2017 ஆம் ஆண்டில் வன்முறையால் மட்டும்

புதுடில்லி, ஜூன் 13- இந்தியாவில் பதற்றத்தை ஏற்படுத்துவது பா.ஜ.க. ஆட்சியின் மற்றொரு முகம். வன்முறைகள் வெடிக்க வைக்க சில உத்திகள் கையாளப்படுவதில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. பின்னணியில் எப்போதும் இருக்கும். இந்தியா வைப் பொறுத்தவரை மத துவேஷங்களை கிளப்பிவிட்டு கலவரங்கள் தூண்டப்படுகின்றன. இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் கலவரங்கள், வன்முறைகள் பல நடத்தப்பட்டுள் ளன. இதனால் ஏற் பட்ட இழப்பை கணக் கிடும் போது ரூ.80 இலட்சம் கோடி என்று ஒரு ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 9 சதவிகிதம். 2017-ஆம் ஆண்டில் இந்தியா வில் பல்வேறு வன்முறைகளால் ஏற்பட்ட செலவு மட்டும் ரூ.80 லட்சம் கோடிஎன்று பொருளாதா ரம் மற்றும் அமைதிநிறுவனம் நடத் திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலக அளவில் தீவிரவாதம், அரசியல் பதற்றம் உள்ளிட்ட காரணிகளால் வன்முறைகள் அதி கரித்துள்ளன. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள், கிழக்கு ஐரோப் பிய நாடுகள் மற்றும் வட கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட பகுதி களில் வன்முறைகள் அதிகரித் துள்ளன. இந்நிலையில், இந்த வன்முறை களால் ஏற்பட்ட செலவு தொடர் பாக பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் 163 நாடுகளில் ஆய்வு ஒன்றை நடத்தியுள் ளது.இதில், சர்வதேச அளவில் வன்முறை விளைவுகளால் ஆன செலவின்மதிப்பு 14.76 டிரில்லியன் டாலராக உள்ளது; இது உலக ஜி.டி.பி.யில் 12.4 சதவிகிதம்; நபர் ஒருவருக்குக் கணக்கிட்டால் இதன் மதிப்பு ஆயிரத்து 988 டாலராக உள்ளது என்றும் கூறப் பட்டுள்ளது. இந்தியாவில் வன்முறைகளால் ஆன செலவுகள் இந்தியப் பொரு ளாதாரத்தில் 1.19 டிரில்லியன் டாலராக (ரூ. 80 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது என்றும், நபர் ஒருவருக்கு என்று கணக்கிட்டால் தலா ரூ.40 ஆயிரம் செலவிடப் பட்டுள்ளது என்றும் கூறியுள்ள ஆய்வு, இந்தியாவில் செலவிடப்பட் டுள்ள இந்த தொகை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 9 சதவிகிதம் என்று மதிப்பிட் டுள்ளது. உலகில் வன்முறைகளால் அதிகம் செலவிட்ட நாடுகளில் சிரியா முதலிடத்தில் உள்ளது. இந்த நாடு தனது மொத்த ஜி.டி.பி. யில் 68 சதவிகிதத்தை வன்முறை களுக்காக செலவிட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் 63 சதவிகித செலவுடன் ஆப்கானிஸ் தானும், மூன்றாவது இடத்தில் 51 சதவிகித செலவுடன் ஈராக்கும் உள்ளன. சால்வடார்,தெற்கு சூடான். மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சைப்ரஸ், கொலம்பியா, சோமா லியா உள்ளிட்ட நாடுகள் வன் முறைகளுக்கு அதிகம் செலவிடும் முதல் பத்து இடங் களுக்குள் உள்ளன. உலகிலேயே வன் முறைகளின் விளை வுகளுக்காக குறை வாக செலவிடும் நாடாக சுவிட்சர் லாந்து உள்ளது. இந்தோனேசியா மற்றும் புர்கினா உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்து உள்ளன. வளர்ந்து வரும் நாடுகளைப் பொறுத்தவரையில் சீனா 1,704.62 பில்லியன் டாலர்களும், பிரேசில் 511, 364.9பில்லியன் டாலர்களும், தென் னாப்பிரிக்கா 239,480.2 பில்லியன் டாலர்களும் செலவிடு கின்றன. வளர்ந்த நாடுகளில் அமெ ரிக்கா 2.67 டிரில்லியன் டாலர் களும், ரஷ்யா 1,013.78 பில்லியன் டாலர்களும், இங்கிலாந்து 312.27 பில்லியன் டாலர்களும் செலவிடு கின்றன என்று கூறப்பட்டுள்ளது.