காங்கோவில் எரிபொருள் ஏற்றிச்சென்ற

கின்ஷாசா, நவ.14- காங்கோ ஆப்பிரிக் காவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது ஆப் பிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாகும். காங் கோ அதிக அளவிலான கச்சா கனிம வளங்கள் கொண்ட நாடாகும். காங்கோவின் லுபும் லாஷி நகரில் இருந்து லுயினா நகருக்கு நேற்று ஒரு சரக்கு ரயில் 13 பெட்டிகளில் கச்சா எண்ணெயை ஏற்றிக் கொண்டு சென்றுக் கொண்டிருந்தது. இந்த சரக்கு ரயிலில் பொது மக்களும் சட்ட விரோத மாக பயணித்துள்ளனர். அந்த ரயில் லுபுடி என்னு மிடத்தில் சரிவில் ஏறிய போது எதிர்பாராத வித மாக தடம்புரண்டது. தடம்புரண்ட அந்த ரயில் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து, தீப் பற்றியது, இந்த விபத்தில் அந்த ரயிலில் பயணம் செய்த 33 பேர் பரிதாப மாக உயிரிழந்துள்ளதாக அங்கு செயல்பட்டு வரும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அது சரக்கு ரயில் என்பதால் அதில் பய ணித்த அனைவரும் சட்ட விரோத பயணம் செய்த தாகவே கருதப் படுவர் என மூத்த ரயில்வே அதிகாரி ஒரு வர் கூறியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு ஒரு சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்தில் 74 பேர் உயிரிழந்ததோடு 174 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக் கது.