நீதிமன்றம் எச்சரிக்கை!

டொராண்டோ, அக்.12- கனடாவின் டொராண்டோ நகரில் ஓர் அழகான வீட் டைப் போலவே, பக்கத்து தெருவில் உள்ள இன்னொரு வீட்டைச் சீரமைத்திருக் கிறார்கள். இதனால் அசல் வீட்டுக்காரர்கள், தங்கள் வீட்டின் மதிப்பு குறைந்து விட்டதாகக் கூறி ரூ.16 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்தார்கள். பார்பரா ஆனும் எரிக் கிரிஷென்ப் ளாட்டும் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜாசன், ஜோடி சாப் னிக் தொடுத்த வழக்குக்காக நிம்மதியிழந்திருக்கிறார்கள். எங்கள் கற்பனையில் உதித்த விஷயத்தை அவர் கள் எளிதாக எடுத்துக் கொண்டார்கள். மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறோம். எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய அவர் கள் மீது வழக்கு தொடுத் தோம். அதற்கான ஒளிப்பட ஆதாரங்களையும் அளித் தோம் என்கிறார் ஜோடி சாப்னிக். வெளிப்புறத்தில் ஜன்னல்கள், விளக்குகள், கற்கள் போன்றவை ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும் எங்கள் வீட்டுக்கும் அவர் கள் வீட்டுக்கும் நிறைய வித் தியாசமிருக்கிறது. நாங்கள் எந்தத் தவறும் செய்ய வில்லை. சில ஒற்றுமைகளுக் காக நாங்கள் நஷ்டஈடு தரவேண்டும் என்பது எந்தவிதத்தில் நியாயம்? 2015-ம் ஆண்டு புதுப் பித்தவுடன் வாங்கியதை விட அதிகமாக 2 மில்லி யன் டாலர்களுக்கு விற்று விட்டோம் என்கிறார்கள் பார்பராவும் எரிக்கும். இந்த விநோதமான வழக்கை விசாரித்த நீதி மன்றம், இனிமேல் இப்படி யாரும் இன்னொருவரு டைய கட்டிட அமைப்பை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று எச்சரித்து அனுப்பி விட்டது. நீதிமன்றத்துக்கு வெளியே இரு குடும்பங் களும் சமரச முயற்சியில் இறங்கியிருக்கின்றன.