சென்னை சேலையூரில்

ஆலந்தூர், மே 15- சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள மப்பே டில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் 10 நாட் களுக்கு முன் புதி ததாக டாஸ்மாக் மதுக் கடை திறக் கப்பட்டது. இங் குள்ள மதுபான பாரில் குடிக்க வருபவர்கள் அருகில் உள்ள வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் வம்பு செய்வது, வீடுகளில் உள்ள பொருட்களை திருடிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதனால் அந்த மதுக் கடையை மூடவேண்டும் என அப்பகுதியினர் கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக வாரவிடுமுறை நாட்கள் என்பதால் அதிகமான வர்கள் வந்து மது அருந்திவிட்டு குடியிருப்புகளில் உள்ளவர்க ளுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத் திரமடைந்த அப்பகு தியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வர்கள் நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு மதுபான கடை திறந் ததும் கடைக்குள் புகுந்தனர். மதுபான கடைக்குள் கற் களையும் வீசி எறிந்தனர். பின் னர் மதுபான பாரில் மது அருந்த வந்தவர்களை விரட்டியடித்து அங்கிருந்த மேஜை, நாற்காலி ஆகியவற்றை அடித்து நொறுக்கி னார்கள். உணவு பொருட்களை யும் தூக்கி எறிந்தனர்.