11 லட்சம் பெயர்களுடன்

நாசா, ஜூன் 13- சூரியனை நோக்கிச் செல்லவிருக்கும் முதல் ஆய்வு விண்கலம், சுமார் 11 லட்சம் மனிதர்களின் பெயர் களைத் தாங்கியபடி பயணிக் கும் என்று நாசா விண் வெளி ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய கிரகமான சூரியன், வாயுக்களால் ஆன ஒரு நெருப்புக் கோளமாகும். இதன் விட்டம் 14 லட்சம் கிலோமீட்டர்கள். தற்போது, சூரியனுக்கு விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்யும் முயற்சியில் நாசா இறங்கியிருக்கிறது. அதன்படி, சூரியனின் சுற்றுப்புற வெப்ப நிலைக்கு ஏற்றவாறு, அதைத் தாங்கக் கூடிய வகையில் ஒரு விண் கலம் உருவாகி வருகிறது. பார்க்கர் சோலார் எனப்படும் இந்த விண்கலம், சுமார் 11 லட்சம் மனிதர்களின் பெயர்களைத் தாங்கி விண் ணுக்குச் செல்லவிருப்பதாக நாசா தரப்பில் தெரிவிக்கப் படுகிறது. இதற்கு முன் எந்த விண்கல மும் சென்றதை விட அதிக நெருக்க மாக சூரியனிடம் சென்று இவ்விண்கலம் ஆய்வு நடத் தும் என்று கூறப்படுகிறது. இந்தப் பெயர்கள் அடங் கிய மெமரி கார்டு கொண்ட விண்கலம், வருகிற ஜூலை 31-ம் தேதி விண்ணில் சூரியனை நோக்கி அனுப்பப் படும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.