இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய அனுமதிக்காதது ஏன்?

சென்னை, நவ.14- தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு காரண மாகக் கட்டுமானத் தொழில் அடியோடு முடங்கி இலட்சக் கணக்கானக் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ள நிலையில் மலேசியா விலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதிக்காதது தொழிலாளர்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகமாகும். எதை எதிர்நோக்கி இந்தத் தடையை அரசு விதித் துள்ளது?. இச்செயல் வன்மையான கண்டனத் திற்குரியதாகும் என்று தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்.குமார் கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- மனைத் தொழில் மற்றும் கட்டுமானத் தொழில் என்பது ஒரு நாட்டின் கட்டமைப்புப் பணிகளை உருவாக்கி பொருளாதார வளர்ச் சிக்கு வழிவகுக்கக் கூடிய முக்கிய காரணியாகும். ஆனால் 2011ல் தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க அரசு ஏற்பட்ட பின் இந்தத் துறை முடக்கத்தை நோக் கிப் பயணிக்க ஆரம்பித் தது. குறிப்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியின் போது நிலவழிக்காட்டி மதிப்பை பல மடங்கு உயர்த்தியது, முத்திரைத் தாள் கட்டணத்தை உயர்த்தியது, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங் களால் மனைத் தொழில் மற்றும் கட்டுமானத் தொழில் தேக்கத்தை அடைந்தது. அதன் பிறகு ஏற்பட்ட நில வகைப் பாடு வரைமுறை பிரச் சனை, மோடி அரசின் பணம் மதிப்பு இழப்பு செயல் போன்ற காரணங் களால் இந்தத் தொழில் ஒட்டுமொத்தமாக முடங் கியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்த கட்டு மானத்தொழில் மணல் தட்டுப்பாட்டால் அந்தத் தொழிலும் முடங்கியது. தனியார் மூலம் மணல் விற்பனை செய்த போது அரசிற்கு யூனிட் ஒன்றுக்கு 1150 ரூபாய் செலுத்திவிட்டு வெளி யில் ஒரு லோடு மணலை 40 ஆயிரம் ரூபாய் வரை விற்று கொள்ளையடிக் கப்பட்டது. இதனை எதிர்த்து கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் போராட் டங்கள் நடத்தப்பட்ட பின் அண்மையில் அரசே மணலை விற்கும் என எடப்பாடி அரசு அறி வித்தது. அதற்கான தனி ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒரு நிர்வாகம் ஏற்படுத் தப்பட்டது. ஆனால் மணல் முறையாக விற் பனைக்கு வந்திட ஏற்பாடு செய்திடவில்லை. தனி யார் துறையின் மூலம் விற்பனை செய்த போது ஒரு நாளைக்கு 40 ஆயிரம் லோடு மணல்கள் விற் பனைக்கு வந்தது. ஆனால் அரசே நேரடியாக விற்பனை செய்வது என்று முடிவு எடுத்தபின் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் லோடு அள விற்கே மணல் விற்பனை செய்யப்பட்டது. கமி ஷன் மற்றும் கையுட்டல் தடைப்பட்டுவிடும் என்பதால் அரசு விற் பனையை ஊக்கப் படுத்திட முதலமைச் சரோ அதிகாரிகளோ முன் வந்திடவில்லை. இந்த நிலையில் தான் புதுக்கோட்டையைச் சேர்ந்த தனியார் நிறு வனம் மலேசியாவிலி ருந்து மணலை இறக்கு மதி செய்து தமிழகத்தில் வினியோகம் செய்திட முனைந்தது. முறையாக அனுமதி பெற்று சுங்க வரி மற்றும் ஜி.எஸ்.டி வரிகளை செலுத்தி சுமார் 7.6 கோடி ரூபாய் மதிப் புள்ள 54 ஆயிரம் டன் மணலை மலேசியா விலிருந்து கப்பல் மூலம் கடந்த மாதம் 21ம் தேதி இறக்குமதி செய்தது. இந்த மணல் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் இறக்கப்பட்டு சுமார் 54 லாரிகளில் இந்த மணலை ஏற்றி விற்பனை செய்ய முயன்ற போது அரசு அதற்கு முட்டுக் கட்டை போட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய முடியாதது மட்டு மல்ல, அதனால் ஒரு நாளைக்கு ரூ.2 இலட்சம் துறைமுகத்திற்கு வாட கை செலுத்த வேண்டி யுள்ளது. கேரளா போன்ற மாநிலங்களில் தனியார், மணலை இறக்குமதி செய்து விற்பனை செய் திட ஊக்கப்படுத்தப்படும் நிலையில் தமிழ்நாட்டில் இந்த இறக்குமதி மணலை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவது ஏன்? எதை எதிர்ப்பார்த்து ஆட்சியாளர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள் ளனர். கட்டுமானத் தொழில் முடங்கிய போது அரசே மணலை இறுக்குமதி செய்து வினியோகிக்க வேண்டுமென அனைத் துத் தரப்பு மக்களும் கோரிக்கை வைத்தனர். அதற்கான நடவடிக்கை யை தமிழக அரசு எடுத் திடவில்லை. தனியார் மணலை இறக்குமதி செய்து விற்பனைக்கு முயன்ற போது அதற்கும் தடைவிதிக்கிறது, இந்த கமிஷன் அரசு. இந்தச் செயல் மிக வன்மையா கக் கண்டிக்கக் கூடிய தாகும். கமிஷன் மற்றும் கரப்சன் அரசு எனப் பெயர் பெற்ற தமிழக அரசு உடனடியாக இறக் குமதி செய்யப்பட்டு தூத் துக்குடி துறைமுகத் தில் வைக்கப்பட்டுள்ள மணலை விற்பனை செய்ய அனுமதித்து கட்டு மானத் தொழிலை ஊக்கப் படுத்திட முன் வந்திட வேண் டும். இவ்வாறு பொன். குமார் தமது அறிக்கை யில் கூறியுள்ளார்.