எழும்பூர், சென்ட்ரல் உள்பட

சென்னை, மே. 14- எழும்பூர் சென்ட்ரல் உள் பட 6 ரயில் நிலையங் களில் மெட்ரோ சுரங்க ரயில் இந்த மாதம் இறுதி யில் ஓடுகிறது. நாளை பாதுகாப்பு ஆணையர் பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக் காகவும் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப் பட்டது. கோயம்பேடு- ஆலந் தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதை யிலும், திருமங்கலம் - நேரு பூங்கா வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரயில் பயணிகள் சேவை தற்போது நடந்து வரு கிறது. மெட்ரோ ரயில் சேவைக்கு பொது மக்க ளிடம் பெரிதும் வரவேற்பு ஏற்பட்டதை யொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ பணிகள் விரிவு படுத்தப்பட்டு வருகிறது. நேரு பூங்கா - சென் ட்ரல், சைதாப்பேட்டை - தேனாம்பேட்டை டி.எம். எஸ் வரையிலான பணி கள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. இந்த வழித்தடத்தில் மெட்ரோ திட்டப் பணிகள் குறித்து பாது காப்பு ஆணையர் மனோ கரன் நாளை ஆய்வு செய்கிறார். ஷெனாய் நகர் - நேரு பூங்கா 2-வது வழிப் பாதை பணிகளும் முடி வடைந்து உள்ளது. அந்தப் பணிகள் குறித் தும் பாதுகாப்பு ஆணை யர் ஆய்வு மேற் கொள் கிறார். பணிகள் குறித்து ஆய்வு முடிந்து ஒப்புதல் அளித்ததும் இந்த மாதம் இறுதியில் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள் ளது. இம்மாத இறுதியில் பயணிகள் சேவை நேருபூங்கா - சென் ட்ரல் வழத்தடத்தில் எழும்பூர், சென்ட்ரல் 2 ரயில் நிலையங்களும், சைதாப்பேட்டை - டி.எம். எஸ் வழத்தடத் தில் சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம் பேட்டை, டி.எம்.எஸ் உள்பட 4 ரயில் நிலையங் களும் புதிதாக அமைக் கப்பட்டுள்ளன. இந்த வழித்தட பாதையில் இம் மாத இறுதியில் பயணி கள் சேவை தொடங்கப் பட உள்ளது. சென்ட்ர லில் இருந்து விமான நிலையத்துக்கு எழும்பூர், நேரு பூங்கா வழியாக இனிமேல் பயணிகள் நேரடியாக எளிதில் செல்ல முடியும். இத னால் பயணிகள் பயண நேரம் வெகுவாகக் குறை யும். பொதுமக்கள், பயணிகள் பெரிதும் பயன் பெறுவார்கள்.