பெட்ரோல், டீசல் விலை உயர்வு : வாய் மூடி மவுனியாக இருக்கும் குதிரைபேர அரசு மத்திய பா.ஜ.க. அரசின் தலையாட்டி பொம்மை!

சென்னை, அக். 12 - பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் வாய் மூடி மவுனியாக இருக்கும் குதிரை பேர அரசு, மத்திய பா.ஜ.க. அரசின் தலையாட்டிப் பொம்மை என்று கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கண்ட னம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், கழக செயல் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :- சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டு வருகின்ற சூழ்நிலையிலும், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தினமும் விலை நிர்ணயம் என்ற கொள்கையின் அடிப்படையில், பெட்ரோல் - டீசல் விலையை தினமும் உயர்த்தி மக்கள் மீது, குறிப்பாக அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் மீது தாங்கமுடியாத சுமையைத் தூக்கி வைத் துள்ளது. அலுவலகங்களுக்கு இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், நடுத்தர மக்கள், சிறு - குறு தொழிலில் ஈடுபட்டுள் ளோர் உள்பட அனைவரும் தாங்கமுடியாத துயரத்தைக் கடந்த மூன்றரை வருடங்களாக அனுபவித்து வருகிறார்கள். மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தும் போதெல்லாம் மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசும் அதற்குத் துணையாக, வாய் மூடி மவுனியாக இருப்பது மட்டுமின்றி, மத்திய அரசு திணிக் கும் சுமையை அப்படியே அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கு கைமாற்றி அனுப்பி விட்டு கை கழுவுகிறது. இது போன்றதொரு சூழ்நிலை உருவான போது, முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் குறைக்கும் பொருட்டு வரிகளைக் குறைத்தார். 2006ல் டீசல் விலை உயர்ந்த போது, டீசலுக் கான விற்பனை வரியை 25 சத வீதத்தி லிருந்து 23.43 சதவீதமாக குறைத்தார். பிறகு 2000ல் டீசல் விலையை மத்திய அரசு ஏற்றிய போது, டீசலுக்கு விதிக்கப்பட்ட 23.43 சதவீத வரியை 21.43 சதவீதமாக குறைத்தார். இப்படி இரு முறை டீசலுக்கு மட்டும் மொத்தம் 3.57 சதவீத வரியை குறைத்தார். இதுதவிர, 2011ல் பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்திய போது, பெட்ரோலுக் கான விற்பனை வரியை 3 சதவீதம் குறைத்தார். ஆக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரி 6.57 சதவீதம் குறைக்கப்பட்டு, பெட்ரோல் - டீசல் விலை உயர்வினால் பொது மக்கள் பாதிக்கப் படுவது தடுத்து நிறுத்தப்பட்டது. கடந்த காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செய்த போலவே, தற்போது குஜராத் மாநிலத்தில் பெட்ரோல் - டீசல் ஆகியவற்றின் மீதான வாட் வரி 4 சதவீதம் குறைக்கப்பட் டுள்ளது. அதேபோல், மஹாராஷ்டிரா மாநிலத் தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 2 ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு 1 ரூபாயும் வாட் வரி குறைக் கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பெட்ரோல் - டீசல் விலை உயர்வின் தாக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற மாநில அரசுகள் ஒவ்வொன்றும் இது போன்ற நடவடிக் கைகளை எடுக்கும்போது, பா.ஜ.க.வின் தலையாட்டி பொம்மையாக செயல்படும் குதிரை பேர அரசு மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுபற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதும், வாட் வரியை குறைத்து அதன் பயன்களை மக்களுக்கு அளிக்காமல் இருப்பதும், இங்குள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கோ, அமைச்சர்களுக்கோ தமிழக மக்கள் படும் துயரங்கள் பற்றி கவலையில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அதேபோல, கடுமையாக பாதிக்கப்பட் டுள்ள சிறு மற்றும் குறு தொழில்கள் பற்றியும் கூட இந்த மக்கள் விரோத அரசுக்கு அக்கறை யில்லை என்பது வேதனைக்குரியது. இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ 70.96 பைசாவும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ 60.04 பைசாவும் கொடுக்க முடி யாமல் தத்தளித் துக் கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இந்த குதிரை பேர அரசுக்கும் உண்டு என்பதை அவர்கள் உணர வேண்டும். ஆகவே, ஏற் கனவே இருந்த கழக அரசும், தற் போது குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநில அரசுகளும் எடுத் துள்ள நடவடிக்கை களை பின்பற்றி, தமிழகத்தில் பெட் ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க குதிரை பேர அரசு நடவடிக்கை எடுத்து, அவற்றின் மீதான வாட் வரியை உடனடி யாக குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.