தமிழகத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடத்தத் தவறியதால்

சென்னை, நவ. 14- தமிழகத்தில் உள்ளாட்சி மன் றத் தேர்தல் நடத்தத் தவறியதற் காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை யற்ற மன்னிப்புக் கோரியது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரு கிறது. தி.மு.க. சார்பில் தொடரப் பட்ட இந்த வழக்கில் மூத்த வழக்கறி ஞர் பி.வில்சன் ஆஜராகி வாதாடி னார். தமிழக உள்ளாட்சி மன்றத் தேர் தலில் பழங்குடியினருக்கு சரியான இட ஒதுக்கீடு, வழங்கப்படவில்லை. ஆதலால் தமிழக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் அறிவிக்கை சட்டப்படி செல்லாது; பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்கிவிட்டு உள் ளாட்சி மன்றத்தேர்தல் நடத்த உத்த ரவிட வேண்டும் என்று கழக அமைப்புச் செயலாளரும் மாநிலங் களவை உறுப்பினருமான ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி, சென்னைஉயர்நீதி மன்றத்தில் ரிட் ஒன்றை மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருபாகரன் அவர்கள், தமிழக மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் அறிவிக் கையை ரத்து செய்து, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சரி சமமான முறையில் வேட்பாளர்களை தேர்வு செய்ய, அவகாசம் வழங்கும் வகையில், உரிய கால அவகாசத் தோடு தேர்தல் அறிவிக்கையை 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் வெளியிட்டு தமிழகத் தில் உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்திவிட வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த உத்தரவினை செயல்படுத் தாத தமிழக மாநில தேர்தல் ஆணை யம் , சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு மேல் முறையீடு செய்தது. ஆனால் அந்த மேல் முறையீட்டில் தேர்தல் நடத்துவதற்கான எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை. அதற்கு மாறாக தி.மு.கழகத் தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் கூறப்பட்ட கருத்துக் களை ஏற்றுக்கொண்ட இரு நீதிபதி கள் கொண்ட அமர்வு, கழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறி ஞர் பி.வில்சன் அவர்களின் வாதங் களைப் பதிவு செய்து, 2017 ஆம் ஆண்டு மே - 14 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஒரு இடைக்கால உத்தரவினை பிறப்பித்தது. ஆனால் அந்த உத்தர வினையும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செயல்படுத்த வில்லை. இவ்வாறு காலம் தாழ்த்திக் கொண்டே இருந்த நிலையில், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு களுக்கு ஒரு குறிப்பிட்ட காலவரை யறைக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உரிய உத்தரவினை பிறப்பிக்கக் கோரி கழகத்தின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. மீண்டும் ரிட் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவும் ஒருசேர, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி யின் தலைமையிலான அமர்வி னால் விசாரிக்கப் பட்டது. விசாரணையின்போது கழகத் தின் சார்பில் ஆஜரான மூத்த வழக் கறிஞர் பி.வில்சன் அவர்கள் வாதா டியதாவது:- தமிழக உள்ளாட்சி மன்றங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதி நிதிகள் இல்லாமல் எந்தவிதத் திட்டங்களையும், செயல்படுத்த முடியவில்லை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலை அதன் பதவிக்காலம் முடிவடைந்த வுடன் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள், பதவி ஏற்கின்ற வகையில் தேர்தலை நடத்தியே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளபடி, ஐந்தாண் டுகள் முடிந்தும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்த வில்லை. இது அரசியல் அமைப்புச் சட்டத் திற்கு விரோதமானது. ஆகவே இதையெல்லாம் கருத் தில் கொண்டு சென்னை உயர்நீதி மன்றம், தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உடனடியாக தேர்தல் நடத்த உரிய உத்தரவு களை வெளியிட வேண்டும். இவ்வாறு மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதாடினார். இதனை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலை மையிலான முதல் அமர்வு கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதியன்று ஒரு இறுதி உத்தரவை பிறப்பித்து, தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணையம், தமிழக உள்ளாட்சி மன்றத் தேர்த லுக்கான அறிவிக்கையை செப்டம் பர் மாதம் 18 ஆம் தேதிக்குள் வெளி யிட வேண்டும் என்றும் உள்ளாட்சி மன்றத் தேர்தலை நவம்பர் மாதம் 17 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவையும் மதிக்காத தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையாளர் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் ஆகி யோர் மீது நீதிமன்ற அவ மதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கழகத்தின் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப் பட்டது. இது பற்றிய விபரம் வருமாறு:- உயர்நீதிமன்ற உத்தர வின் அடிப்படையில் செப்.18ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவ தற்கான அறிவிப்பை வெளியிடாத மாநில தேர்தல் ஆணையத்தின்மீது தி.மு.க. சார்பில் கழக அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி எம்.பி., அக்டோபர் 3 ஆம் தேதி நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தி.மு.க. சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். இந்நிலையில், இந்த வழக்கு செப்.4ம் தேதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்திருந்தது. அப்போது நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், அதில் பழங்குடி யினர் மற்றும் தாழ்த்தப் பட்டோருக்கு உரிய இட ஒதுக்கீடுகள் வழங்க வேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப் பட்டது. உள்ளாட்சி தேர் தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன் றத்தில் நிலுவையில் உள்ளது. இருந்த போதிலும் இந்த நீதிமன் றத்துக்குள்ள அதிகாரத்தையும், அரசியலமைப்பு சட்ட பிரிவு 226ல் தரப்பட்டுள்ள உரிமையின் அடிப் படையிலும், இந்த நீதி மன்றம் சில உத்தரவு பிறப்பிக்க வேண்டியுள்ளது. எனவே, தமிழகத்தின் உள் ளாட்சி தேர்தலுக் கான அறிவிப்பை தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணை யம் செப்டம்பர் 18ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். நவம்பர் 17ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்ப டும் என்று உத்தரவிட்டி ருந்தனர். ஆனால் உயர்நீதிமன்ற கெடு முடிந்தும் தமிழகத்தில் உள் ளாட்சி தேர்தல் நடத்துவ தற்காக எந்த அறி விப்பையும் மாநில தேர்தல் ஆணை யம் இதுவரையில் வெளியிட வில்லை. அதனால் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில் சன் உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணை யத்தின்மீது நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கினை விசார ணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதி மன்றம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணை யத்தின் ஆணையாளரும், தேர்தல் ஆணையத்தின் செயலாளரும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத் தாமல் அதனை அவமதித்தது குறித்து அடிப்படை முகாந்திரம் உள்ளது; ஆகவே அவர்கள் இரு வரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜ ராக வேண்டும் என்று தலைமை நீதிபதியின் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையாளர் மாலிக் பெரோஸ் கான், செயலாளர் ராஜசேகர் ஆகிய இருவரும் கடந்த வாரம் நீதிமன்றத் தில் ஆஜராகினர், வழக்கு விசார ணைக்கு எடுத்துக் கொள்ளாத நிலையில் அவர்கள், இரண்டு நாட் களாக உயர்நீதிமன்றத்துக்கு வந்து காத்திருந்தனர். இந்த நிலையில் இது குறித்து மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் அவர் களின் முறையீட்டின் பேரில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. அப்பொழுது தேர்தல் ஆணையரும், செயலாளரும் தலைமை நீதிபதியின் முன்பு நேரில் ஆஜரானார்கள். அவர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அவர்கள் இருவரும் மீண்டும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி கோரினார். இந்த கோரிக்கையை பலமாக ஏற்க மறுத்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவர்களும், நீதிபதி சுந்தர் அவர்களும், நாளை (அதாவது இன்று - செவ்வாய்க் கிழமை) மதியம் 3.30 மணி அளவில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணை யாளரும், செயலாளரும் கண்டிப்பாக உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த நிலையில் நேற்று (திங்கள்) , தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணை யாளரும் செயலாளரும் பதில் மனு தாக்கல் செய்து நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினர். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உரிய காலத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்காததற்காக நிபந் தனையற்ற மன்னிப்புக் கோரி உள்ள நிலையில், தேர்தலை நடத்துவதற் கான பணிகள் குறித்து விளக்கங் களையும் அவர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ள னர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (14.11.2017 - செவ்வாய்) விசா ரணைக்கு வருகிறது. மூத்த வழக்கறிஞர் பி.வில்சனு டன், கழக சட்டத் துறைச் செயலா ளர் இரா.கிரி ராஜன், கழக வழக்கறி ஞர் நீலகண்டன் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராயினர்.