ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதில் மட்டுமே க

சென்னை, ஜூன் 13- ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தும் குதிரை பேர ஆட்சி யினர் பொதுமக்கள், அரசு ஊழியர், ஆசிரியர்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை என்று கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சேப்பாக்கம் எழிலகத்தில் உண்ணா விரதம் இருந்து வரும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினரைச் சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சென்னை எழிலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் மேற் கொண்டு வரும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை கழகச் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்திந்து ஆதரவு தெரிவித்து, அவர்களுடைய கோரிக் கைகளை சட்டமன்றத்தில் நிச்சயம் வலியுறுத்துவதாக உறுதியளித்தார். பின்னர், மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த இந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் பல கோரிக்கை களை இந்த அரசுக்கு முன் வைத்து, நேற்று உண்ணா விரதத்தை தொடங்கி இருக்கிறார் கள். இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சென்னை மாநகரத்திலே நடக்கின்ற இந்த உண்ணாவிரதம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இருக்கக் கூடிய மாவட்ட தலைநகரங்களில் தொடர்ந்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து போராட்டத்தை நடத்திக் கொண்டி ருக்கிறார்கள். கழக ஆட்சியில் கோரிக்கைகள் நிறைவேறும்! எனவே, அவர்களுடைய கோரிக் கையை அரசு உடனடியாக பரிசீலித்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள் கிறேன். அது மட்டுமல்ல, நான் உண்ணா விரதத்தில் ஈடு பட்டிருக்கக் கூடிய அரசு ஊழியர்கள், ஆசிரியர் பெருமக்களுடைய அந்த நிர்வாகிகளை சந்தித்து அவர்களி டத்திலே நான் சொன்னேன், இந்த ஆட்சி இருக்கிற வரையில் நீங்கள் வைக்கக்கூடிய கோரிக்கை நிச்சய மாக நிறைவேறப்போவது இல்லை. விரைவில், தமிழகத்திலே உங்கள் அன்போடு, ஆதரவோடு மலர இருக்கக்கூடிய திராவிட முன் னேற்றக் கழக ஆட்சி வருகிறபோது உங்களுடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று சொல்வதை விட அது நிறைவேற்றப்படும் என்ற அந்த உறுதியை நான் தந்திருக் கிறேன். உடலை வருத்திக் கொண்டு உண்ணாவிரதம் தேவையா? அதுமட்டுமல்ல, எவ்வளவோ போராட்ட வியூகங் கள் இருக்கிறது. ஆனால், தங்கள் உடலை வருத்திக் கொண்டு இந்த உண்ணாவிரத போராட்டத்தை நீங்கள் தொடர்ந்து நடத்திட வேண் டுமா? அதை இன் றோடு முடிக்கக் கூடாதா? என்ற கோரிக்கையை நான் எடுத்து வைத் திருக்கிறேன். அந்த கோரிக் கையை அவர்கள் நிச்சயமாக பரிசீ லிக்க வேண்டும் என்று நான் கேட் டுக் கொண்டிருக் கிறேன். எனவே, இது குறித்து நான் நிச்சயமாக சட்ட மன்றத்திலே இந்த பிரச்சினையை எழுப்ப போகி றேன். செய்தியாளர்: தமிழகத்திலே அடுத்தடுத்து எங்கு பார்த்தாலும் போராட்டம், ஏதாவது ஒரு புதிய பிரச்சினை போய்க்கொண்டே இருக்கிறது. இதற்கு எப்பொழுது தான் முற்றுப் புள்ளி இருக்கும்? கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்: இன்றைக்கு ஆட்சியில் இருக்கக் கூடியவர் களுடைய தன்மை எப்படி இருக் கிறது என்று சொன்னால், மக்கள் பிரச்சினைப் பற்றி அவர்கள் கவலைப் படுவதில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயப் பெருங்குடி மக்கள், நெசவாளர்கள், தொழிலா ளர்கள் என எல்லா தரப்பு மக்களுமே இன்றைக்கு இந்த ஆட்சியிலே பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த ஆட்சியிலே இருக்கக் கூடியவர்களைப் பொறுத்தவரைக் கும் இந்த ஆட்சியை எப்படி தக்க வைத்துக்கொள்வது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்ந்து எப்படி மாமூல் தந்து அவர்களை தங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்வது என்பதிலேதான் அவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார் களே தவிர, மக்களைப் பற்றி அவர்கள் கிஞ்சிற்றும் கவலைப்பட வில்லை. இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டியளித்தார்.