முல்லை பெரியாறு அணையில்

தேனி, மே 14- தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே துவங்கவுள்ள நிலையில், முல்லை பெரியாறு அணையில், ஜூன், 7ல், மூவர் குழு ஆய்வு நடத்துகிறது. முல்லை பெரி யாறு அணை வாயி லாக, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவ கங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாச னம், குடிநீர் உள்ளிட்ட தேவைகள் பூர்த்தியாகின் றன. மொத்தம், 10.5 டி.எம்.சி., கொள்ளளவு உடைய அணையில், உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, 7.66 டி.எம்.சி., நீரை மட்டுமே, தேக்கி வைக்க முடியும். அணையை கண் காணிப்பதற்காக, மத்திய நீர்வள கமிஷன் தலைமை பொறியாளர் குல்ஷன் ராஜ், தமிழக பொதுப் பணித்துறை செயலர் பிரபாகர், கேரள நீர்வளத் துறை செயலர் டிங்கு பிஸ்வால் அடங்கிய, மூவர் குழு அமைக் கப்பட்டுள்ளது. இக் குழு வினர், அவ்வப்போது ஆய்வு செய்து வருகின் றனர். இறுதியாக, 2017 நவ., 14ல், அணையில் ஆய்வு செய்தனர். கேரளாவில், தென் மேற்கு பருவ மழை முன் கூட்டியே துவங்க வுள்ளதால், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, அணையின் பாதுகாப்பு குறித்து, ஜூன், 7ல், மூவர் குழு வினர் ஆய்வு நடத்த வுள்ளனர். ஆறு மாத இடைவெளிக்கு பின், இந்த ஆய்வு நடக்கவுள் ளது. ஆய்வுக்கு பின், குமுளியில் உள்ள அலுவலகத்தில், குழுவினர் ஆலோ சனை நடத்துகின்றனர்.