காவிரிப் பிரச்சினை: தி.மு.க. தோழமைக் கட்சிகளி

சென்னை ஏப். 16 - காவிரி பிரச்சினைக்காக போராடுவதில் தி.மு.க.வும் அதன் தோழமை கட்சிகளும் ஒரு வலுவான தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக வும், பிரதமரின் தமிழக சுற்றுப்பயணத்தில் அவ் வளவாக அ.தி.மு.க. அரசு அக்கறை எடுத்துக் கொள்ளாததாலும், தமிழக பா.ஜ.க. பரிதாப நிலை யில் இருப்பதாக `சண்டே டைம்ஸ் ஆங் கில நாளி தழ் செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. சண்டே டைம்ஸ் 15.4.2018 தேதியிட்ட இதழில் வெளியிடப்பட் டுள்ள செய்திக் கட்டுரை வரு மாறு:- காவிரிப் பிரச்சினையில் உரிய தீர்வு இல்லாத நிலையில், ஆளும் அ.தி.மு.க. வுடனான தோழமை உணர்வில் சிக்கல் ஏற்பட்ட கார ணத்தால் தமிழ கத்திற்கு வந் திருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்பார்த்த அளவிற்கு வர வேற்பு இல்லை. அண்மையில் மாமல்லபுரத் திற்கு அருகே திரு விடந்தையில் நடைபெற்ற ராணுவக் கண்காட் சியைத் திறந்து வைக்க பிரதமர் மோடி வருகை தந்திருந்தார். மாநில பா.ஜ.க நிர்வாகிகளி டையே உள்ள மோதல் போக்கு மற்றும் காவிரிப் பிரச்சினையில் திடமான நிலையை உருவாக்கத் தவறி விட்டதால் இப்பிரச்சியில் தி.மு.க.வும் அதன் தோழமை கட்சி களும் மேற்கொண்ட நிலையானது உறுதியான ஒரு வலுவான தோற்றத்தை ஏற்படுத்தி விட்டது. தேர்தலும் ஒருமித்து செயல்பட வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது அத்துடன் மாறுபட்ட நிலையி லும் வலுவான எண் ணத்துடன் தொடர்ந்து நீடித்து தேர்தலிலும் ஒருமித்து செயல்படுவதற்கான வாய்ப்பையும் அது ஏற்படுத்தி இருக்கிறது. சென்னைக்கு ராணுவக் கண் காட்சியைத் திறந்து வைக்கவும், அந்தக் கண்காட்சியின் முக்கியத் துவம் குறித்து விளக்கவும், தமிழ கம் மற்றும் கர்நாடக மாநிலங்க ளுக்கு ராணுவ பாதுகாப்பு நடை பாதை (காரிடர்) அமைப்பது குறித்து ஆலோசிக்கவும் பிரதமர் வருகை தந்த போது, பொதுமக்களுடன் அவர் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இது பா.ஜ.க.வின் ஒழுக்கச் சிதைவை வெளிப்படுத்துகிறது. அத்துடன், காவிரிப் பிரச்சினை யில் எதிர்க் கட்சியினர் மேற் கொண்ட நடைமுறைகளைப் போல் ஆளும் அ.தி.மு.க. அரசு அதை முறையாக பயன்படுத்திக் கொள்ள வில்லை. தி.மு.க.தலைமையிலான கட்சி களின் ஏப்.5 ஆம் தேதியின் மாபெரும் முழு அடைப்பு போராட்டம் பலதரப்பு மக்க ளிடையே உணர்ச்சி கரமான உத்வேகத்தை ஏற்படுத்தியது. அத்துடன் கருப்புக் கொடி ஆர்ப் பாட்டம், மோடியே திரும் பிப் போ (படி யெஉம அடின) உள்ளிட்ட போராட் டங்கள் பா.ஜ.க.வை திகைப்படை யச் செய்து விட்டன. அதுமட்டு மின்றி, எதிர்க்கட்சியினரின் போராட் டங்களை உரிய முறையில் எதிர்கொள்ளவும் முடியாமல் தகுதி யற்றதாக ஆக்கிவிட்டது. பா.ஜ.க.வின் மாநிலச் செய லாளர் கே.டி.ராகவன் இதற்காக அ.தி.மு.க. அரசைக் குறை கூறி கருத்து தெரிவித்துள்ளார். நாங் கள் ஒன்றும் தோற்றுப் போக வில்லை. நீதிமன்ற உத்தரவுகளை அமல் படுத்த காத்துக்கொண் டிருக்கிறோம். ஆனால் அ.தி.மு.க. அரசு என்ன செய்து கொண்டிருக் கிறது.? சட்டம் ஒழுங்குப் பிரச்சினை என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. அவர் கள் முறைப்படி செயல்பட ஏன் தவறி விட்டார்கள்? என்று அவர் கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்து, பிரத மரின் சென்னை வருகையை விமர்ச்சித்தது பற்றி அவர் கூறும்போது, அ.தி.மு.க. அரசு ஏன் ஆர்ப் பாட்டக்காரர்களை முன்னெச்சரிக்கை என்கிற பெயரில் கைது செய்யவில்லை? ``அ.தி.மு.க. அரசு ஆர்ப்பாட்டக் காரர்களை அனுமதித்துள்ளனர். அது வேண்டும் என்றே செய்த தா? என்றும் கேள்வி எழுப்பினார். பல மாநிலங்களுக்கு இடையே யான காவிரிப் பிரச்சினையில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு, கர் நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடை பெறும் சட்ட மன்றத் தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அந்தக் கட்சி, கர்நாடகா வில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ப தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் கால அவகாசம் கேட்டுள்ளது. தமிழிசை சௌந்தரராஜன் மீது பா.ஜ.க.வினரே கடும் கோபம் கொண்டுள்ளனர்! தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் மீது அக்கட்சியினர் சிலரே கோபத்தில் இருக்கிறார்கள். இதைச் சரிப் படுத்த பா.ஜ.க. தவறி விட்டது என்று பெயர் சொல்ல விரும்பாத மாநில பா.ஜ.க. முன்னணித் தலை வர்களில் ஒரு வர் தெரிவித் துள்ளார். பொது மக்களைச் சந்திக்க வேண்டுமென்ற மோடியின் விருப்பமும் நிறைவேறவில்லை! மோடி தனது பயணத்தின் போது பொது மக்களைச் சந்திக்க விரும்பினார். அது முழுவதுமாக நடைபெறாமலே போய்விட்டது. காவல் துறை யினர் பொதுமக்களை நெருங்க விடவில்லை. அத் துடன் ஆளும் அ.தி.மு.க.வும் போராட்டக் காரர் களை போராட்டம் நடத்தவும் அனுமதித்து விட் டது. மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. தொண்டர்களின் மரியாதை குறைந்து விட்டது. பொதுமக்க ளின் கருத்துக்களைக் கட்சியின் உயர்மட்டத்திற்கு தெரி வித்திருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தனது நிலையை வெளிப்படுத்த தமிழக பா.ஜ.க. தோற்றுவிட்டது! காவிரிப் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சி யினர் நடத்தும் போராட்டங்களை எதிர்கொள்ளும் செயல் திட்டம் குறித்து பா.ஜ.க. வின் உயர்மட்டத் தில் விவாதிக் கவும் இல்லை. அதுமட்டுமின்றி காவிரிப் பிரச்சினை குறித்து அறிக்கைகள் வெளியிடுவதில் ஒருங்கிணைந்து செயல்படவும் எந்தவித முயற்சியும் எடுக்க வில்லை என்று மாநில பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்தனர் ஒட்டுமொத்தமாகச் சொல்வ தானால், ஏற் கனவே இருந்து வரும் பிரச்சினைகளுக்கிடையே காவிரி போன்ற மிக முக்கியமான பிரச்சி னைகளில் தனது நிலையை வெளிப்படுத்த தமிழக பா.ஜ.க. தோற்று விட்டது என்று தான் கூறவேண்டும். இவ்வாறு `சண்டே டைம்ஸ் தனது செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.