உணவு மட்டுமே வழங்கும் சிற்றுண்டி விடுதிகளில் ஜி.எஸ்.டி.

புதுடெல்லி, நவ. 14- உணவு மட்டுமே வழங்கும் குளிர்சாதன மற்றும் குளிர் சாதனம் இல்லாத சிற்றுண்டி விடு திகளில் ஜி.எஸ்.டி. வரியை 18 சதவிகிதத்திலி ருந்து 5 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என்று வலி யுறுத்தி கழக மாநிலங் களவை உறுப்பினர் திருச்சி சிவா, மத்திய நிதியமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு, திருச்சி சிவா எம்.பி., எழுதியுள்ள கடி தத்தில் குறிப்பிட்டிருப்ப தாவது: சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி) எனப்படும் மத்திய அரசின் வரி இந்தியா வில் மாபெரும் வரிச்சீர் திருத்தமாகக் கருதப்படு கிறது. ஆனால் உண்மையில் வரிவிகிதங் களை நிர்ண யம் செய்யும் சரக்கு மற் றும் சேவை வரி கவுன்சில் உணவுத் தொழிலில் ஏற்பட்டு வரும் நடைமுறைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இந்திய தேசிய சிற்றுண்டி விடுதியின் சங்கம் வெளி யிட்டுள்ள அறிக்கை ஒன் றில் சுமார் 34 சதவிகிதம் மக்கள் ஒரு வாரத்தில் ஒரு முறை முதல் 3 முறை வரை சிற்றுண்டி விடுதிகளில் உணவு உண்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. மேலும் 12 சதவிகிதம் பேர் தினந் தோறும் சாப்பிடுகிறார் கள் என் றும் குறிப்பிடப் பட்டுள் ளது. நகர் மயமாக் கல் அதிகரித்து வருவதன் விளைவாக வேலைபார்க் கும் ஏராளமான மக்கள் தினந்தோறும் தங்கள் பணியிடங்களுக்கு அரு கில் உ ள்ள சிற்றுண்டி விடுதிகளில் உணவு உண்டு வருகின்றனர். சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் மதுபானம் வழங்காத குளிர்பதனம் செய்யப்பட்ட சிற்றுண்டி விடுதிகளுக்கு இணை யாக மதுபானம் வழங் கும் சிற்றுண்டி விடுதி களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரியை 18 சத விகிதமாக நிர்ணயித்து உள்ளது என் பதைத் தங்கள் கவனத் திற்கு நான் கொண்டுவர விரும் புகிறேன். மது பானம் வழங்கும் மது பானம் வழங்காத குளிர் பதனம் செய்யப்பட்ட சிற்றுண்டி விடுதிகளுக்கு 18 சதவிகிதமாகவும் குளிர் பதனம் செய்யப்படாத, மதுபானம் வழங்கா சிற்றுண்டி விடுதிகளுக்கு 12 சதவிகிதமாகவும் நிர்ணயம் செய்வதும் மக்களுக்கு நீதி வழங்கிய தாகக் கூற முடியாது. ஏனெனில் அத்தகைய சிற்றுண்டி விடுதிகள் மிகக் குறைந்த அளவி லேயே இருக்கின்றன. ஆனால் அத்தியா வசியப் பொருளாக இல்லாத இனிப்புகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி வெறும் 5 சதவிகிதம் மட் டும் தான்நிர்ணயிக் கப்பட்டுள்ளது. ஆனால் சாமானிய மக்களின் பொருட்களான இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற சிற்றுண்டி விடுதிகளில் சாப்பிடும் உணவுப் பொருட்களுக்கு 18 சதவிகிதம் மற்றும் 12 சதவிகிதம் ஆகிய விகிதங் களில் வரி விதிக்கப்படு கிறது. இது எந்த வகை யிலும் நியாயமானது அல்ல. 7 நட்சத்திர ஓட் டல்களுக்கும் சாதாரண மான நெடுஞ்சாலையில் குளிர்பதனச் சிற்றுண்டி விடுதிகளில் சாப்பிடுபவர் களையும் ஓரே மாதிரி யாகக் கருதி வரி விதிப் பது நியாயமாகாது. சாதாரண மனிதர் களின் தோள்களின்மீது அதிகரித்து வரும்சுமை யையும், ஓட்டல் நடத்துப வர்கள் சந்திக்கும் பிரச் சினைகலையும் பரி சீலித்து குளிர்பதன மற் றும் குளிர்பதனமில்லாத மதுபானம் வழங்காமல் உணவுப் பொருட்களை மட்டுமே விற்பனை செய் யும் சிற்றுண்டி விடுதி களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியை அறிவு பூர்வமான முறையில் பரிசீலித்து 18 சதவிகிதத் திலிருந்து குறைத்து 5 சத விகிதமாக நிர்ணயிப்ப தற்கு முடிவு செய்ய வேண் டும் என்று வலியுறுத்து கிறேன். இவ்வாறு கழக மாநி லங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மத்திய நிதி யமைச்சர் அருண் ஜேட் லிக்கு எழுதியுள்ள கடிதத் தில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்திற்கு பதிலளித்து மத்திய நிதி யமைச்சர் அருண் ஜேட்லி, திருச்சி சிவா எம்.பி.க்கு எழுதியுள்ள தில் கடிதத்தில் குளிர் பதன மற் றும் குளிர் பதனமல்லாத உணவு மட்டுமே வழங் கும் சிற் றுண்டி விடுதி களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியை 5 சத விகிதமாக நிர்ணயிக்கக் கோரி தாங்கள் எழுதிய கடிதம் கிடைக்கப்பெற் றேன் என்று குறிப்பிட் டுள்ளார்.