வட்டச் செயலாளர் ஜி.பி.எஸ்.பாலசதீஷின் தந்தை க

சென்னை,ஏப்.16- வேளச்சேரி மேற்கு பகுதி 179 (அ) வட்டச் செயலாளர் ஜி.பி.எஸ். பாலசதீஷின் தந்தையும் கழக முன்னோடியுமான ஜி.பி.எஸ். மணியன் அவர் கள் நேற்று (15.04.2018 ஞாயிற்றுக்கிழமை) காலை உடல் நலக் குறைவினால் இயற்கை எய்தினார் என் பதை அறிவிக்க வருந்து கிறோம். மறைந்த ஜி.பி.எஸ். மணியன் அவர்கள் தலைவர் கலைஞர் அவர் கள் மீதும், கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீதும் அளப் பரிய அன்பும், பற்றும் கொண்டவராகத் திகழ்ந்த வர் தலைவர் கலைஞர், கழகச் செயல் தலைவர் ஆகி யோரின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் அந்தப் பகுதி யில் தமது சொந்தச் செல வில் வெகு சிறப்பாகக் கொண்டாடுவார். கழக நிகழ்ச்சிகளை யும் அதிக அளவில் நடத்தி மகிழ்ச்சியுறக் கூடியவராக விளங் கினார் கழகம் நடத்தும் அனைத்துப் போராட் டங்களிலும், கழகக் கொடியுடன் முன்னணி நபராக கலந்து கொண்டு கழகத்தினர் அனைவரிட மும் அன்பைப் பெற்ற வராகத் திகழ்ந்தார். ஜி.பி.எஸ்.அவர்கள் உடல் நலிவுற்று கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலை யில் நேற்று காலை மறை வெய்தினார். அன்னா ருக்கு வயது 70. மறைந்த அன்னா ருக்கு ஜி.பி.எஸ். பால சதீஷ் என்கிற மகனும் (179 (அ) வட்டச் செயலா ளர்) விஜயலட்சுமி என் கிற மனைவியும், கார்த் திகா என்கிற மகளும் உள்ளனர். அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று 16.4.2018 திங்கட்கிழமை மதியம் 3 மணிக்கு அவரது இல்லத் தில் எண்.10, 2வது தெரு, டான்சி நகர், வேளச் சேரியில் இருந்து புறப்பட் டு வேளச்சேரி அண்ணா கார்டன், குருநானக் கல்லூரி அருகில் உள்ள இடு காட்டில் நல்லடக்கம் செய்யப்படஉள்ளது.