விவரம் வருமாறு:- மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மழைக்காலங்களில் வெளியேறும் மழை வெள்ள நீர், சென்னை மாநகராட்சி 12-வது மண் டலம் - 162-வது வட்டத் தில் அடங்கிய கண்ணன் காலனியில் தேங்குவதால் மழை காலங்களில் பொது மக்கள் பெரிதும் பாதிப்பு அடைவதை போக்கிட 162-வது வட்டம் கண் ணன் காலனி 3-வது தெரு வில் உள்ள ரயில்வே கிராசிங்கில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்க வேண்டியும், மேலும் 160-வது வட்டம் ஜேம்ஸ் தெரு - வேளச் சேரி சாலை சந்திப்பில் உள்ள ரயில்வே கிராசிங் கில் தூர்ந்து போன மழை நீர் வடிகால் கால்வாயை சீரமைக்க கோரியும் மனு வழங்கினார். ஆலந்தூர் தொகுதி, 160வது வட்டம், சவுரி தெருவில் உள்ள அரசு காந்தி மகப்பேறு மருத் துவமனைக்கு மருத்துவ அவசர ஊர்தி (ஆம்பு லன்ஸ்) வசதி ஏற்படுத்தி தர கோரியும், மேலும் காந்தி மருத்துவ மனையின் பழைய கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டித் தர வலியுறுத்தியும் மனு வழங்கினார். மேலும் 160வது வட்டம், புது தெருவில் முன்பு நீதிமன்றம் இருந்த இடத்தில்மாநகராட்சி சார்பில் சமுதாயக் நலக் கூடம் அமைத்து தர கோரியும் அந்த கட்டிடம் கட்ட சட்டமன்ற உறுப் பினர் தொகுதி மேம் பாட்டு நிதி திட்டத்தி லும், மாநிலங்களவை உறுப் பினர் ஆர்.எஸ். பாரதி தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத் திலும் மொத்த மதிப்பீட் டில் 50 சதவிகிதம் நிதி ஒதுக்க தயாராக உள்ள தாகவும் மீதம் உள்ள தொகை யினை மாநக ராட்சி நிதியில் இருந்து ஒதுக்கி சமுதாய நலக் கூடத்தை கட்டித்தந்து உதவிட வேண்டும் என்று மாநக ராட்சி ஆணை யரிடம் மனு வழங்கி தா.மோ. அன்பரசன் வலியுறுத் தினார். சென்னை மாநக ராட்சி - மண்டலம்-12-ல் பல இடங்களில் புதை வழி மின்சார இணைப்பு (ருசூனுநுசு ழுசுடீருசூனு ஊஹக்ஷடுநு ஊடீசூசூநுஊகூஐடீசூ) வழங்கப் படாமல் உயர் மின் கம்பங்கள் வழியாக மின் இணைப்பு வழங்கப் பட்டு வருகிறது. மேலும் பல இடங்களில் எல்.இ.டி. மின் விளக்கு பொருத்தப் படாமல் பழைய சோடி யம் மின் விளக்கு மட்டுமே பயன்படுத்தப் பட்டு வரு கிறது. இதனால் பொது மக்கள் மிகவும் சிரமப் பட்டு வருகின்றனர். பொது மக்களின் சிரமத்தை போக்கிட விடுபட்ட இடங்களில் புதை வழி மின்சார இணைப்பும், எல்.இ.டி. மின் விளக்கும் அமைக்க கோரி யும் மனு வழங்கினார். மேலும் 156-வது வட்டம் முகலிவாக்கம் மற்றும் 157-வது வட்டம் மணப்பாக்கம் பகுதிகள் சென்னை மாநகராட்சி யுடன் இணைக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் பல இடங்களில் மழைநீர் வடி கால் கால்வாய் பணி களும் துவங்கப்படாமல் உள்ளது என்றும் விடு பட்ட இடங்களில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து செய்து தர கோரியும், 157-வது வட் டம், மணப்பாக்கம் சுடு காட்டிற்கு ஒதுக்கப்பட் டுள்ள இடத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து தர கோரியும் தா.மோ. அன்பர சன் மனு வழங்கினார். ஆலந்தூர் வடக்கு பகுதி தி.மு.க. செயலாள ரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான பி.குணாளன், ஆலந்தூர் தெற்கு பகுதி தி.மு.க. செயலாளரும் முன்னாள் நகர மன்ற துணைத் தலை வருமான என்.சந்திரன் ஆகியோர் இச்சந்திப்பின் போது உடன் இருந்தனர்.