தமிழகம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி

சென்னை, ஜூன் 13- தமிழகம் முழுவதும் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் கூட்டமைப்பைச் (ஜாக்டோ - ஜியோ) சேர்ந்தவர்களை அழைத்து முதல மைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி பிரச் சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவ ரும், கழகச் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கை ஏற்கப்படாததால் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக உறுப்பினர்கள் அனைவரும் பேரவை யிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர்களும் அதே கோரிக்கையை வலியுறுத்தி பேரவை யிலிருந்து வெளி நடப்பு செய்தனர். தமிழக சட்டப்பேரவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை நேரமில்லா நேரத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரும், கழகச் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர் கள் இதுகுறித்துப் பேசியதாவது :- அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்புகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு ஜாக்டோ - ஜியோ. அந்த, ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பிலே, நேற்றைய தினம் காலவரையற்ற ஒரு உண்ணா விரதப் போராட்டத்தை அவர்கள் அறி வித்து, அதனை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்று காலையிலே நான் சட்டமன்றத்திற்கு வருகிற நேரத்தில்கூட அவர்களை யெல்லாம் நான் சந்தித்து விட்டுதான், இந்த அவைக்கு வந்திருக்கிறேன். அப்படி சந்தித்த நேரத்தில், அவர்கள் என்னிடத்தில் பல கோரிக்கைகளை எல்லாம் முன்வைத்து இருக்கிறார்கள். இவையெல்லாம் என்னிடத்தில் புதிதாக முன்வைத்த கோரிக்கைகள் அல்ல, ஏற்க னவே, அரசிடம் முன்வைத்த கோரிக்கை கள்தான். அந்த அமைப்பைச் சார்ந்து இருக்கக்கூடியவர்கள் கடந்த 17 மாதங் களாக பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து தமிழகத்திலே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு எழிலகத்திலே சுமார் 150 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்த உண்ணாவிரதப் போராட்டம் மட்டு மல்ல, ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாவட்டத் தலைநகரங்களில் 40,000 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடிய வகையில் தொடர்ந்து அந்த போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அவர்கள், இந்த அரசிடம் எடுத்து வைக்கும் கோரிக்கைகள் என்னவென்று கேட்டால், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், ஆசிரியர்கள், அரசு ஊழியர் கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்ற கோரிக்கை, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையை உடனே அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை. அதுமட்டுமல்ல, சிறப்பு கால முறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலா ளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெறுவோர், கணினி ஆசிரியர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையையும் எடுத்து வைத்திருக்கிறார்கள். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கு மறுக்கப்பட்டுள்ள 21 மாத கால ஊதியக்குழு நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை எல்லாம் அடிப்படையாக வைத்து போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். 3 லட்சத்து 75 ஆயிரம் காலிப் பணியிடங்கள்! அதுமட்டுமல்ல, 3 லட்சத்து 75 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இருக்கின்ற நேரத் தில், மேலும் பணியாளரை குறைக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆதி சேசய்யா தலைமையில் போடப்பட்டுள்ள குழுவை கலைக்க வேண்டும் என்றும், பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டு உள்ள அரசாணைகள் 100 மற்றும் 101 மூலமாக ஒழிக்கப்பட்டுள்ள ஆசிரியர் பணியிடங் களை திரும்பவும் உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஏற்கனவே, இந்த அரசு ஊழியர்கள் 8.5.2018 அன்று இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி ஒரு முற்றுகைப் போராட்டத்தினை நடத்திட முயற்சித்த நேரத்தில், அதை இந்த அரசு தடுத்து நிறுத்தி இருக்கிறது. எப்படி மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஆசிரி யர்கள் தேவையோ, அதேபோல் மக்களின் சேவைக்கு அரசு ஊழியர்கள் தேவை தான் அவசியமாக இருக்கிறது. எனவே, பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவோ, ஆசிரியர் பணியிடங்களை ஒழிக்கவோ இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்கக் கூடாது என வலியுறுத்தி, வற்புறுத்தி கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். முதலமைச்சர் அவர்களையும், இந்த அரசையும் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, போராட்டத் திலே ஈடுபட்டிருக்கும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை உடனடி யாக முதலமைச்சர் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி, அவர்கள் கேட்கக்கூடிய கோரிக்கைகள் எது நியாயமாக நிறைவேற்ற வேண் டுமோ, எதற்கு முன்னுரிமை தர வேண்டுமோ அதனையெல்லாம் நிறைவேற்றி, அவர்கள் போராட் டத்தை நிறுத்தக்கூடிய அளவிற்கு அவர்களிடம் பேசிட வேண்டுமென நான் வலியுறுத்தி வற்புறுத்தி கேட்டு அமர்கிறேன். உண்ணாவிரதம் இருப்போரை அழைத்துப் பேசிட வேண்டும்! நான் இங்கு எடுத்து வைத்த கோரிக்கை, அதேபோல, எதிர்க் கட்சியினு டைய தலைவர்கள் எல்லாம் எடுத்து வைத்த கோரிக்கைக்கு துணை முதல மைச்சர் அவர்கள் ஒரு விளக்கம் தந்திருக் கிறார்கள். அந்த விளக்கத்திற்குள் செல்ல நான் விரும்பவில்லை.நான் கேட்கின்ற ஒரே ஒரு வேண்டுகோள், ஒரே ஒரு கோரிக்கை, இன்று காலையில் கூட உண்ணாவிரதப் போராட்டத் திலே ஈடுபட்டிருக்கக் கூடிய அந்த நிர்வாகிகளை, அரசு ஊழியர்களை ஆசிரியர்களை எல்லாம் சந்தித்து விட்டுதான் வந்தேன். நானே சொன்னேன், தங்கள் உடலை வருத்திக் கொண்டு இந்தப் போராட்டம் தேவைதானா என்று ஒரு வேண்டுகோளாய் எடுத்து வைத்த பொழுது, அவர்கள் சொன்னது எங்களை முதலமைச்சர், அரசு அழைத்துப் பேசிட வேண்டும். காலவரை யற்ற உண்ணாவிரதத்தை அறிவித் திருக் கிறார்கள், இன்று இரண்டாவது நாள், ஆகவே நீங்கள் தயவு கூர்ந்து அவர்களை அழைத்துப் பேசிட வேண்டும். அதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்கிறார்? இந்த அரசினுடைய பதிலை நாங்கள் எதிர்பார்க்கின் றோம். (துணை முதலமைச்சர்) நான் தூண்டிவிட்டு வந்ததாக சொல்கிறார்கள். அந்த பொருள் பட அவர் நினைப்பார் என்று சொன் னால், நாங்களும் அவர்கள் சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்று கிறோம் என்று நீங்கள் சொன்னால் நாங்கள் தூண்டிவிட வேண்டிய அவசியமே வந்திருக்காது. எனவே, நீங்கள் அதை எப்படி ... (அவைக் குறிப்பிலிருந்து நீக்கம்) நடைபெற்ற அந்த போராட்டத்திலே அவர்களை எல்லாம் நீங்கள் அழைத்துப் பேசாமல் ஏற்பட்ட நிலை போலதான் இப்போதும் நீங்கள் அழைத்துப் பேச முற்படக் கூடிய நிலையிலே இல்லை. வெளிநடப்பு எனவே, நீங்கள் அழைத்துப் பேசாத காரணத்தால் இதை கண் டித்து நாங்கள் திராவிட முன் னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களு டைய கண்டனத்தை தெரிவிக்கக் கூடிய வகையிலே வெளிநடப்பு செய்கிறோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் அவர் கள் அறிவித்து, கழக உறுப்பினர் களுடன் வெளிநடப்பு செய்தார். காங்கிரஸ் - முஸ்லிம் லீக் கட்சியினர் வெளிநடப்பு! அதைத் தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதன் சட்டமன்றக் கட்சித் தலைவர் கே.ஆர்.இராமசாமி தலைமையில் அதே காரணத்தை வலியுறுத்தி பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபுபக்கரும் அதே காரணத்தை கூறி பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.