டெங்கு - தாக்கு... தாக்கு... தடையறத் தாக்கு...

தமிழகத்தின் தென் மாவட்டங்கள், ஏன் முதலமைச்சரின் மாவட்டத்திலும் இப்பொழுது டெங்கு கோரத்தாண்டவமாடுகிறது. தமிழகத்தை மிரட்டும் இரண்டு விஷயங்கள், ஒன்று, தமிழக அமைச்சர்களின் நரம்பில்லா நாக்கு. இரண்டு, டெங்கு. முதலாவதற்கு விரைவில் முடிவு வரும், வர வேண்டும். இரண்டாவதற்கு முதலில் சொன்னது நடந்தால்தான் விடிவு பிறக்கும். இதுவரை 120 பேருக்கு மேல் இறந்துள்ளார்கள், 10,000க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் என்று பேட்டி தருகிறார் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன். அதை இன்றைய நிலைமைக்கு நாம் ஐந்தால் பெருக்கிக் கொள்ள வேண்டும். நமக்கு நாமே தந்தவர் தி.மு.க. செயல் தலை வர் மாண்புமிகு தளபதியார். நம்மை நாமே எப்படி காத்துக் கொள்ள வேண்டும்? வாருங்கள், தெளிவு பெறுங்கள். டெங்கு என்றால் என்ன? அது ஒரு வகையான தொற்று நோய். டெங்கு என்ற ஆர்.என்.ஏ. வைரஸால் வருகிறது. ஏழு நாள் காய்ச்சல், எலும்பு முறிவு காய்ச்சல் என்ற காரணப் பெயர்களும் உண்டு. புரத மூலக்கூறு குருதிப்பாய வகைகள் (ஹவேபைநவே) (ளுநசடி வலநிள) சூளு1 னுநுசூஏ - 1 சூளு2ய 2 னுநுசூஏ - 2 சூளு3 னுநுசூஏ - 3 சூளு4ய 4 னுநுசூஏ - 4 சூளு5 எப்படிப் பரவுகிறது? பகல் நேரத்தில் கடிக்கும் ஏடிஸ் எகிப்தி (ஹநனளை ஹநபலயீவ) என்ற வகை கொசுவினால் பரவுகிறது. கால்களில் மஞ்சள் வரிகள் இருப்பதால் புலி கொசு (கூபைநச ஆடிளளூரவைடி) என் றும் அழைக்கப்படு கிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒரு வரைக் கடித்த கொசு பாதிப்பு இல்லாத மற் றொருவரை கடித்தால் பரவும். மனிதனிடமிருந்து மனிதனுக்கு நேரடியாகப் பரவுவது இல்லை. எனவே தண்ணீர், காற்று, எச்சில், இருமல் மற்றும் தொடுதல் மூலம் பரவாது. டெங்கு வைரஸ் அது தங்கி இருக்கும் கொசுவை பாதிப்பதில்லை. எந்த சீதோஷ்ண நிலையில் பரவுகிறது? கோடை மழைக் காலங்களில் பெய்யும் திடீர் மழை, டயர், தேங்காய் சிரட்டை போன்றவற்றில் தேங்குவதாலும், மூடாமல் நீண்ட நாட்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள குடிநீர் போன்றவற்றிலும் ஏடிஸ் கொசு முட்டைகள் செழித்து வளர்கின்றது. 300 நாட்கள் வரை அழியாமல் இருக்கும். கொசுவின் ஆயுட்காலம் 21 நாட்கள். உலர் வெப்ப வலய நாடுகளில் பெரும்பாலும் பரவுகிறது. அரசு சுகாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்து இருக்கும் நிலையில் தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடுகிறது. அறிகுறிகள் என்ன? அதிக காய்ச்சல், உடல் சோர்வு, எலும்பு மூட்டு வலி, உடல் வலி, அரிப்பு, உடலில் சிகப்பு புள்ளிகள் இந்த நோயின் பொது அறிகுறிகள். தொற்றிய நிலையில் கடும் இரத்த கசிவு (ஊசைஉரடயவடிசல ளுடிஉம) என்ற உயிரை மாய்க்கும் அறிகுறிகளும் வரலாம். நோய் தோன்றும் காலம்? சராசரியாக 3-7 நாட்களில் அறிகுறிகள் தோன் றும். உடல் சோர்வு நீங்க மேலும் ஒரு வாரம் ஆகலாம். கண்டுபிடிக்கும் முறை! ஐ. மருத்துவர் அனுமானம் (ஊடஉயட ழளைவடிசல நுஒயஅயேவடி) காய்ச்சலுடன் பின்வரும் அறிகுறிகளில் குறைந்த பட்சம் இரண்டு இருத்தல் வேண்டும். 1. வயிற்று வலி, 2. வாந்தி 3. கல்லீரல் வீக்கம் 4. சோர்வு 5. மூக்கு, வாயில் இரத்தப்போக்கு 6. தட்டணுக்கள் குறைபாடு (சராசரி அளவு 1.5 - 4லட்சம்) ஐஐ. மருத்துவ பரிசோதனை (ஐஎநளவபையவடிளே) 1. தட்டணுக்கள் எண்ணிக்கை 2. டெங்கு கார்டு பரிசோதனை 3. நுடுஐளுஹ பரிசோதனை 4. ஞஊசு பரிசோதனை சிகிச்சை என்னென்ன? தனி சிகிச்சை எதுவுமில்லை, தற்காப்பு முயற் சியே சிறந்தது. பொதுவான காய்ச்சலுக்கு தரக் கூடிய மருந்துகள், மற்றும் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இரத் தத்தட்டு எண் ணிக்கையைப் பொறுத்து இரத் தம் செலுத்துதல், அல்லது இரத்தத் தட்டணுக்கள் செலுத்த வேண் டும். தடுப்பூசி உண்டா? பரிசோதனை முயற்சியில் உள்ளது. டெல்லி யைச் சேர்ந்த டாக்டர்.நவீன் கன்னா டெங்குவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளார். இன்னும் பரிசோ தனை முயற்சிக்கு வரவில்லை. பிரான்ஸ் நிறுவனம் ஒன்று னுநுசூழுஏஹஓஐஹ என்ற தடுப்பூசியைக் கண் டுபிடித்து உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித் துள்ளது. வெளிநாடுகளில் அது பயன்பாட்டிற்கு உள்ளது. நம் ஊரில் பயன்பாட்டிற்கு வரவில்லை. டெங்கு வந்தால் என்ன செய்ய வேண்டும்? உடனடியாக அருகில் உள்ள தனியார் அல்லது அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மருத்துவர் அறிவுரைப் படி வெளிநோயாளியாகவோ, உள் நோயாளி யாகவோ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தடுப்புமுறை! கொசு ஒழிப்பே ஒரே வழி, சுகாதாரமாகச் சுற்றுச்சூழலை பராமரிக்க வேண்டும். நீர் மட்டை களில் நீர் தேங்காத வாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நீர் சேமிக் கும் பாத்திரம், தொட்டி களை மூடி வைக்க வேண்டும். கொசு வலை, கொசுவர்த்தி, கொசுவிரட்டி, ஸ்பிரே தோல் களிம்புகள்பயன் படுத்தலாம். குடிநீரை காய்ச்சி வடிகட்டி அருந் தலாம். வீட்டு சுவரில் டிடிடி மருந்து, சாக் கடைகளில் டெல்டாமெத்திலின், தெருக்களில் கிரி சால் புகைமருந்து பயன்படுத்தலாம். அரசின் பொறுப்பு 90ரூ, மக்களின் பொறுப்பு 10ரூ மாற்று மருத்துவமுறை! நில வேம்புக் கசாயம், பப்பாளி இலைச்சாறு, மலை வேம்புச் சாறுகளை காலை, மாலை இரு வேளை அருந்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் அளவு குறையாமல் பாதுகாக்கப்படுவதாக சித்த மருத்துவம் கூறுகிறது. முடிவுதான் என்ன? எத்தனையோ தொற்று நோய்களை தமிழகம் இதற்கு முன் சந்தித்திருக்கிறது. அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் அவற்றை கட்டுக்குள் கொண்டு வந்து சரித்திரம் படைத்த நிகழ்வுகள் நடந்தேறி இருக்கிறது. தலைவர் கலைஞர் ஆட்சியில் தமிழக சுகாதாரத்துறை செயல்பாடே இதற்கு சாட்சி. தற் பொழுது மருத்துவ அவசர நிலை (ஆநனஉயட நுஅநசபநஉல) பிரகடனப்படுத்தும் அவல நிலைக்குக் காரணம், அரசின் மெத்தனப் போக்கே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. டெங்குவிற்கு மூலகாரணம் கொசு. அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. பல்வேறு நிலைகளில் உள்ள சுகாதார ஊழியர்கள் பணியிடங்கள் காலி யாக உள்ளன. மத்திய அரசின் கோடிக்கணக்கான நிதி உள்கட்டமைப்புக்குத் தான் செலவிடப்படு கின்றன. அதிலும் ஊழலில் திளைத்திருக்கின்றது. செயல்தலைவர் தளபதியார் கூறியது போல, உள்ளாட்சித் தேர்தல் நடந்திருந்தாலாவது உள் ளாட்சி அமைப்புகள் இந்த நேரத்தில் கைகொடுத் திருக்கும். அந்த அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கும் 4000 கோடி நிதி, இந்த வருடம் வழங்கப் படவில்லை என்று தெரிகிறது. மக்களிடம் ஏற்பட்டிருக்கும் பீதியைப் போக்கும் வகையில் இந்த அரசு நூற்றாண்டு விழா கேளிக் கைகளிலிருந்தும் பதவிச் சண்டையில் இருந்தும் விடுபட்டு செயலாற்ற முடியவில்லை என்றால் தார் மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும், அல்லது தமிழக மக்களைப் பாதுகாக்க அரசு கலைக்கப்பட வேண்டும்.