பேரிடர் நிறைந்த மலைப்பகுதியான, அமர்நாத் பனிலிங்கம் காண செல்லும் ஆன்மீக மக்களுக்கு முப்படை பாதுகாப்பு!

திருவண்ணாமலை, நவ.14- பேரிடர் நிறைந்த காஷ்மீர், அமர்நாத் பனி லிங்கம் காண செல்லும் பக்தர்களுக்கு அரசின் மூன்றடுக்கு பாதுகாப்பு உள்ளது. ஏன் முப்படை யும் பாதுகாப்பு அளிக்கி றது. பல நூற்றாண்டு பாரம்பரியமான கார்த்திகை தீபம் அன்று திருவண்ணாமலையில், மலையேறும் பக்தர் களுக்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது. மக்களின் அன்றாட பண்பாட்டு வழக்கில் அரசின் தலை யீடு கூடாது என்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ செய்தியாளர்கள் சந்திப் பின் போது கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது முன் னாள் அமைச்சர் எ.வ. வேலு எம்.எல்.ஏ கூறிய தாவது:- தமிழகத்தில் கார்த்தி கை மாதத்தில் கிருத்திகை அன்று கார்த்திகை நட்சத் திரத்தில் ஏற்படும் வானி யல் நிகழ்வை விளக் கேற்றி வழிபடுவது தொன்ம வழக்கு. கார்த்தி கை தீப வழிபாட்டில் தமிழகத்திலேயே திரு வண்ணாமலைக்கு தான் தனிச்சிறப்பு. திரு வண்ணாமலையின் தனிச் சிறப்பை இழக்க செய்யும் அளவில் உள்ளது மாவட்ட ஆட்சித் தலை வரின் உத்தரவு. மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவில், மகா தீப திருவிழாவின் போது ஆன்மீக மக்கள் மலை மீது ஏறுவதால் உயிரி ழப்புகள் ஏற்படுகிறது. கூட்ட நெரிசலில் தக்க பாதுகாப்பு அளிக்க முடியவில்லை. பக்தர்கள் உரிய பாதுகாப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை செய்வதில் சிக்கல் இருக் கிறது. எனவே இந்த மகா தீபத்தின் போது மலை மீது ஏற ஆன்மீக மக்க ளுக்கு தடைவிதிக்கப் படுகிறது. மலை ஏறு வதற்கான ஒன்பது பாதைகளும் மூடப்படும் என்று உத்தரவில் தெரி வித்துள்ளார். மக்களின் அன்றாட பண்பாட்டு வழக்கில் அரசின் தலையீடு எப் போதும் கூடாது. இதன் வாயிலாக பொது அமை திக்கு குந்தகம் வரும் போது அரசின் தலையீடு என்பது தவிர்க்க முடி யாதது. சங்க இலக்கியமான அகநானுறு, திருப்புகழ் மற்றும் திருமுறைகளில் சிறப்பாக பாடப்பட்டது கார்த்திகை தீபம். சமய குரவர்கள் நால்வரில் ஒரு வரான ஞானசம்மந்தர், கார்த்திகை தீபத்தை காண எழுந்துவா என்று தானே பாடினார். எவ்வித பிரச்சனைகளும் இல் லாத போது கார்த்திகை தீபத்தன்று மலை யேறு வதை தடுப்பது என்பது தவறான ஒன்று. மலை யேறுவதை தடுக்க முயற் சிப்பதில் அரசுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. மேலும் ஆன்மீக மக்கள் பெரும்பாலும் வேண்டுதலை நிறை வேற்றிக் கொள்ள மலை ஏறுவது என்பது பன் னெடுங் காலமாக நடை பெறுகிறது. மற்ற நாட்களில் மலை யேறலாம் என்பது தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது, மற்ற நாட்களில் வெடித்துக் கொள்ளலாம். பொங்கல் அன்று பொங்கல் வைக்க கூடாது, மற்ற நாட்களில் வைத்துக்கொள்ளலாம் என்பது போல தான். பேரிடர் நிறைந்த மலைப்பகுதியான அமர் நாத் பனி லிங்கத்தை காண செல்லும் பக்தர் களுக்கு அரசின் மூன்ற டுக்கு பாதுகாப்பு உள் ளது. ஏன் முப்படையும் பாதுகாப்பு அளிக்கிறது. பெருவெள்ளத்தால் சீர்குலைந்து போன பத்ரிநாத், கேதரிநாத் ஆகிய பகுதிகளைப் புனர மைக்க மத்திய அரசே பலகோடி ரூபாய் ஒதுக்கி யுள்ளது. பாரத பிரதமர் மோடியே நேரில் சென்று வருகிறார். குடியரசுத் தலைவரும் சென்று வருகிறார். பக்கத்தில் உள்ள கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கு பல லட்சம் ஆன்மீக மக்கள் வந்து செல்கிறார்கள். அதற்கு கேரள அரசு தக்க நட வடிக்கை, பாதுகாப்பு மற்றும் சிறப்பு ஏற் பாடுகளை, வசதிகளை செய்து தருகிறது. ஏன் தடைசெய்யப் பட்ட தமிழக, கேரள எல்லையில் உள்ள கண் ணகி கோவிலுக்கு, பண் பாட்டு வழக்கான கண்ணகி வழிபாட்டிற்கு, வருடத்திற்கு ஒருமுறை ஆன்மீக மக்கள் சென்று வர இரு மாநில அரசு களுமே தகுந்த ஏற்பாடு களை செய்து வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலையில் மலையேறும் பக்தர் களுக்கு கூட்டநெரிசல், பாதுகாப்பு, மருத்துவ சிகிச்சை அளிப்பதில் சிக்கல் இருக்கிறது என் பது ஒரு கண் துடைப்பே. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆன் மீக மக்களுக்கு மலை யேறுவதற்கு விதிக்கப் பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண் டும். சென்ற ஆண்டு கூட அப்போதைய திரு வண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மலை யேறும் ஆன்மீக மக்க ளுக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து மலைமீது ஏறியே ஆய்வு செய்தார். நான் அமைச்சராக இருந்த போது தீபத்திரு விழா குறித்து, அதிகாரி கள் மட்டத்திலும், உள் ளுர் பிரமுகர்கள், ஆன் மீக பெருமக்களிடமும், போக்குவரத்துக் கழக அலுவலர்களிடம் பல ஆலோசனைக் கூட்டங் களை நடத்தி சிறப்பாக தீபத்திருவிழாவை நடத்திருக்கிறோம். இது குறித்து தலைமைச் செய லாளர், மாவட்ட நிர் வாகம், இந்து அற நிலையத்துறை செய லாளர், ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மலையேறும் ஆன்மீக மக்கள் வசதி குறித்து மாவட்ட நிர்வாகம், மற்றும் நகர பிரமுகர்கள், முன்னாள் அறங்காவலர் கள் கொண்ட குழுவை அமைத்து பிரச்சனை களை தீர்க்கலாம். அப்படி தடை நீக் கப்படவில்லை எனில் சட்டபூர்வ நடவடிக்கை யில் ஈடுபடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். மேலும் செய்தியாளர் களிடம் அவர் பேசும் போது... இம்முறை தீபதிரு விழாவின் போது அன்ன தானம் அளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் கடு மையான கட்டுப்பாடு களை விதித்து இருக் கிறது. மேலும் மாவட்ட நிர்வாகமே நேரடையாக அன்னதானம் வழங்கும் என்பது கேலி கூத்தாக தான் இருக்கும். அன்ன தானம் வழங்குவது என்பது தனிமனித விருப் பம், அவர்களின் ஆன்மீக விருப்பம். ஏன் நாங்கள் கூட திராவிட முன்னேற்றக் கழ கத்தின் சார்பில் தீபத்திருவிழாவின் போது, நிறைய உணவகங் கள் மூடப்பட்டு இருக் கும் காரணத்தாலும், ஆன்மீக மக்கள் பசி யோடு செல்லக்கூடாது என்பதாலும் 25ஆயிரத் திற்கும் மேற்பட் டோர்க்கு உணவு வழங்கு கிறோம். இதற்காக நாங் கள் எங்கள் தலைவர் களின் படங்களை போட்டு பேனர்வைக் கிறோம். பக்தர்கள் பலர் அவரவர் வசதிக்கு ஏற்ப 500பேர், 1000பேர், 5000 பேர் என அன்னதானம் வழங்குவர். அதுவும் புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று தன் குடும்பத்தாரோடும்ட, நண்பர்களோடும் வழங்கு வர்கள். நேற்றுக்கூட தாய் மார்கள் என்னிடத்தில் ரேஷன் கடைக்கு நிரந் தரமாக விற்பனையாளர் கள் நியமிக்க கோரினர். மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி பி.ஜி அசிஸ் டன்ட்கள் நியமிக்கப்பட வில்லை. உள்ளாட்சி நிர் வாகத்தில் கேட்கவே வேண்டியதில்லை, அவ்வளவு காலி பணி இடங்கள் உள்ளன. நமது நகராட்சியில் 400 துப் பரவு பணியார்களுக்கு 100பேர் தான் உள்ளனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகமே அன்னதானம் வழங்கும் என்பது இயலாத நிலையே. அன்னதானம் வழங்குதலை மாவட்ட நிர்வாகம் ஒழங்குப் படுத்தலாம். மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றவர்களுக்கு, எந்த இடம் மற்றும் காவல் துறை சார்ந்தவர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை யை சார்ந்த மருத்து வர்களோ அல்லது உதவி யாளர்களைக் கொண்டு கண்காணிப்புக் குழு அமைத்து, தரமான உண வும், தக்க பாதுகாப்பும் அளிக்கலாம் இப்படி செய்தால் மாவட்ட ஆட் சித்தலைவரின் நோக் கமும் நிறைவேறும், ஆன் மீக மக்க ளின் நோக்கமும் நிறை வேறும். மேலும் அவர் செய்தி யாளர்களிடம் பேசும் போது, தமிழ்நாட்டிலேயே திருவண்ணாமலையில் தான் அதிக குளங்கள் உள்ளன. கிரிவலப்பாதை யிலும் குளங்கள் உள்ளன. தீபத்திருவிழாவின் போது இந்த புண்ணிய தீர்த்ததலங்களையும், குளங்களையும் ஆன்மீக மக்களுக்கு, தக்க காவல் துறை பாதுகாப்புடன் திறந்து விட வேண்டும் என்று மாவட்ட நிர் வாகத்தை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு செய்தி யாளர்கள் சந்திப்பின் போது கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது மாவட்ட துணை செய லாளர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, நகர செய லாளர் ப.கார்த்திவேல் மாறன், மாவட்ட அமைப் பாளர்கள் சி.என். அண் ணாதுரை, சேஷா. திரு வேங்கடம், ஒன்றிய செய லாளர்கள் த.ரமணன், சி.மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.