பார்வையற்றவர்கள் மீண்டும் பார்வை பெற

ஐயோவா, நவ. 14- பரம்பரையாக ஏற்படும் விழித்திரை நோய் கார ணமாக பார்வையை இழந்தவர்களுக்கு, மீண் டும் பார்வை கிடைக்க புதிய மரபணு சிகிச்சை உதவியுள்ளது. அமெரிக் காவின் ஐயோவா பல் கலை மேற் கொண்ட இந்த ஆராய்ச்சிக்கு விரைவில் அனுமதி கிடைக்கும் எனத் தெரி கிறது. பரம்பரை வழியில் ஏற்படும் விழித்திரை பாதிப்பு நோய் காரண மாக பார்வை இழந்த வர்களுக்கு இதுவரை எந்த சிகிச்சையும் இல் லாமல் இருந்தது. எல்.சி.ஏ. எனப்படும் லெபர் கன் ஜெனிடல் அமோ ரோசிஸ் என்ற பார்வை குறைபாடு 80 ஆயிரம் பேரில் ஒருவருக்கு ஏற் படுகிறது. குழந்தை பருவத்தில் ஏற்பட்டு, பின்பு படிப் படியாக முழுப் பார்வை யும் இழப்பு ஏற்படும். இவர்களுக்கு மரபணு சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை கிடைக்க செய் யும் ஆய்வை அமெரிக் காவின் ஐயோவா பல் கலைக் கழக ஆராய்ச்சி யாளர்கள் மேற்கொண் டனர். பாதிப்பை ஏற்படுத் தாத வைரஸ் ஒன்றை, ஆரோக்கியமான மர பணுக்களை விழித் திரைக்கு எடுத்துச் செல் லும் வகையில் ஆராய்ச் சியாளர்கள் மாற்றிய மைத்தனர். எல்சிஏ நோயாளிகளின் விழித் திரையில் ஆரோக்கிய மான மரபணுக்களை எடுத்துச் செல்லும் லட் சக்கணக்கான வைரஸ் களை ஆராய்ச்சியாளர் கள் செலுத்தி ஆய்வு மேற்கொண்டனர். எல்.சி.ஏ. பாதிப்புக்கு உள்ளான மொத்தம் 29 பேர் இந்த ஆய்வுக்கு உட் படுத்தப்பட்டனர். இவர் களில் 27 பேரால் உருவங் களையும், ஒளியையும் பார்க்க முடிந்தது. இயல் பான பார்வை கிடைக்க வில்லை என்றாலும், கம்பு மற்றும் நாய் உதவி யின்றி அவர்களால் நட மாட முடிந்தது. இந்த சிகிச்சை எவ் வளவு நாள் பலன் அளிக் கும் என தெரியவில்லை. ஆனால், இந்த சிகிச் சைக்கு உட்படுத்தப்பட்ட பெரும்பாலானோருக்கு கடந்த இரண்டு ஆண்டு களுக்கு மேலாக இந்த பார்வை நீடிக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் 200க்கும் மேற் பட்ட எல்.சி.ஏ. நோயாளி கள் இந்த சிகிச்சை ஆய் வில் கலந்து கொண்டுள் ளனர். ஆனால், இந்த மர பணு சிகிச்சை முறைக்கு அமெரிக்கா வின் உணவு மற்றும் மருந்து நிர் வாகம் (எப்டிஏ) இன் னும் அனுமதி வழங்க வில்லை. அதே நேரம், இந்த சிகிச்சையை எப்டிஏ. வின் ஆலோசனை குழு கடந்த அக் டோபரில் ஒருமனதாக அங்கீ கரித்துள்ளது. அதனால், இந்த சிகிச்சைக்கு அனு மதி வழங்கும் முடிவு வரும் ஜனவரியில் எடுக் கப்படலாம் எனத் தெரி கிறது.