மத்திய அரசு வன்கொடுமை

சென்னை, ஏப். 16- மத்திய அரசு வன் கொடுமை தடுப்பு சட்ட விவகாரத்தில் மேல் முறை யீடு செய்யாததை கண் டித்து கழகச் செயல் தலைவர் தளபதி அவர் கள் தலைமையில் இன்று (16.04.2018) சென்னை வள்ளுவர்கோட்டம் அரு கில் நடைபெறும் ஆர்ப் பாட்டத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழகத் தினர் அணி திரண்டு வர வேண்டும் என்று காஞ்சி புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன் பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கழக செயல் தலைவர் தளபதி அவர்கள் தலை மையில் நடைபெற்ற தி.மு.க. மற்றும் தோழ மைக் கட்சிகளின் கலந் தாய்வு கூட்டத்தில் வன் கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக மத்திய அரசை எதிர்த்து மா பெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர் மானிக் கப்பட்டது. வன் கொடுமைகள் தடுப்பு சட்டத் தினை நீர்த்து போகின்ற வகையில் அண்மையில் உச்சநீதி மன்றம் ஒரு தீர்ப் பினை வழங்கியுள்ளது அதனை எதிர்த்து வட மாநிலங் களில் நடை பெற்ற முழு அடைப்பு போராட் டத்தில் காவல் துறை யினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுமார் பத்து பேர் பலியானார் கள் ஏராளமானவர்கள் தடி யடியில் காயமடைந் துள்ளனர். இந்நிலையில் வட மாநிலங்களில் நடந்த துப்பாக்கி சூடு, தலித் மக்கள் படுகொலை உள் ளிட்ட வன்கொடுமைக களை கண்டிக்கின்ற வகையிலும் வன் கொடு மைகள் தடுப்பு சட்டத் திற்கு எதி ரான உச்சநீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல் முறையீடு செய்ய வேண் டுமென வலியுறுத்தியும் வன் கொடுமை சட்டத் தினை அரசியல் அமைப்பு ஒன்ப தாவது அட்டவணையில் இணைக்க வற்புறுத்தியும் இன்று 16-ம் தேதி திங்கட் கிழமை காலை 9.30 மணி யளவில் கழகச் செயல் தலைவர் தளபதி அவர் களின் தலைமை யில் அனைத்து தோழ மைக் கட்சி தலைவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர் பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். எனவே இம்மா பெரும் கண்டன ஆர்ப் பாட்டத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய - நகர - பேரூர் கழக செயலாளர் கள் மற்றும் நிர்வாகி கள்,தலைமைப் பொதுக் குழு உறுப்பினர் கள், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், கழக அணிகளின் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர் கள், கழக முன்னோடி கள் மற்றும் கழகச் செயல் வீரர்கள் உட்பட ஒட்டு மொத்த கழகத் தோழர் களும் இன்று காலை 9.30 மணிக்கெல் லாம் வள்ளு வர் கோட் டத்தில் அணி திரண்டு வந்து பங்கேற்று இம்மா பெரும் கண்டன ஆர்ப் பாட்டத்தை வெற்றி பெற குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு காஞ்சி புரம் வடக்கு மாவட்டச் செய லாளர் தா.மோ. அன்பரசன் அறிக்கை யில் கூறினார்.