மத்திய நீர்வளத் துறைச் செயலாளர் நேரில் ஆஜரா

புதுடெல்லி, மே 14- காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு - அது தொடர்பான செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய் யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் சட்ட சபைத் தேர்தல் நடைபெறுவதால் அங்கு பா.ஜ.க.விற்கு ஆதரவாகப் பிரதமரும் தொடர்புடைய அமைச் சரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதால், காவிரி பிரச்சினைத் தொடர் பாக ஏற்படுத்தப்பட்டுள்ள வரைவு செயல் திட்ட அறிக்கைக்கு அவர்களிடம் ஒப்புதல் பெற முடியவில்லை என்பதால், இந்த வழக்கைத் தள்ளிப் போட வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு, அதற்காக உச்சநீதிமன்றமும் இரண்டு முறை ஒத்தி வைத்து, நிறைவாக மே 14ஆம் தேதி மத்திய நீர்வளத் துறை செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. கர்நாடக தேர்தலும் முடிந்து விட்டது; பிரதமரும் தேர்தல் பிரச் சாரத்தை முடித்துக் கொண்டு வாக்குப் பதிவு தினத்தன்று நேபாளத்தில் சுற்றுப் பயணம் செய்து திரும்பிய நிலையில், காவிரிக்கான செயல் திட்டம் குறித்து விவாதித் திருப்பார். எனவே, உச்சநீதிமன்றத் தின் உத்தரவுப்படி இன்று மத்திய அரசு தனது வரைவு செயல்திட்டம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும் என்று நம்பப்படுகிறது. இதுகுறித்து விவரம் வருமாறு :- உச்ச நீதிமன்றத்தில் இன்று, காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என்ற நம்பிக்கையில், தமிழக அரசும் விவசாயிகளும் உள்ளனர். கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவடைந்ததால், இனியும் இவ்விவகாரத்தில், மத்திய அரசு காலம் கடத்தாது என்ற எதிர்பார்ப்பு, எல்லா தரப்பினருக்கும் ஏற்பட் டுள்ளது. இன்றைய விசாரணையின் போது, தமிழகத்திற்கு, காவிரியில் உரிய தண்ணீர் திறக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் வாய்ப்பு இருப்பதாகவும் நம்பப்படுகிறது. காவிரி இறுதித் தீர்ப்பு தொடர்பாக, தமிழக அரசு, மத்திய அரசு, புதுச்சேரி மற்றும் கேரள அரசுகள் தாக்கல் செய்த மனுக்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு முன், இரண்டாம் முறையாக ஏப். 9ல், விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, உச்ச நீதிமன்றம், பிப். 16ல் அளித்த தீர்ப்பு தெளிவாக உள்ளது. செயல் திட்டம் என்பது, காவிரி மேலாண்மை வாரியத்தை மடடுமே குறிப்பிடுகிறது.அதே சமயம் தீர்ப்பு தெளிவாக இல்லை என, மத்திய அரசு கூறுவதை ஏற்கக் கூடாது என்று வாதிட்டார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான, தலைமை வழக்கறிஞர் வேணு கோபால், சில குழப்பங்கள் உள்ள தால், தீர்ப்பை அமல்படுத்த, மூன்று மாதம் அவகாசம் வேண்டும்; விரிவான செயல் திட்டம் என்பது, காவிரி நடுவர்மன்ற உத்தரவில் தெரிவித்த படி, அமைக்க வேண் டுமா என்பதை, தெளிவுப்படுத்த வேண்டும் என்றார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள், காவிரி இறுதி தீர்ப்பில் தெரிவிக் கப்பட்டுள்ள, விரிவான செயல் திட்டம் தொடர்பான வரைவை, நீதிமன்றத்தில், மே, 3க்குள், மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். மாநிலங்களின் கருத்துகளை கேட்ட பின், செயல் திட்ட வரைவில் மாற்றம் செய்வது குறித்து, நீதிமன்றம் முடிவு செய்யும் என தெரிவித்திருந்தனர். ஆனால் மே, 3ம் தேதியும், வரைவு திட்டத்தை, மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை; மத்திய அரசு சார்பில், மேலும், 10 நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மே, 14ம் தேதி வரைவு செயல் திட்டத்தை கட்டாயம் தாக்கல் செய்ய வேண் டும். அன்றைய தினம், மத்திய நீர் வளத்துறை செயலர் யு.பி. சிங், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். கர்நாடகா தேர்தல் கார ணமாகவே, மத்திய அரசு, காவிரி வரைவு செயல் திட் டத்தை தாக்கல் செய்யாமல், அவகாசம் கேட்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது. நேற்று முன்தினம் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்தது. எனவே, காவிரி வரைவு திட்டத்தை மத்திய அரசு இன்று தாக்கல் செய்யும் என்கிற நம்பிக்கை உள்ளது. அதை உறுதி செய்யும் வகையில், உச்ச நீதிமன்ற உத்தர வின் படி, மே, 14ல், காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும். மேலும், கால அவகாசம் கேட்கப் படாது என மத்திய நீர்வளத் துறை செயலர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசு, காவிரி வரைவு செயல் திட்டத்தை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால், அதன் அடிப் படையில், தமிழகத்திற்கு, காவிரி யில் தண்ணீர் திறக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் என்ற, எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, வரைவு செயல் திட்டத்தில் உள்ள சாதக, பாதக அம்சங்களை அறிந்த பின், அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வும் காவிரி பிரச்சினை, தமிழகத் தின் ஜீவாதார பிரச்சினையாக இருப்பதால், மத்திய அரசின் வரைவு திட்டத்தை, விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்த படி உள்ளனர்.