மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தலில் வன்முறை!

கொல்கத்தா, மே 15- மேற்கு வங்க மாநிலத் தின் பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை துவங்கியது. 58 ஆயிரத்துக்கும் அதிக மான இடங்கள் உள்ள அம்மாநிலத்தின் 38,605 இடங்களில் நேற்று தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு துவங்கு வதற்கு முன்பிருந்தே மேற்கு வங்காளத்தின் பல கிராம பகுதிகளில் அரசி யல் கட்சியினரிடையே மோதல் வெடிக்கத் துவங் கியது. வாக்குச்சாவடி களை கைப்பற்றுவது, பொதுமக்களை வாக்க ளிக்க விடாமல் தடுப்பது, வெடிகுண்டு தாக்குதல் போன்றவை அரங்கேறின. இந்நிலையில், சாந்திபூர் பகுதி யின் நதியா மாவட்டத்தில் உள்ள தேர்தல் வாக்குப்பதிவு மையத்தை கைய கப்படுத்தச் சென்ற திரிணாமூல் காங் கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர் சவுஜித் பிராம னிக் அப்பகுதி மக்களால் அடித்துக் கொல்லப் பட்டார். மேலும், பிரக்னாஸ் அம்டங்கா பகுதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 12 பேர் உயிரி ழந்தனர். மேலும், சுமார் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். முர்ஷிதாபாத் பகுதி யில் பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் கொல்லப் பட்டதை யடுத்து, திரிணா முல் காங் கிரசைச் சேர்ந்த ஆரிப் அலி என்ப வர் சுட்டுக் கொல் லப்பட்டார். கம்யூனிஸ்ட் கட் சியைச் சேர்ந்த கணவன் மனைவி கொல் லப்பட்டு, அவர்களது வீட்டிற்கு தீ வைக்கப் பட்ட சம்பவ மும் அரங்கேறியுள்ளது. தொடரும் கலவரங் கள் காரணமாக, பொது மக்கள் வாக்குச்சாவடி களுக்குச் செல்ல அச்சம் தெரிவித்துள்ளனர். வன் முறை கும்பலால் 5 பத்தி ரிகையாளர்களும் கடுமை யாக தாக்கப்பட்டனர். வடக்கு பிராக்னஸ் மாவட்டத்தில் உள்ள துட்டாபூர் வாக்குச் சாவ டிக்குச் செல்ல முயன்ற பா.ஜ.க.வைச் சேர்ந்த பெண் வேட்பாளர் திரி ணாமூல் காங்கிரசைச் சேர்ந்தவர்களால் தாக்கப் பட்டுள்ளார். மேலும், அவருக்கு கொலை மிரட் டலும் விடுக்கப்பட்டுள் ளது.