மு.க.ஸ்டாலின் பேட்டி!

சென்னை, அக்.12- டெங்கு குறித்து குதிரை பேர அரசு உண்மைகளை மூடி மறைத்து வருவதால் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டா லின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வலியுறுத்தியுள்ளார். கழக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரு மான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (11-10-2017) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- செய்தியாளர்: டாஸ்மாக், போக்கு வரத்துக் கழகம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை அமைச்சர் கள் மாற்றியதாக புகார் எழுந் துள்ளதே? தளபதி மு.க.ஸ்டாலின்:- மின்சார வாரியம், டாஸ்மாக், போக்குவரத்துக் கழ கங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறு வனங்கள் மூலமாக இதுபோன்ற முறை கேடுகள் ஏராளமாக நடந்துள்ளன. முறை யான விசாரணை நடந்தால் அனைத்தும் வெளியே வரும். இந்த ஆட்சி நடக்கும் வரை அதற்கான வாய்ப்பில்லை. போராடுபவர்கள் பற்றி இந்த குதிரை பேர அரசு கவலைப்படுவதில்லை! செய்தியாளர்: அண்ணாமலை பல் கலையில் ஊதியம் வழங்கவில்லை என்று தொடர்ந்து போராட்டம் நடந் தும் அரசு நடவடிக்கை எடுக்கவில் லையே? மு.க.ஸ்டாலின்:- அங்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் என பல தரப்பினரும் இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார் கள். ஆனால், குதிரை பேர ஆட்சி அது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அண்ணாமலை பல்கலையில் செப்டம்பர் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூட செய்திகள் வந்துள்ளன. இது மிகவும் கண்டிக்கத் தக்கது. அரசு உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். செய்தியாளர்: டெங்கு பிரச்சி னையில் மாநில அரசு எந்தக் கோரிக் கையும் வைக்காததால் மத்திய அரசு உதவ முடியவில்லை என்று மத்திய சுகா தாரத்துறை தெரிவித் துள்ள நிலையிலும் டெங்கு பாதிப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட இந்த அரசு மறுக் கிறதே? மு.க.ஸ்டாலின்:- டெங்கு உள்பட பல பிரச்சினைகளில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று நாங்கள் கேட்டும், எந்தவித பயனுமில்லை. முன்னாள் முதல்வர் ஜெய லலிதா அவர்கள் உயிருடன் இருந்த போதே, 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். அதே போல, இப்போதும் பல பிரச்சினைகளில் வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள் ளோம். ஆனால், எதற்கும் பதிலில்லை. டெங்கு பிரச்சினையில் மாநில அரசின் அலட்சியம் குறித்து இன்றைக்கு பட்டவர்த்தனமாக சுட்டிக்காட்டி இருக்கிறது. எனவே, முழு மையான விவரங்களுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டால்தான் உண்மை கள் வெளிவரும். செய்தியாளர்: அண்ணா இன்று இருந்திருந்தால் அவர் பா.ஜ.க.வில் சேர்ந்திருப்பார் என முரளிதரராவ் தெரிவித்திருக்கிறாரே? மு.க.ஸ்டாலின்:- பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்யும் சூழ்நிலை இன்றைக்கு பா.ஜ.க.வுக்கும் வந்து விட்டது. அவர்களின் மனதில் அண்ணா அவர்களை வைத்து, இன்றைக்கு நினைவுபடுத்தி யதற்காக திரா விட முன்னேற் றக் கழகத்தின் சார்பில் அவர் களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், கடந்த மூன்றரை ஆண் டுகளாக பிரதமர் மோடி தலைமை யில் உள்ள பி.ஜே.பி. ஆட்சி எதையுமே செய்ய வில்லை. இந்த ஆட்சியால் மக்களுக்கு எந்தவொரு பயனுமே கிடைக்கவில்லை. எனவேதான், அதையெல்லாம் திசை திருப்பும் வகையில் இப்படிப்பட்ட பிரச் சாரத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். செய்தியாளர்: குட்கா விவகாரம் தொடர்பான வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்தி ரன் ஆகியோர் பெயர்கள் இதுவரை இடம்பெறாமல் உள்ள நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்புள் ளதா? மு.க.ஸ்டாலின்:- அதனால்தான் குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை அமைக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மூல மாக நாங்கள் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளோம். அதேபோல, அமைச்சர், டி.ஜி.பி.க்கள் ஆகிய 3 பேரின் பெயர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப் பட்டது குறித்து மூத்த வழக்கறிஞர் வில் சன் அவர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டு இருக்கிறார். விரைவில் அந்த வழக்கும் தொடங்க உள்ளது. எனவே, நீதிமன்றத் தில் உரிய நியாயம் கிடைக்கும். ரூ.89 கோடி பணப்பட்டுவாடாவிற்கு அமைச்சர் பதில் சொல்லுவாரா? செய்தியாளர்: தி.மு.க.வை ஊழல் கட்சி என்று அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்து இருக்கிறாரே? மு.க.ஸ்டாலின்:- எதற்கும் பயனற்ற, உதவாத வகையில் அவர் அளித்து வரும் பேட்டிகளை எல்லாம் தொடர்ந்து நானும் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். நான் கேட்கும் ஒரே கேள்வி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வருமான வரித் துறை நடத்திய சோதனையில் 89 கோடி ரூபாய் வினியோகம் செய்த ஆவணங்கள் கிடைக்கப்பெற்று, அது விசாரணையில் இருக்கிறது. அதேபோல, குட்கா விற்பனையில் ஒரு அமைச்சரும், இரு காவல்துறை உயரதிகாரிகளும் மாமூல் வாங்கியதற்கான ஆதாரங்கள் வருமான வரித்துறையில் கிடைத்துள்ளன. அந்த வழக்கும் நடந்து வருகிறது. அது மட்டுமல்ல; இந்த குதிரை பேர அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையிலும் அவர்கள் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் உரிய விளக்கத்தை அவர்கள் அளித்துவிட்டு, அதன்பிறகு கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியும். செய்தியாளர்: தமிழகத்தில் மதுக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள போது, அரசின் வருவாயை உயர்த்த மது பானங்களின் விலையை 12 ரூபாய் வரை உயர்த்த அமைச்சரவையில் முடிவெடுக் கப்பட்டு இருக்கிறதே? மு.க.ஸ்டாலின்:- படிப்படியாக மதுபானக் கடைகளை மூடுவோம், மதுவிலக்கை படிப்படியாக அமல் படுத்துவோம் என்று சொன்னவர்கள் இன் றைக்கு இப்படிப்பட்ட அறிவிப்பை வெளியிட்டு இருப்பதில் இருந்து, எப்படிப்பட்ட முரண்பட்ட ஆட்சி தமி ழகத்தில் நடக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. டெங்கு பற்றி தி.மு.க. சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்! செய்தியாளர்: டெங்கு பிரச்சினை யில் அரசு செயலிழந்து இருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உங்களுடைய செயல்பாடுகள் என்ன வாக இருக்கும்? மு.க.ஸ்டாலின்:- எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் நானும், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும், தி.மு.க. நிர்வாகிகளும் டெங்கு பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கும், இந்த அரசாங் கத்துக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆங்காங்கு இருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, டெங்கு பாதிப்புகளை எல்லா வகையிலும் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறோம். இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டியளித்தார்.