கழகத்தினர் - திராவிடர் கழகத்தினர் அஞ்சலி!

திருவண்ணாமலை, அக்.12- திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டம் வெம்பாக்கம் தாலுகா வடமணப்பாக் கம் தி.மு.க. கிளை கழக தலைவர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரி யர் மன்றத்தின் திருவண் ணாமலை மாவட்ட தலைவர் - பெரியார் பற்றாளர், தேசிய நல்லா சிரியர் விருது பெற்றவரு மான வேதா மெடிக்கல்ஸ் குழுமத்தின் நிறுவனர் பி.கே.விஜயராகவன் (வயது 85) அவர்கள் உடல் நலக்குறைவால் 9.10.2017 அன்று பிற்பகல் 3 மணியளவில் வடமணப் பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் மறைவுற்றார். மறைவுற்ற பி.கே.விஜய ராகவன் அவர்களுக்கு வி.சாந்தா - கணேசன் என்ற மகளும், திரைப்பட இயக்குனர் (நினைவில் வாழும்) செய்யார் ரவி - ஜெயந்தி, வி.வெங்கட் ராமன் - மு.தமிழ்மொழி, வி.தேவகுமார் - தரணி ஆகிய மகன்கள் - மரு மகள்களும் உள்ளனர். பெரியார் பற்றாளர் நல்லாசிரியர் பி.கே.விஜய ராகவன் அவர்களின் விருப்பப்படி அவரின் விழிகள் செய்யாறு அரிமா சங்கத்தின் ஏற் பாட்டில் காஞ்சிபுரம் அகர்வால் மருத்துவ மனைக்கு கொடையாக அளிக்கப்பட்டது. தி.மு.க. சார்பில் மரியாதை தி.மு.க. சார்பில் செய் யாறு சட்டமன்றத் தொகுதி மேனாள் உறுப் பினரும், மாநில விவசாய தொழிலாளரணி துணைச் செயலாளரு மான வ.அன்பழகன், செயற்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.வி.சுப்பிரமணி, செய் யாறு ஒன்றியச் செயலா ளர் வழக்குரைஞர் ஆர்.வி. பாஸ்கரன், மேற்கு ஒன் றியச் செயலாளர் தினக ரன், மேற்கு ஒன்றிய தலை வர் சங்கர், வடமணப் பாக்கம் கிளைக் கழகச் செயலாளர் மு.சேகர், ராந்தம் தலைவர் கிருஷ் ணமூர்த்தி, ராந்தம் சேட்டு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினர். திராவிடர் கழக தலைவர் ஆறுதல் தகவல் அறிந்ததும் திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நல்லாசிரியர் பி.கே.விஜயராகவன் அவர்களின் மகன், பகுத் தறிவாளர் கழக மாவட் டத் தலைவர் வடமணப் பாக்கம் வி.வெங்கட்ரா மன், மருமகள் பேராசி ரியர் மு.தமிழ்மொழி மற்றும் குடும்பத்தாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் ஆறுதல் தெரிவித்தார். 10.10.2017 அன்று பிற்பகல் பி.கே.விஜயராக வன் அவர்களின் உட லுக்கு திராவிடர் கழகத் தின் சார்பில் வேலூர் மண்டலத் தலைவர் வி. சடகோபன், தாண்டவ மூர்த்தி, செல்வநாதன், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் டி.ஏ.ஜி. அசோ கன், செய்யாறு மாவட் டத் தலைவர் அ.இளங் கோவன், தலைமை கழ கத்திலிருந்து விடுதலை தலைமை செய்தியாளர் வே.சிறீதர் மற்றும் மண் டல, மாவட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் மலர் மாலை வைத்து வீரவ ணக்கம் செலுத்தினர். காங்கிரஸ் சார்பில் மரியாதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவரும், மேனாள் அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினருமான கே.கிருஷ்ண சாமி அவர்கள் தனது பள்ளி தோழரான மறை வுற்ற பி.கே.விஜயராகவன் அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். எவ்வித மூடச்சடங் கின்றி உடல் அடக்கம்! பெரியார் பற்றாளர் மறைவுற்ற பி.கே.விஜய ராகவன் அவர்களின் தி.மு.கழகக் கொடி போர்த்தப்பட்ட உடல் 10.10.2017 அன்று மதியம் 3 மணிக்கு எவ்வித மூடச் சடங்குமின்றி அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வடமணப் பாக்கம் இடுகாட்டில் வீரவணக்கம் செலுத்தப் பட்டு அடக்கம் செய் யப்பட்டது.