தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!

புதுடெல்லி, மார்ச் 14 ஐக்கிய முற்போக்குக் கூட்ட ணித் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் - மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதற் காக நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரள வேண்டும என்பதை வலி யுறுத்துவதற்காக, புதுடெல்லியில் தமது இல்லத்தில் நேற்றிரவு விருந்து அளித்தார். இந்த விருந் தில் தி.மு.க. சார்பில் மாநிலங் களவை கழகக் குழுத் தலைவர் கனிமொழி கலந்து கொண்டார். புதுடெல்லியில் ஜான்பாத் பகுதி யில் உள்ள சோனியா காந்தி இல்லத் தில் இந்த விருந்து நடைபெற்றது. இதில் முக்கிய 20 எதிர்க்கட்சிகளின் சார்பில் தலைவர்கள் பங்கேற்றனர். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க. ஆட்சியை மத் தியில் இருந்து அகற்ற, பொதுவான கருத்தொற்றுமை ஏற்படுத்தவும், நாட்டில் உள்ள அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல் படவும் இந்த விருந்தின்போது வலியு றுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தியுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அகமது பட்டீல், மல்லிகார்ஜுன கார்கே, குலாப் நபி ஆசாத், அந்தோணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய காங்கிரஸ். கட்சித் தலை வர் சரத்பவார், பகுஜன் சமாஜ்வாதி கட் சிச் சார்பில் சதீஷ் மிஸ்ரா, ஜனதா தளம் (எஸ்) சார்பில் குபேந்தர் ரெட்டி உள்ளிட்டோர் எதிர் பாராமல் பங்கேற் றவர்களாகும். ராஷ்டீரிய ஜனதாதளம் சார்பில் தேஜேஸ்வி, அவரது சகோதரி மிசா பார்தி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சுதிப் பண்டியோபாத்யா, சமாஜ் வாதி சார்பில் ராம் கோபால் வர்மா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா தேசிய கருத்தரங்கக் கட்சி சார்பில் உமர் அப்துல்லா உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகளின் சார்பில் அதன் முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற னர். தி.மு.கழகத்தின் சார்பில் இந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத் தில் பங்கேற்ற நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் கனிமொழி இதுபற்றி, குறிப்பிடுகையில், அடுத்த நாடாளு மன்றத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க. வை ஆட்சியிலிருந்து அகற்றுவதற் காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி பொதுக் கருத்து ஏற்படுத்துவதன் அவசியம் குறித்தும் தற்கால அரசியல் நிலவரம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரி வித்தார். அரசியலுக்காக இந்த விருந்து ஏற்பாடு செய்யவில்லை என்றும், மாறாக எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து விவாதிக்கவே ஏற்பாடு செய் யப்பட்டதாக காங்கிரஸ் தொடர்பாளர் சூர் ஜேவாலா தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் நாடாளுமன் றத்தில் விவாதிக்க ஆளும் பா.ஜ. க அனுமதி வழங்காத நிலையில், நாட் டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து அவையில் எழுப்பிட எதிர்க் கட்சிகள் எந்த வகையில் ஒருங்கி ணைந்து செயல்படுவது பற்றியும் விவாதிக்கப் பட்டதாக அவர் தெரிவித்தார்.