பாகிஸ்தான் கடல் எல்லையில்

கராச்சி, நவ. 14- குஜராத் மாநிலத் தைச் சேர்ந்த மீனவர்கள் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது எதிர்பாராதவிதமாக பாகிஸ்தான் கடல் எல் லைக்குள் சென்று விடுவ தால் அந்த நாட்டின் கடற்படையினரால் கைது செய்யப்படுகின் றனர். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை முதல் நேற்று முன்தினம் வரையிலான 4 நாட் களில் பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடித்த தாக கூறி இந்திய மீனவர் கள் 55 பேரை அந்த நாட் டின் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களின் 9 படகு களையும் பறி முதல் செய் துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் உரிய விசா ரணைக்கு பிறகு போலீ சாரிடம் ஒப்படைக்கப் பட்டதாக பாகிஸ்தான் கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரி வித்தார். கடந்த மாதம் 29-ந் தேதி பாகிஸ்தான் ஜெயி லில் இருந்த இந்திய மீன வர்கள் 69 பேரை நல் லெண்ண அடிப்படை யில் அந்த நாடு விடுதலை செய்தது குறிப்பிடத் தக் கது.