மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. துவக்கி வைக்கிறார்!

சென்னை, அக். 12 - சோழிங்கநல்லூர் கிழக்குப் பகுதியில் கழக உறுப்பினர்கள் சேர்த்தல் முகாமை பகுதிச் செய லாளர் வி.இ.மதியழகன் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர் மா. சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. துவக்கி வைக் கிறார். இதில் மாவட்ட, பகுதிக் கழகத்தினர் கலந்து கொள்கின்றனர். இது குறித்து பகுதிக் கழகத்தினருக்கு பகுதிச் செயலாளர் வி.இ.மதியழ கன் விடுத்துள்ள வேண் டுகோள் வருமாறு:- தி.மு.கழகத்தின் 15-வது கழக தேர்தல் நடைபெறு வதையொட்டி சோழிங்க நல்லூர் கிழக்குப் பகுதியில் உள்ள அனைத்து வட்டங் களிலும் கழக உறுப்பினர் கள் சேர்த்தல் பணி தீவிர மாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சி யாக சோழிங்கநல்லூர் கிழக் குப் பகுதி 195-வது வட்டம் ஒக்கியம் துரைப்பாக்கம் எழில் நகரில் இன்று (12.10.2017 - புதன்கிழமை) காலை 10 மணிக்கு எனது (பகுதிச் செயலாளர் வி.இ.மதியழ கன்) தலைமையில் மாவட் டக் கழகச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம். எல்.ஏ. கழக உறுப்பினர் சேர்ப்பு முகாமை துவக்கி வைத்து சிறப்பிக்கிறார். எனவே இந்த கழக உறுப்பினர் சேர்ப்பு முகாமில் சோழிங்கநல் லூர் கிழக்குப் பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டக் கழகச் செயலாளர்கள், மாவட்டப் பிரதிநிதிகள், அணிகளின் மாவட்ட நிர்வாகிகள், பகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர் கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பகுதிச் செய லாளர் வி.இ.மதியழகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.