உச்சநீதிமன்றத்தின் கண்டனங்களிலிருந்து தப்

சென்னை, மே 15- காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் - சட்டரீதியாக செயல் படுத்தவும் உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தும் வகையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பு களின் கூட்டத்தை நாளையே (மே-15) மாநில அரசு கூட்ட வேண்டும் என்று கழகச் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அ.தி.மு.க. அர சுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :- அரசியல் காரணங்களுக்காகவும், தேர்தல் லாபத்திற்காகவும் தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வந்த மத்திய பா.ஜ.க. அரசு, கர்நாடக மாநில தேர்தல் முடிவடைந்த நிலையில், காவிரி நீர் உரிமை தொடர்பாக உச்சநீதிமன்றத் தில் சீலிடப்பட்ட கவரில் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்திருக்கிறது. நீதிமன்றத்தின் தொடர்ச்சியான கண்டனங்களிலிருந்து தப்பிக்கின்ற வகையில், தனது வரைவுத் திட்ட விவரங்களை சமர்ப்பித்திருக்கும் மத்திய அரசு, அதனை முழுமையாக எப்போது நடைமுறைப்படுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித் துள்ளது. தமிழ்நாட்டு மக்களும் - காவிரி டெல்டா விவசாயிகளும் எதிர்பார்ப்பது, நடுவர்மன்றத்தின் இறுதித்தீர்ப்பின் அடிப்படையிலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், முழுமை யான அதிகாரமிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். அதனை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் கொண்ட மத்திய பா.ஜ.க. அரசு, வாரியத்திற்குப் பதிலாக ஆணையம், குழு என்றெல்லாம் மாற்றுவழிகள் கொண்ட பெயர்களை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தில் தக்க பதிலளித்து, காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மாற்றாக எந்த அமைப் பையும் ஏற்க இயலாது என வலியுறுத்த வேண்டிய கடமை, மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு இருக்கிறது. தவிடு தின்கிற ராஜாவுக்கு முறம் பிடிக்கின்ற மந்திரிகள் என்பதுபோல, தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசு முன்வைக்கின்ற திட்டங்களையெல்லாம் வரவேற்கும் அ.தி.மு.க. அரசு, காவிரி உரிமை விவகாரத்திலும் தொடர்ந்து இதேபோக் கில் செயல்படாமல், மே 16ந் தேதி நடைபெறும் விசாரணையில் தனது வாதங்களை அழுத்தமாக எடுத்து வைத்திட வேண்டும் என வலியுறுத்து கிறேன். முழு அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் தேவை! காவிரி மேலாண்மை வாரியத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற டெல்டா விவசாயிகள், மத்திய அரசின் வரைவுத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், அந்த வரைவுத் திட்டத் துக்கு ஆதரவாக டெல்லியில் கருத்து தெரிவித்த தமிழக சட்ட அமைச்சரின் அறியாமையையும் எள்ளி நகையாடு கின்றனர். இந்நிலையில், உச்சநீதி மன்றம் தமிழகத்தின் நலனை மனதில் கொண்டு, இனியும் கால அவகாசம் வழங்காமல், முழு அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க ஆவன செய்யவேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் கடைசி கட்ட எதிர்பார்ப்பாகும். காவிரியில் தமிழ கத்தின் உரிமையை நிலைநாட்டும் அமைப்பான நடுவர் மன்றம் அமைய, அயராது பாடுபட்டு வெற்றி கண்ட தலைவர் கலைஞர் அவர்களின் வழியில், நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் அம்சங்களை செயல் படுத்துவதற்கு, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து செயல்படும். காவிரி விவகாரத்தில் எவ்வித அரசியல் மாச்சரியங்களுக்கும் இடம் தராமல், தமிழ்நாட்டின் நலன் ஒன்றையே கருத்திற்கொண்டு செயல்படும் வகையில், மேலாண்மை வாரியத்தை அமைக்கச் செய்யவும், சட்டரீதியாக அதனை செயல் படுத்தவும், அது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மாநிலத்தின் சார் பில் வலியுறுத்த வும், நாளையே (மே 15) தமிழகத்தின் அனைத்துக் கட்சி கள் - அனைத்து விவசாய அமைப்பு களின் கூட்டத்தை அ.தி.மு.க. அரசு கூட்ட வேண்டும் என வலியுறுத்து கிறேன். இவ்வாறு கழகச் செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளார்.