வன்கொடுமை தடுப்புச் சட்டம்!

சென்னை,ஏப்.16- சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல். ஏ., விடுத்துள்ள அறிக்கை வருமாறு- தாழ்த்தப்பட்டோர்/ மலைவாழ் மக்களுக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குற்றவாளி களுக்கு ஆதரவான ஒரு நிலையை ஏற் படுத்துவதுடன்; குற்றம் செய்ய நினைப்ப வர்களுக்குச் சாதகமான வகையில் அமைந்துள் ளது. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் நீர்த்துப் போகும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது ஏற் றுக் கொள்ளத்தக்கதல்ல. இந்நிலையில், மத்திய அரசு இந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர் களை வைத்து வாதிடாமல், அக்கறையின்றி நடந்து கொண்டது கண்டனத் திற்குரியதாகும். உடனடியாக மத்திய அரசு இப்பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்து, மீண்டும் தாழ்த் தப்பட்ட / மலைவாழ் பழங்குடி மக்களுக்கு உரிய பாதுகாப் பினை வழங்கிட வேண்டுமென் பதை வலியுறுத்தியும் - வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியல மைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தி யும்; இன்று (16.4.2018 திங் கட்கிழமை) காலை 10.00 மணி அளவில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது. இப் போராட்டத்தில் சென்னை மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்டக் கழக நிர்வாகி கள், சட்டமன்ற, முன் னாள், இந்நாள் தலை மைக் கழக நிர்வாகிகள், பகுதிக் கழகச் செயலா ளர்கள், உறுப்பி னர்கள், பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டக் கழகச் செயலா ளர்கள், மாவட்டப் பிரதி நிதிகள், மாவட்ட அணி களின் அமைப்புகள், இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, தொண் டர் அணி, மகளிர் தொண்டர் அணி, வழக் கறிஞர் அணி, மீனவர் அணி, மருத்துவர் அணி, கலை இலக்கியப் பகுத் தறிவுப் பேரவை, பொறி யாளர் அணி, விவசாய அணி, ஆதி திராவிட நலக்குழு, வர்த்த கர் அணி, சிறுபான்மை யினர் அணி, தொழிலா ளர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி ஆகிய அணிகளைச் சார்ந்த மாநில, மாவட்ட, பகுதி, அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர் கள் மற்றும் நிர்வாகிகள் இன்று (16-4-2018 அன்று காலை சரியாக 9 மணி யளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக கழகத்தினர் ஆயிரக் கணக்கில் பெருந் திரளாகக் கலந்து கொள்ளு மாறு கேட்டுக் கொள்கி றேன். இவ்வாறு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்ப ழகன் தமது அறிக்கையில் வேண்டுகோள் விடுத் துள்ளார்.