இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரா

சென்னை, ஏப். 16- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவராக கே.எம்.காதர் மொகிதீன் அவர் கள் மீண்டும் தேர்வு செய்யப் பட்டுள்ளதற்கு கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர் கள், தனது இதயம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித் துள்ளார். மதச்சார்பற்ற கட்சிகள் ஓர ணியில் இருக்க வேண்டும் என்ற கொள்கை உறுதிப்பாடு மிக்க பேராசிரியர் கே.எம்.காதர் மொகி தீன் அவர்கள் தேர்வு செய்யப்பட் டுள்ளது. மிகவும் பொருத்தமான நிகழ்வு என்ற மகிழ்ச்சியை தெரி வித்துக் கொள்கிறேன் என்று தமது வாழ்த்துச் செய்தியில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், செயல் தலை வருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவராக பேராசிரியர் திரு கே.எம்.காதர் மொகிதீன் அவர் கள் மீண்டும் தேர்வு செய்யப்பட் டுள்ளதற்கு திராவிட முன்னேற்றக் கழகத் தின் சார்பிலும், தலைவர் கலைஞர் அவர்கள் சார்பிலும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டிய மிக முக்கி யமான காலகட்டத்தில் இந்திய அரசியல் பயணித்துக் கொண் டிருக்கின்ற நேரத்தில், மதச்சார் பற்ற கட்சிகள் அனைத்தும் ஓரணி யில் இருக்க வேண்டும் என்ற கொள்கை உறு திப்பாடு மிக்க பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளது மிகப் பொருத்தமான நிகழ்வு என்ற மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டு, பேராசிரியர் அவர் களின் பணிகள் மென் மேலும் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை வாழ்த்து கிறேன். இவ்வாறு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது வாழ்த்துச் செய்தியில் தெரி வித்துள்ளார்.