தமிழகத்தில் நடமாடும் அஞ்சலகம் அறிமுகம்!

சென்னை, அக்.12 - தமிழக அஞ்சல் துறையில், முதன்முறை யாக, நடமாடும் அஞ் சலகம், சென்னையில் நேற்று முன்தினம், செயல் பாட்டுக்கு வந்துஉள்ளது. தேசிய அஞ்சல் வாரம், அக்., 9 - 14 வரை கொண் டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, அஞ்சல் தினமான நேற்று முன் தினம், தமிழக அஞ்சல் துறை சார்பில், நட மாடும் அஞ்சல் அலு வல கம் அறி முகம் செய் யப் பட்டு உள்ளது. இதை அறிமுகம் செய்து, தமிழக அஞ்சல் துறை தலைவர், சம்பத் பேசிய தாவது: அஞ்சல் துறையில் முதன்முதலாக, 1949ல், மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், நடமாடும் அஞ்சலகம் அறிமுகம் செய்யப்பட்டது. 1973ல், இந்தியாவில், 18 முக்கிய நகரங்களில், நடமாடும் அஞ்சலகம் செயல்பட்டது. 1996ல், இத்திட்டம் கைவிடப்பட்டது. தற் போது, மக்களின் தேவைக் கேற்ப, தமிழகத்தில், முதன்முதலாக,நடமாடும் அஞ்சலகம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த அலுவலகம் தென் சென்னை, பரங்கி மலையை மையமாக கொண்டு இயங்கும். தின மும், மதியம், 12:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை செயல்படும். அஞ் சல் துறையின் சேவை களான, தபால் தலை விற் பனை, விரைவு தபால், பதிவு தபால், மணி ஆர்டர் உள்ளிட்ட, பிற சேவை களை, மக்கள் பயன் படுத்தி கொள்ள லாம். மேலும், என் அஞ் சல் தலை என்ற திட்டமும், இந்த நடமாடும் அஞ்சல கத்தில் செயல்படுத்தப் படும். இந்த சேவையை, மக்கள் பயன்பாட்டிற்கேற்ப விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் சென்னை, மண்டல தபால் துறை தலைவர், ஆனந்த், தமிழக தபால், வணிக விரிவாக்கத் துறை தலைவர், வெங்கடேஷ் வரலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.