மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் மு.முத்துசாமி அறிவிப்பு!

கோவை, அக். 12 - கோவை மாநகர் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் மு.முத்து சாமி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- கோவை மாநகராட்சி யின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து அனைத்துக்கட்சி சார் பில் முற்றுகைப்போராட் டம் இன்று (12.10.2017- வியாழக்கிழமை) மாலை 3 மணி அளவில் கோவை மாநகராட்சியின் வரி சீராய்வு என்ற பெயரில் புதிய வரிவிதிப்பு, குப்பை களுக்கு வரி, குடிநீர் இணைப்புகளுக்கு வைப் புத் தொகை அதிகரிப்பு உள்ளிட்ட மநாகராட்சி யின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து மாபெரும் கண்டன முற்றுகை ஆர்ப்பாட்டம் அனைத்துக் கட்சிகள் சார்பில் நடைபெற உள்ளது. கோவை மாநகராட்சி யின் அனைத்து வட்டங் களிலும் குப்பைகள் சரிவர அகற்றாமலும், தேங்கி கிடக்கின்ற சாக் கடைகள் தூர்வாரப்படா ததாலும் சுகாதார சீர் கேடு ஏற்படுகிறது. இத னால் கோவையை மரண பீதியில் ஆழ்த்தியிருக் கும் டெங்கு காய்ச்சல், வைரஸ்காய்ச்சல் உள் ளிட்ட மக்கள் உயிரைப் பறிக்கும் மிக கொடூர நோய்களுக்கு ஆளாகின் றனர். இந்நிலையில் தி.மு. கழகம், காங்கிரஸ், ம.தி. மு.க., சி.பி.எம், சி.பி.ஐ., விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், திரா விடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட அனைத்துக்கட்சி சார் பில் கோவை மாநகர் வடக்கு மாவட்டத்திற் குட்பட்ட பி.என்.புதூர், கணபதி, காந்திபுரம், பெரியகடைவீதி ஆகிய பகுதி கழகங்களின் சார் பில் மாபெரும் கண்டன முற்றுகை ஆர்ப்பாட்டம் கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு நடை பெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத் தில் தலைமைக் கழக நிர் வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், செயற் குழு, பொதுக்குழு உறுப் பினர்கள், பகுதிக் கழகச் செயலாளர்கள், நிர்வாகி கள், வட்டக் கழகச் செய லாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப் பாளர்கள், கழக முன் னோடிகள், பொதுமக் கள், சமூக ஆர்வலர்கள், அனைவரும் பெரும் திர ளாக கலந்து கொள்ள வேண்டுமாய் வடக்கு மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் மு.முத்து சாமி வேண்டுகோள் விடுக்கிறார். குறிப்பாக பி.என். புதூர், கணபதி, காந்தி புரம் மற்றும் பெரிய கடை வீதி பகுதிக் கழகச் செயலாளர்களும், வட் டக் கழகச் செயலாளர் களும் அந்தந்த பகுதி களிலும், வட்டக் கழகங் களிலும் உள்ள அனைத் துக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், கழக செயல்வீரர்கள், பொது மக்கள் அனைவரையும் பெருந்திரளாக பங்கு பெறச்செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளு மாறும் வடக்கு மாநகர் மாவட்டப் பொறுப்பா ளர் மு.முத்துசாமி வேண்டுகோள் விடுக் கிறார்.