குதிரை பேர அரசின் அலட்சியத்தால்

சென்னை ஏப் 16- சோலார் (சூரிய மின்சக்தி) மின்உற்பத்தியில் முன்னணியில் இருந்த தமிழகம் இன்றைக்கு நாட்டிலேயே ஐந்தாவது இடத் திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான திட்டங்களை நிறை வேற்றுவதில் அக்கறையற்ற குதிரைபேர அரசின் செயல்பாடு கள்தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. சோலார் மின்உற்பத்தி யில் தமிழகம் உயர்நிலையில் இருந்து 5 வது இடத்திற்குப் பின்தங்கியுள் ளது குறித்து சண்டே டைம்ஸ் நாளேடு வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரை வருமாறு:- சோலார் மின்உற்பத்தித் திறனில் தற்போது, தமிழ் நாடு நாட் டிலேயே ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. 648 மெகா வாட் திறன் கொண்ட அதானி சோலார் மின்திட்டம் தனது உற்பத்தியை துவக்கிய நிலையில் 2016 ஆம் ஆண்டில் தமிழகம் சூர்ய மின் சக்தி - சோலார் - மின் உற்பத்தியில் முதல் இடத்தில் இருந்தது. அதற்குப் பிறகு தமிழகம் தனது முதலிடத்தை தெலுங் கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்திற்கு விட்டுக் கொடுத்து பின்தங்கி விட்டது. 2018 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் சோலார் மின் உற்பத்தித் திட்டங்களைச் செயல்படுத்து வதில் தொடர்ந்து முன்னணியில் இருக்கும் வகையில் இருந்து வருகிறது. 2017 ஆம் ஆண்டு கர் நாடகா 2 ஜி.டபிள்யு திறனில் புதிய சோலார் திட்டங்களை உருவாக் கியதோடு, இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அதே அள விற்கான திறனுள்ள திட்டங் களைத் தீட்டி அவைகளைச் செயல்படுத்தியுள்ளதாக, மெர்க் காம் காபிடல் இந்திய நிறுவன ஆய்வின் மூலம் தெரியவந்துள் ளது. கடந்த ஆண்டில் - 2017 - ல் தமிழகத்தின் ஒட்டு மொத்த சோலார் மின்உற்பத்தியானது 1720 மெகாவாட் என்கிற அள விலேயே இருந்தது. அதேசமயம் தெலுங்கானா தமிழகத்தின் அள வையும் தாண்டி 3 ஆயிரம் மெகா வாட் என்கிற அள வினை எட்டியது. கர்நாடகத் தின் உற்பத்தி 2744 மெகா வாட்டாக வும், ஆந்தி ராவின் உற்பத்தி 1225 மெகா வாட்டாக வும் இருந்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை யில் அதிக பட்சமாக 2 ஆயிரம் மெகாவாட் சோலார் மின் உற் பத்தி செய்யக் கூடிய அளவிற்கு திறன் உள்ளது. ஆனால் அதற்கான திட்டங்களைச் செயல்படுத்து வதில் தமிழகம் ஆர்வம் காட்ட வில்லை. எனவே தான் தமிழகத் தின் சோலார் உற்பத்தி என்பது பின் தங்கத் தொடங்கிவிட்டது. இத்தகைய ஆர்வம் குறைந்த நிலைமை தமிழகத்தில் இருந்த போதும் தற்போதுதான் ஒரு சில திட்டங்கள் செயல்படத் தொடங்கி யுள்ளன. அவைகள் விரைவில் முடிவடையும் என்றும் நம் பப்படு கிறது. இவ்வாறு சண்டே டைம்ஸ் செய்திக் கட்டுரையில் தெரிவிக் கப்பட்டுள்ளது. முதல் நிலையில் இருந்த தமிழகத்தின் சோலார் மின் உற்பத்தி என்பது தற்போதைய நிலையில் 1.8 ஜி.டபுள்யூ என்ற அளவில் தான் இருக்கிறது. அதே சமயம் ஆந்திர மாநிலம் மற்றும் ராஜஸ்தானில் 2.4 என்றும், தெலுங்கானாவில் 3.3 என்றும் கர்நாடகாவில் 5 என்றும் இருக் கிறது. தமிழக குதிரைபேர அரசின் அலட்சியத்தால், சோலார் மின் உற்பத்தியில் உயர்ந்த நிலை யில் இருந்து கீழிறங்கி 5 வது இடத் திற்கு வந்துள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.