குட்கா விற்பனை அமோகம்!

மும்பை, மே 14 - குட்கா அமோகமாக விற்பனையாகும் தமிழ் நாட்டில் புற்றுநோய் அதி கரிக்கும் அபாயம் ஏற்பட் டுள்ளது. அடுத்த 7 ஆண்டு களில் - அதாவது 2025 ல் அதிக நகர்ப்புறங்களில் பரவும் நோயாக இந்த புற்று நோய் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. மும்பையை மையமாகக் கொண்டுள்ள பன்னாட்டு மக்கள்தொகை அறிவியல் தொடர்பான மையம் ஒன்று சமீபத்தில் ஆய்வு ஒன்றில் இந்த பயங்கரமான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் அதிக அளவில் குட்கா, புகை யிலை உள்ளிட்ட போதைப் பொருள்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன என்றும் அதற்கு அமைச்சர்கள் மட்டத் திலும், காவல் துறை அதிகாரி கள் மட்டத்திலும் அதிக ஆதரவு இருப்பதாகக் தெரி விக்கப்பட்டு அது தொடர்பான வழக்கும் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டு, அங்கும் சி.பி.ஐ. விசார ணைக்கு உத்தரவிடப்பட்டி ருக்கிற நிலைமை இருந்து வருகிறது. இதற்கிடையே அடுத்த 7 ஆண்டுகளில் தமிழகம் அதிக புற்று நோய் பாதிக்கும் மாநில மாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள்தோறும் புற்று நோய் தொடர்பான ஆய்வு ஒன்றை அந்த நிறுவனம் மேற் கொண்ட அதன் கண்டுபிடிப்பு களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து மாநிலங் களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டில் பெருவாரியான நகர்ப்புறங்களில் புற்று நாய் தாக்கம் அதிகரித்து காணப் படும் என்று தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவில் 13 லட்சத்து 72 ஆயிரத்து 885 புற்று நோயாளி கள் உள்ளனர். அதுவே அடுத்த 7 ஆண்டுகளில் - அதாவது 2025ல் 17 லட்சத்து 95 ஆயிரத்து 975 பேராக அதிகரிக்க வாய்ப்புண்டு. ஏற்கனவே தமிழகத் தில் பெண்களுக்கு புற்றுநோய் அதிக அளவில் இருக்கிறது. அதற்கு அடுத்து உத்தர பிரதேச மாநிலத்தில் பெண் களுக்கு அதிக அளவில் புற்றுநோய் தாக்கம் இருக்கிறது. அடுத்து வரும் 2025ம் ஆண்டில் நாட்டிலேயே நகர்ப் புற பகுதிகளை எடுத்துக் கொண்டால் அதிக அளவில் தமிழகத்தில் தான் புற்றுநோய் அதிக அளவில் இருக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவ்வாறு அந்த ஆய் வறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. குட்கா தயாரிக்கும் தொழிற் சாலைகள், குடோன்கள் என மாநிலம் முழுவதும் இந்த குதி ரை பேர ஆட்சியில் பரவலாக செயல்பட்டு வருவதும் அனை வரும் அறிந்த ஒன்றாகும். இந்நிலையில் தமிழகத் தில் புற்றுநோய் தாக்கம் அதி கரிக்கும் என்கிற தகவல் வந் திருப்பதும் குறிப்பிடத்தக்கது.