தினகரன் நாளேடு தலையங்கம்!

பசுமை மிக்க விளைநிலங்களையும், ஆர்ப் பரிக்கும் கடலையும் அசுத்தப்படுத்த மத்திய அரசின் புதிய வழிமுறையாக ஹைட்ரோ கார்பன் திட்டம் காணப்படுகிறது. பிற மாநிலங்கள் புறம் தள்ளுகிற பல திட்டங்களை தமிழகத்தில் தொடர்ச்சியாக அரங் கேற்றுவது சுற்றுப்புற சூழலுக்கு நிச்சயம் கேடு விளைவிக்கும். இந்தியாவின் எரிபொருள் தேவை 80 சதவீதம் இறக்குமதியை சார்ந்தே உள்ளது. இதை தவிர்க்க மத்திய அரசு சமீபகாலமாக கச்சா எண்ணெய், மீத் தேன், ஹைட்ரோ கார்பன் உற்பத்தி யில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கி யுள்ளது. வரும் 2022ம் ஆண்டுக்குள் உள்நாட்டு எரிபொருள் உற்பத்தியை உயர்த்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமாகும். இதற்காக எரிசக்தி துறையில் தனியாரையும் களம் இறக்கி எண்ணெய் வயல்களை உருவாக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மத்திய அரசின் எண்ணெய் தயா ரிப்பு திட்டங்களுக்கு இந்தியாவில் இலக்காகும் முதல் மாநிலம் தமிழகம் தான். புதுக்கோட்டையில் நெடுவாசல் போராட்டம், திருவாரூரில் கதிராமங் கலம் போராட்டம் போன்றவை இதற்கு சான்று களாகும். இருப்பினும் தமிழகத்தின் விவசாய நிலங்களை மத்திய அரசு விடுவதாக இல்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் 24 கிணறுகளை அமைத்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் புதிய திட்டத் திற்கு தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கி யுள்ளது. கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலம் மற்றும் கடலோர பகுதிகள் இப்போதைய திட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளன. தனியார் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் இம்முடிவு சுற்றுப்புற ஆர்வலர் களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புதிய திட்டத்தால் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் அஞ்சு கின்றனர். காவிரி டெல்டா பகுதிகளில் ஏற்கனவே வேளாண்மை மெல்ல மெல்ல அழியும் தருவாயில், விளை நிலங்கள் வெறுமனே கிடக் கின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் போக்கு காட்டும் மத்திய அரசு, காவிரி படுகையில் எண்ணெய் கிணறுகளை அமைப்பதில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறது. பசுமை போர்த்திய டெல்டா பகுதிகளை ஹைட்ரோ கார்பன் உற் பத்தி ஸ்தலமாக மாற்ற மறைமுக முயற் சிகள் மேற்கொள்ளப்படு கின்றன. இந்தியாவில் பிற மாநிலங்களில் விரட்டியடிக்கப்பட்ட அணுமின் நிலை யங்கள், தொழிற்சாலைகள், நியூட் ரினோ ஆய்வு மையம் உள்ளிட்ட பல் வேறு திட்டங்கள் தமிழகத்தின் தலை யில் திணிக்கப்பட்டு வருகின்றன. இப்போதைய ஹைட்ரோ கார்பன் திட்டமும் தமிழகத்தின் பண்பட்ட நிலத்தை புண்ணாக்கும் புதிய திட்ட மாகும். இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தேர்வு செய்யப்பட்ட 65 இடங்களில் 24 இடங்கள் தமிழகத்தில் இருப்பது அதிர்ச்சியளிப்ப தாகும். இத்திட்டத்தின் உண்மை நிலையை விளக்கி, விளைநிலங்களையும், நிலத்தடி நீர் மட்டத்தையும் பாதுகாப்பது மத்திய, மாநில அரசு களின் கடமை யாகும். விவசாயிகள், இளைஞர்கள், சமூக ஆர்வலர் களின் ஒருங்கிணைந்த போராட்டங் களை மீண்டும் எதிர்கொள்ள வேண்டிய சூழலில் தமிழக ஆட்சி யாளர்கள் உள்ளனர். நன்றி : `தினகரன் 12.3.2018