பீகார் பள்ளி வினாத்தாள் கேள்வியால் சர்ச்சை!

பாட்னா, அக்.12 - பீகாரில் உள்ள பள்ளி களில் அக்டோபர் 5 ம் தேதி தேர்வு நடந்துள்ளது. இதற்காக மத்திய அரசின் சர்வ ஷிக்சா அபியான் திட் டத்தின் கீழும், பீகார் பள்ளி திட்ட கழகத்தின் கண்காணிப் பிலும் செயல்படும் அமைப் பால் வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டு, பீகாரில் உள்ள அனைத்து அரசு பள்ளி களுக்கும் அனுப்பப்பட் டுள்ளது. இதில், 7ம் வகுப்பு மாண வர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில், கீழ்வரும் 5 நாடுகளில் வசிக்கும் மக்களை எப்படி அழைப்பார்கள் என கேட்கப்பட்டு, சீனா, நேபாளம், இங்கிலாந்து, காஷ்மீர், இந்தியா என குறிப்பிடப்பட்டுள்ளது. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்பது போலவும், காஷ்மீர் தனி நாடு என கூறும் வகையிலும் கேட்கப்பட்டுள்ள இந்த கேள்வி புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.