ஓ.பி.எஸ். உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக் கோரிய தி.மு.க. வழக்கிற்கு

புதுடெல்லி, நவ. 14- தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான் மையை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமி கோரிய போது அரசு கொறடா உத்தரவை மீறி எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மா.ஃபா.பாண்டியராஜன் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி காவல் தடைச் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக் கக்கோரி சென்னை உயர்நீதிமன் றத்தில் கழக கொறடா அர.சக்கரபாணி தொடர்ந்த வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் செம்மலை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கிற்கு தடை விதிக்க முடியாது என்று அதிரடி உத்தர விட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு :- ஜெயலலிதா மரணத்திற்குப்பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி யேற்றார். அதன் பிறகு சசிகலா கொடுத்த நெருக்கடியால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.விலிருந்து தனியாக பிரிந்து சென்றார். அவருடன் மா.ஃபா. பாண்டியராஜன், சண்முகநாதன், ஆறுக்குட்டி, செம்மலை, நடராஜ் உள் ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்கள் சென்றனர். இவர்கள் அ.தி.மு.க.வின் தனி அணியாக செயல்பட்டனர். இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார். அதன்படி கடந்த பிப்ரவரி 18ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க பேரவைத் தலைவர் தனபால் கோரினார். எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தனர் அப்போது நடந்த வாக்கெடுப்பில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான 12 பேரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்தனர். அவர்கள் அ.தி.மு.க.வில் இருந்த நிலையில் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதற்கிடையே, எடப்பாடி பழனிச்சாமி அணியினருக்கும், ஓ. பன்னீர்செல்வம் அணி யினருக்கும் இடையே இணைப்பு பேச்சு வார்த்தை நடப்பதாகக் கூறினர். அடிக்கடி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தனர். சசிகலாவின் குடும்பத் தைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற நிபந்தனைகளை ஓ.பன்னீர்செல்வம் முன் வைத்தார். இதற்கு எடப்பாடி தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சசிகலா குடும்பத்தினர் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதவி வழங்கி வளைத்துக் கொண்டனர்! இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் அணி எடப்பாடி அணியுடன் இணைந்தது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவியும், மா.ஃபா.பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும், மேலும் சிலருக்கு கட் சிப் பதவிகளும் வழங்கி அவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வளைத்துக் கொண்டனர். எடப்பாடி அணியினர் இந்நிலையில், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் ஆளுந ரைச் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்க வேண்டும் என கடிதம் கொடுத்தனர். இதனையடுத்து கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவ டிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தனர். வழக்கு நிலுவையில் உள்ளது. உயர்நீதிமன்றத்தில் அர.சக்கரபாணி வழக்குத் தொடர்ந்தார்! இதற்கிடையே, தி.மு.கழகம் சார்பில் சட்டமன்ற கழக கொறடா அர.சக்கரபாணி உயர்நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி அன்று ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி சட்டப் பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும் பான்மையை நிரூபிக்கக் கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது நடந்த வாக்கெடுப் பில் ஓ.பன்னீர் செல்வம், ஆறுக் குட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், பாண்டியராஜன், மனோ ரஞ்சிதம், சரவணன், செம்மலை, சின்னராஜ், நடராஜ் ஆகியோர் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக வாக்களித் தனர். எம்.எல்.ஏ. அருண்குமார் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அரசு கொறடா உத்தரவில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால், கொறடாவின் உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்களும் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அரசு கொறடா உத்தரவுக்கு எதிராக செயல்படுவது கட்சித்தாவலாகும். எனவே, அரசு கொறடா உத்தரவை மீறிய ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 பேரையும் கட்சித்தாவல் தடைச் சட்டப்பிரிவின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். ஓ.பி.எஸ். மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் பதவிகளைப் பறிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது இந்த மனு உயர் நீதிமன்றத் தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி, ஓ.பன்னீர்செல்வம் அணி யைச் சேர்ந்த சட்டமன்ற உறுப் பினர் செம்மலை தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் நேற்று (13.11.2017) தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்னிலையில் பரிசீல னைக்கு வந்தது. அப்போது, செம்மலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி சபாநாயகரின் அதிகா ரத்தை கேள்வி எழுப்பி தொடரப் பட்ட வழக்கு, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்னிலை யில் நிலுவையில் இருப்பதால், அதனுடன் சேர்த்து இம்மனுவையும் விசாரிக்கலாம் என்றும், அதுவரை சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்குமாறும் வலியுறுத்தினார். தி.மு.க. சார்பில் மூத்த வழக்கறிஞர் அமரேந்திர சரண் வாதிட்டார் தி.மு.க. கொறடா அர.சக்கர பாணி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமரேந்திரசரண், சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுபோன்று மொத்தம் 45 வழக்குகள் நிலுவையில் உள்ள போது, செம்மலை ஒருவர் மட்டுமே உச்சநீதிமன்றத்தை அணுகி யிருப்பதாக குறிப்பிட் டார். மேலும், சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்துள்ள மனுவில் சிறிய மாற்றம் செய்து, நேரடியாக உயர்நீதிமன்றமே உத்தரவிடக் கோரி இருப்பதாகவும், இந்த மனுக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வருகிற 16-ந் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில், உயர்நீதிமன்ற விசா ரணைக்கு தடை விதிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், செம்மலையின் கோரிக்கைப்படி, தடை விதிக்க மறுத்துவிட்டது. சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம் என்று கூறி, செம்மலை மனு மீதான விசார ணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது. இவ்விசாரணையின் போது, கழக மூத்த வழக்கறிஞர் என். ஆர்.இளங்கோவன் ஆஜராகி யிருந்தார்.