எத்தனை வழக்குகள் போட்டாலும்

தானே, ஜூன் 13- மராட்டிய சட்டப் பேரவை தேர்தல் பிர சாரத்தின்போது மகாத்மா காந்தி கொலைக்கு ஆர்.எஸ். எஸ்.தான் காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் தானே மாவட்டம் பி வண்டியில் உள்ள கோர்ட்டில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்று ஆஜ ரான ராகுல் மீது பல் வேறு பிரிவு களின் கீழ் குற்றச்சாட்டு கள் பதிவு செய்யப்பட் டன. தொடர்ந்து ராகுல் காந்திக்கு ஆதரவாக அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ராகுல் காந்தி நீதிமன் றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் விவசாயிகள் பற்றி பிரதமர் மோடி பேசுவ தில்லை என கண்டனம் தெரிவித் துள்ளார். என் மீது பாரதீய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப் பினர் அவர்கள் விரும் பியபடி எத்தனை வழக்கு கள் வேண்டுமென்றா லும் போடட்டும். எங்க ளுடையது கொள்கைக் கான போராட்டம். நாங்கள் போராடி அவற்றை வெற்றி கொள்வோம் என்றும் கூறினார்.