ஊழலிலும் கமிஷனிலும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகச் செயல்பட்டுவரும்

சென்னை, நவ. 14- ஊழலிலும் கமிஷனிலும் இரட்டைக் குழல் துப்பாக்கி யாகச் செயல்பட்டு வரும் இரட் டையர்கள் அரசு விழாக்களில் நாகரிகமின்றிப் பேசுவதா? என்று கழக முதன்மைச் செயலா ளர் துரைமுருகன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதன்மைச் செய லாளர் துரைமுருகன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது :- மூட்டை மூட்டையாக தங்கள் முதுகுகளில் ஊழல் மற்றும் கமிஷன் அழுக்குகளை சுமந்து கொண்டு, ஒவ்வொரு மாவட்ட மாக அரசு பணத்தை ஊதாரித் தனமாக செலவு செய்து, ஏதோ கனவு பலிக்காது. கானல் நீர் ஆகும், என்றெல்லாம் எங்களு டைய கழக செயல் தலைவர் தளபதி அவர்களைப் பார்த்து விமர் சித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல மைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற் கும் கடும் கண்டனத்தை தெரி வித்துக் கொள்கிறேன். எங்கள் தளபதி குறிப்பிட்டது போல், ஊழலிலும் கமிஷனிலும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட்டு, அரசு கஜானாவை தூர் வாரிக் கொண்டிருக்கும் இந்த இரட்டையர்கள் அரசு விழாக் களின் மேடை நாகரிகம் கூட தெரி யாமல் பேசியிருப்பது அரசியல் தரம் தாழ்ந்த செயல். கமிஷன் இரட்டையர்கள் கனவு காணுவது கதைக்கு உதவாது! அ.தி.மு.க. என்ற சொந்தக் கட்சிக்குள் நடத்திக் கொண்டிருக் கும் மோசடிகளை பொதுமேடை யில் பேசுவதோடு நிறுத்திக் கொள் ளாமல், சந்தனத்துடன் தங்களை உரசிக் கொண்டால் அந்த வாசனை தங்களுக் கும் வரும் என்று கருதி எங்கள் தளபதியுடன் உரசிப் பார்க்க கமிஷன் இரட்டை யர்கள் கனவு காணுவது கதைக்கு உதவாது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு குடும்பத் திடம் சரணாகதி அடைந்து, இடைக் கால பொதுச் செய லாளராக இருந்த அவர்களின் சின்னம்மாவை கைகூப்பி வணங்கி, காலில் விழுந் ததோடு மட்டுமின்றி, அந்தக் குடும்பத்தில் உள்ள கடைக்கோடி வாரிசுகளிடம் கூட கைகட்டி நின்று சேவகம் பார்த்து தங்களு டைய பதவிகளைத் தக்கவைத்துக் கொண்ட இந்த இரட்டையர்கள், திடீரென்று ஒரு குடும்பத்திற்காக செய்கின்ற ஆட்சி இந்த ஆட்சி யல்ல என்றும், நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு என்றும் நாகூசா மல் திருநெல்வேலியில் நடை பெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசியிருப்பது கேலிக் குரியது மட்டுமல்ல, வாய் விட்டுச் சிரிக்கக் கூடிய அளவுக்கு மிகப் பெரிய நகைச்சுவை பேச்சாக இருக்கிறது. நிர்வாகத் திறமையில்லாத இரட்டையர்கள்! ஓரிரு நாள் மழையைத் தாங்க முடியாமல் சென்னை உள்பட தமிழ கத்தில் உள்ள பல்வேறு மாவட்டங் களில் வாழும் மக்கள் அவதிப்பட் டுக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பட்ட இன்னல்களில் இருந்து இன்னும் மக்கள் மீள முடிய வில்லை. எந்தவொரு ஆக்கப்பூர்வ மான திட்டங்களை நிறைவேற்ற வும் நிர்வாகத் திறமையில்லாத இந்த இரட்டையர்கள் பொதுப் பணித்துறைக்கு பொறுப்பேற்று இருந்த காலம்தான் அந்தத் துறையின் இருண்ட காலம் என்று இன்றைக்கு பொறியாளர்கள் எல்லாம் வேதனைப்படுகிறார்கள். பல பொறியாளர்கள் என்னிடமே நேரில் வந்து புகார் கூறுகிறார்கள். பொதுப்பணித்துறை அமைச் சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த காலத்தில் கால்வாய்கள் அமைப் பது, தூர் வாருவது, தடுப்பணை கள் கட்டுவது, குளங்கள், ஏரிகள், வெள்ளத் தடுப்பு பணிகள், வெள்ள மேலாண்மைப் பணிகள், கடலோர மாவட்ட பாதிப்புகளை தடுக்கும் பணிகள் என்று ஏறக் குறைய 3500 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக கணக்கு காட்டியிருக்கிறார். இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக கணக்குக் காட்டியும், வடகிழக்குப் பருவமழையால் கிடைத்த நீரை சேமித்து வைக் கவும் முடியாமல், மக்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்பை தடுக்கவும் இயலாத மோசமான நிர்வாகத்தை அளித் திருக்கிறார். இந்த ஓ.பி.எஸ்.! சேகர் ரெட்டியின் மணல் சாம்ராஜ்யம் ஒன்றை உருவாக் கியது மட்டுமே ஓ.பி.எஸ்! காலத்தின் ஒரே சாதனை. தளபதி கேட்ட வெள்ளை அறிக்கைக்கு இதுவரை பதில் இல்லை! முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, முதலில் 100 கோடி ரூபாயும், அடுத்து 300 கோடி ரூபாயும் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்து ஏரிகளை தூர் வாருவதாக அறிவித்தார். அப்போது, அந்தத் திட்டத்தில் எந்தெந்த பணிகள் நடைபெறவுள்ளன, தமிழகத் தில் எங்கெங்கு உள்ள நீர் நிலை களை சீரமைக்க திட்டமிடப்பட் டுள்ளது என்ற புள்ளி விவரங் களை அளிக்க வேண்டும், என்று நான் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பி னேன். ஆனால், இதுவரையிலும் அந்த விவரங் கள் வழங்கப்படவில்லை. மேலும், அந்த 400 கோடி களுக்கான பணிகளை இதுவரை கண்ணால் பார்க்க முடியவில்லை. 400 கோடி என்ன ஆனது என்று ஒரு வெள்ளை அறிக்கை வெளி யிடுங்கள், என்று எங்கள் தளபதி பலமுறை கேட்டுவிட்டார். ஆனால் இதுவரை அது பற்றி வாய் திறக்க இயலாத எடப்பாடி பழனிசாமி, இப்போது புதிதாக ஏரிகளை தூர்வார 300 கோடியும், தடுப்பணைகள் கட்ட 1000 கோடியும் நிதி ஒதுக்கப் போவதாகவும் நெல்லை பொதுக் கூட்டத்தில் வீர வசனம் பேசி யிருக்கிறார். ஆக 1300 கோடி ரூபாயில் அடுத்த திட்டம் ரெடி என்பதுதான் முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்பி லிருந்து வெளிப்படுகிறது. மழை பாதிப்பிலிருந்த மக்க ளைப் பாதுகாக்க ஆர்வம் காட்டுகிறார்களோ இல்லையோ, கஜானாவிலிருந்து கமிஷன் அடிக்கத் தயங்குவதே இல்லை. நிதி ஒதுக்குவதிலும், செல விடுவதிலும் காட்டும் அசாத் திய வேகத்தை பணிகளை நேர்மையாக செய்து முடிப்பதில் காட்டுவ தில்லை. அதனால்தான் பணிகள் எங்கே? என்று தளபதி கேட்ட வெள்ளை அறிக்கை பற்றி இதுவரை பதில் சொல்ல முடியவில்லை. தளபதி முன்கூட்டியே எச்சரித்தும் கோட்டையில் குறட்டை விட்டுத் தூங்கும் அரசு! பொதுப்பணித்துறையைப் பொறுத்தமட்டில் இந்த இரட்டைக் குழல் துப்பாக்கிகள் நீர் நிலைகள் தொடர்பான பணிகளுக்காக இப்போது அறிவித்துள்ள 1300 கோடி ரூபாயையும் சேர்த்து, இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள நிதி 5000 கோடி ரூபாயைத் தாண்டுகிறது. ஆனால் இன்றைக்கு சென்னை யும், சென்னை புறநகரும் ஒரு மழைக்கே தத்தளித்து நிற்கிறது. சென்னை புறநகர் குளங்கள் நிரம்பிய குடியிருப்புகளாக காட்சியளித்து, அங்கு உள்ள மக்கள் எல்லாம் சொல்லொ ணாத் துயரத்தில் சிக்கி துடித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் தளபதி முன் கூட்டியே எச்சரித்தும், வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு எவ்வித முன்னேற்பாடுகளையும் செய்யா மல் கோட்டையில் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந் தார்கள். மழை துவங்கிய பிறகே சில பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்த எடப்பாடி பழனிசாமி அரசின் நிர்வாக லட்சணத்தை நியூஸ் 18 தொலைக்காட்சி நார் நாராக கிழித்தபோது, இந்த இரட்டைக்குழல் துப்பாக்கிகள் எங்கே ஓடி ஒளிந்திருந்தன? ரூ.5 ஆயிரம் கோடி வரிப்பணத்திற்கு விரைவில் பதில் சொல்லும் காலம் வரும்! ஆகவே, வடகிழக்குப் பருவ மழை மட்டுமல்ல, நீர் நிலைகளை தூர் வாரி சீரமைத்து மக்களை பாதுகாக்கும் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வதிலும் இந்த இரட்டையர்கள் பொதுப் பணித்துறை அமைச்சர்களா கவும், முதலமைச்சர்களா கவும் இமாலயத் தோல்வியை கண்டுள்ளார்கள். எட்டிப் பார்த்து தேடிக் கண்டுபிடிக்க முடியாத தோல்விப் பள்ளத்தில் குதிரை பேர அரசு விழுந்து கிடக்கிறது என் பதை தலைவர் கலைஞர் அவர் கள் தலைமையில் பொதுப் பணித் துறையை நிர்வ கித்தவன் என்ற முறையில் தெரி வித்துக் கொள்ள விரும்புகிறேன். ஆகவே, மக்களின் ஒரே நம்பிக்கையாக இருக்கும் தளபதி அவர்களையும், அற்புதமான பல திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு நிறை வேற்றித் தந்த திராவிட முன்னேற்றக் கழகத் தையும் குறை சொல்வதை நிறுத்திக் கொள்வதோடு, தங்கள் மீது வீசும் ஊழல் துர்நாற்றத்திற்கு பன்னீர் தெளிக்கும் வேலைக்கு, அரசு கஜானாவில் இருந்து பணத்தை எடுத்து செலவிடுவதை இந்த இரட்டையர்கள் உடனே கைவிட வேண்டும். மேலும் வெள்ள அபாயம், கன மழை அபாயம் போன்ற பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்க இயலாத பன்னீரும், பழனிசாமியும், 5000 கோடி ரூபாய் வரிப்பணத்திற்கு விரைவில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தே தீரும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு துரைமுருகன் அவர்கள் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.