தாழ்த்தப்பட்ட - பழங்குடியினருக்கு எதிராக வன

சென்னை, ஏப். 16- தாழ்த்தப்பட்ட - பழங்குடியின ருக்கு ஆதரவாக நாடாளு மன்றத் தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் நீர்த்துப் போகும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப் பது அறிவோம்! உடனடியாக மத்திய அரசு இப்பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறை யீட்டு மனுத் தாக்கல் செய்து, மீண்டும் தாழ்த்தப்பட்ட - மலை வாழ் பழங்குடி மக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கிட வேண் டுமென்பதை வலியுறுத்தி அனைத்துக்கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை சென்னை - வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெறுகிறது. மத்திய பா.ஜ.க. அரசின் அலட் சியத்தால் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகள் நசுக்கப்பட்டு வட மாநிலங்கள் கலவர பூமியாகி வருவது குறித்து கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர் கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத் திருந்தார். அந்த அறிக்கையில் மு.க. ஸ்டாலின் அவர்கள், சமத்துவ சமுதாயம் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ள யாரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய, நியாய மான கோரிக்கைகளை வலியுறுத் திப் போராடிக் கொண்டிருக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதி ரான கண்மூடித்தனமான வன் முறை கடும் கண்டனத்திற் குரியது. போராட்டங்களுக்கு உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஒரு காரணம் என்றாலும், மனுதர்மத்திலும், வகுப்புப் பாகுபாடுகளிலும் ஈடு பாடுள்ள பா.ஜ.க.வின் கடந்த நான்காண்டு கால ஆட்சியில், தாழ்த்தப்பட்டோரின் உரிமைகள் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருவ தால் விளைந்த எழுச்சியே இந்தப் போராட்டம். தீர்ப்பு வந்ததில் இருந்து எச்சரிக்கைக்குரல் எழுப் பியும் பாராமுகமாக இருந்த மத்திய பா.ஜ.க. அரசு, காவிரிப் பிரச்சினையில் நடந்து கொண்ட தைப் போல மிகவும் காலதாமத மாக சீராய்வு மனு தாக்கல் செய் திருக்கிறது. ஆகவே, இந்த மனுவின் மீதான விசாரணையிலாவது உச்ச நீதிமன்றத்தின் முன்பு ஆணித்தர மான வாதங்களை எடுத்து வைத்து, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு இந்திய அரசியல் சட்டம் அளித்துள்ள பாதுகாப் பினை உறுதிசெய்யும் சட்டங் களை எக்காரணம் கொண்டும் நீர்த்துப் போக அனுமதிக் காமல், உறுதியுடன் தடுத்திட வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பதவி யேற்ற நாள் முதல் நாடு முழு வதும் ஆதி திராவிடர்கள் இனத் தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டு, பழி வாங் கப்படு வதோடு, தாழ்த்தப்பட்டோர்/ மலைவாழ் மக்க ளுக்கு எதிரான குற் றங்கள் நாடு முழு வதும் அதிகரித்து வரும் நிலையில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குற்றவாளிகளுக்கு ஆதர வான ஒரு நிலையை ஏற்படுத்து வதுடன்; குற்றம் செய்ய நினைப்ப வர்களுக்குச் சாதகமான வகையில் அமைந் துள்ளது என்று குறிப் பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நாடாளுமன்றத் தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் நீர்த்துப் போகும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என் றும்; உடனடியாக மத்திய அரசு இப்பிரச்சினையில் உச்சநீதி மன்றத் தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்து, மீண்டும் தாழ்த்தப்பட்ட / மலைவாழ் பழங்குடி மக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கிட வேண்டுமென்பதை வலியுறுத்தியும் - வன்கொடுமை தடுப்புச் சட் டத்தை அரசியலமைப்புச் சட்டத் தின் 9வது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தியும்; நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- தாழ்த்தப்பட்டோர்/ மலைவாழ் மக்களுக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கி யுள்ள தீர்ப்பு குற்றவாளி களுக்கு ஆதரவான ஒரு நிலையை ஏற்படுத்துவ துடன்; குற்றம் செய்ய நினைப்பவர்களுக்குச் சாதகமான வகையில் அமைந்துள்ளது. நாடாளுமன்றத்தால் நிறை வேற்றப்பட்ட ஒரு சட்டம் நீர்த்துப் போகும் வகையில் உச்சநீதிமன் றம் தீர்ப்பளித்திருப்பது ஏற் றுக் கொள்ளத்தக்கதல்ல. இந்நிலையில், மத்திய அரசு இந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிடாமல், அக்கறையின்றி நடந்து கொண்டது கண்டனத்திற் குரியதாகும். உடனடியாக மத்திய அரசு இப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, மீண்டும் தாழ்த் தப்பட்ட / மலைவாழ் பழங்குடி மக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கிட வேண்டுமென்பதை வலியுறுத் தியும் - வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியல மைப்புச் சட்டத்தின் 9வது அட்ட வணையில் இணைக்க வலியுறுத் தியும்; இன்று 16-4-2018 திங்கட் கிழமை காலை 10.00 மணி அளவில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., திராவிடர் கழகம், காங்கிரஸ், ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த முன்னணி யினர், தோழர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள் கிறோம். இவ்வாறு அனைத்துக் கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று (16.4.2018) காலை 10 மணியளவில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கில் கழகத் தோழர்களும் பொது மக்களும் பங்கேற்கின்றனர்.