நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை!

சென்னை, நவ. 14 - ஆக்கிரமிப்புகள், நீர் தேக்கம் போன்றவற்றால் தமிழகம் டெங்கு கொசு உற்பத்தி செய்யும் மாநில மாக மாறியுள்ளது என்றும் அரசை மட்டுமே குறை கூறாமல் பொது மக்களும் தங்கள் கடமையை சரியாக செய்தால் டெங்கு பாதிப்பிலிருந்து மீள முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.சேலத்தைச் சேர்ந்த சண்முகா மருத்துவமனை மற்றும் சேலம் கேன்சர் இன்ஸ்டியூட் வளாகத்தில் தண் ணீர் தேங்கி கொசு உற்பத்தி யானதாக அந்த மருத்துவ மனை நிர்வாகத் துக்கு சேலம் மாநக ராட்சி ரூ.10 லட்சம் அபராதம் விதித்து கடந்த மாதம் 22ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இதேபோல் தனி யார் பஸ் பணி மனை உரிமையாளர் சுந்த ரேசன் என்பவருக்கு ரூ.15 லட்சம் அபரா தம் விதித்து சேலம் மாநகராட்சி கமிஷ னர் அக்டோபர் 25ம் தேதி நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசுகளை எதிர்த்து மருத்துவ மனை நிர்வாகி பன்னீர்செல்வமும், சுந்தரேசனும் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில் தங்களுக்கு வளா கத்தை சுத்தம் செய்து பதில் தர வாய்ப் பளிக்கப்பட வில்லை என்று கூறப்பட் டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ். வைத்தி யநாதன் முன்னிலையில் விசா ரணைக்கு வந்தது. வழக்கை விசா ரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:- நீதிமன்றங்களில் கொசுத் தொல்லை! டெங்கு காய்ச்சல் சுத்தமான நீரில் உருவாகும் கொசுக்கள் கடிப்ப தால் ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சல் கட்டுப் படுத்தப்பட்டுள்ளது என்று சம்பந்தப் பட்ட துறை அமைச்சர் தெரிவித் துள்ளார். இதன்மூலம் டெங்கு காய்ச் சல் தடுக்கப்படக் கூடியது என்று தெரிகிறது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் நீதிபதிகளின் டேபிள் அருகே கொசுக்கள் பறக்கின்றன. அவற்றை நீதிமன்ற ஊழியர்கள் எலெக்ட்ரிக் பேட்டுகளால் அடித்து அகற்று கிறார்கள். நீதிமன்றத்திலேயே இந்த நிலை உள்ளது. பொதுமக்கள் தங்க ளின் குடியிருப்புகளுக்கு அரு கிலேயே குப்பைகளைக் கொட்டு கிறார்கள். மழை காலங்களில் பிளாஸ்டிக் பைகளில் வைத்து குப்பைகளை வீட்டின் அருகிலோ அல்லது குப்பைத் தொட்டியின் அருகில் வீசிவிட்டு செல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஆக்கிரமிப்பு களால் நீர் ஆதாரங்களும், கால்வாய், வாய்க் கால்களும் காணாமல் போன தால் தண்ணீர் வெளியேற வழியில் லாமல் தண்ணீர் தேங்குகிறது. கொசு உற்பத்திக்கு இது தற்போது மிக முக்கிய காரணமாக உள்ளது. உச்ச நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பலமுறை உத்தர விட்டும் நடவடிக்கை எடுக் கப்பட வில்லை. வெள்ளம் ஏற்பட்ட நேரத்தில் முன் னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். கூட தனது வீட்டை காலிசெய்துவிட்டு ஓட்டலில் தங்கியதாக செய்திகள் வந்துள்ளன. கொசு மனிதனால் தான் உருவாகிறது. அதிகாரிகள் கண்ணை மூடிக்கொண்டு நீர் ஆதார பகுதி களில் கட்டிடங்களைக் கட்ட அனுமதி கொடுக்கிறார்கள். அதிகாரிகளுக்கு ஆலோசனைகள்! அதனால்தான் தமிழகம் கொசு உற்பத்தி செய்யும் மாநிலமாக மாறி விட்டது. எனவே, டெங்கு கொசு உற் பத்தியை தடுக்க, உரிய நடவடிக் கைகளை எடுக்க அதிகாரி களுக்கு சில ஆலோசனைகள் தரப் படுகிறது. கொசுக்களை கொல்லும் மின் னோஸ் என்கிற மீன்களை நீர் நிலை களில் வளர்க்கலாம். தண்ணீர் சேமிக் கும் பாத்திரங்களும், டேங்குகளும் மூடி வைக்கப்படவேண்டும். ரப்பர் பொருட்கள் தண்ணீர் தேங்கி யிருக் கும் பகுதியில் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படவேண்டும். தேங்காய் நார்களும், உரல்களும் அகற்றப்பட வேண்டும். வீடுகளுக்கு அருகில் குப்பை களைக் கொட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீர் நிலை களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால் டெங்கு கொசு உற்பத் தியை தடுக்க முடியும். இந்த வழக்கில் மனுதார்களுக்கு உரிய வாய்ப்பு கொடுத்து குறைகளை நீக்குமாறு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவர் கள் குறிப்பிட்ட காலத்திற்குள் குறைகளை நீக்க வில்லை என்றால் அதிகாரிகள் சட் டப்படி நடவடிக்கை எடுக்கலாம். எனவே, மனுதாரர் களுக்கு சேலம் மாந கராட்சி கமிஷ னர் அனுப்பிய நோட் டீஸ் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். சிங்கப்பூரும் - தமிழ்நாடும் நீதிபதி வைத்தியநாதன் கூறுகை யில், சிங்கப்பூர் சென்றால் அங்கு அவர்கள் குப்பையை அதற்கான தொட்டியில் போடுகிறார்கள். அதே மக்கள் இந்தியா வந்தால் வெளியிடங் களில் வீசுகிறார்கள். அந்த அளவுக் குத்தான் மக்கள் மனநிலை உள்ளது. பக்கத்து வீட்டில் ஆள் இல்லை யென்றால் அந்த வீட்டின் அருகே குப்பையை போடுகிறார்கள். இரு சக்கர வாகனங்களில் சென்று கொண்டே குப்பை தொட்டி அருகே வீசுவதையும் காண முடிகிறது. இதெல்லாம்தான் கொசு உற்பத்திக்கு காரணம் என்றார். திருடனே திருந்த வேண்டும் மேலும் நீதிபதி கூறுகையில், டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத் தியில் அதிகாரிகளை மட் டும் குறை சொல்ல முடியாது, ஒவ்வொரு தனிப் பட்ட மனிதரும் தவறு செய்வ தால்தான் டெங்கு கொசு உற்பத்தி யாகிறது. என்னதான் சட்டம் வகுத் தாலும் அதை மீறுவதுதான் அதிகம் நடைபெறுகிறது. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடலை நினைவுபடுத்த விரும்பு கிறேன் என்றார்.