மாணவர்கள் தக்க வைத்தல் விகிதம் அதிகரிக்க

சென்னை, ஜூன் 13- சட்டப்பேரவையில் நேற்று, கேள்வி நேரத் தின் போது இது குறித்து நடைபெற்ற விவாதம் வருமாறு:- தங்கம் தென்னரசு: திருச்சுழி தொகுதி, திருச் சுழி ஊராட்சி ஒன்றியம், காளையார் கரிசல்குளம் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள் ளியை நடுநிலைப் பள்ளி யாகத் தரம் உயர்த்த அரசு ஆவன செய்யுமா? அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்: தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நிர்ணயிக் கப்பட்டுள்ள நிபந்தனை களை திருச்சுழி தொகுதி, திருச்சுழி ஊராட்சி ஒன் றியம், காளையார் கரிசல் குளம் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அதை நிறைவு செய்யவில்லை. தங்கம் தென்னரசு: பொதுவாக பள்ளிகளை தரம் உயர்த்தக்கூடிய அந்த நிபந்தனைகளை, குறிப்பாக மாணவர்களு டைய எண்ணிக்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்களுடைய எண்ணிக்கை 5 ஆம் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்பிற்கு--புதிய நடுநிலைப் பள்ளியை உருவாக்க வேண்டு மென்று சொன்னால், 25 பேர் வேண்டுமென்கிற ஒரு முக்கியமான நிபந் தனை இருக்கிறது. நான் அமைச்சரிடத்திலே அறிய விரும்புவது, பொதுவாக இன்றைய சூழ்நிலையில் அரசுப் பள்ளிகளிலே மாண வர்கள் அதிகமாக சேர வில்லை என்கின்ற ஒரு கருத்து இருக்கிறது. ஆகவே, அரசுப் பள்ளி களில், மாணவர்கள் அதிகமாகச் சேருவதற்கு அரசு என்ன முயற்சி மேற்கொண்டிருக்கிறது? அதேபோல் தக்க வைத்தல் விகிதம் என்று சொல்லக்கூடிய அள விலே, தொடக்கப் பள்ளி களில் இருக் கக்கூடிய அந்த விகிதம் நடுநிலைப் பள்ளிகளில் வருகிற போது அந்த விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. தொடக்கப் பள்ளி களில் 99 சதவிகித மாண வர்கள் இருக்கி றார்கள்; நடுநிலைப் பள்ளிகளுக்கு வருகிற பொழுது 98 சதவி கிதமாக இருக் கிறது; உயர்நிலைப் பள்ளி, இடைநிலைப் பள்ளிக்கு வருகிற பொழுது 96 சதவிகித மாக இருக்கிறது. ஆகவே, நுசேடிடடஅநவே சுயவடி -வில் காட்டக்கூடிய அதே அக்கறையை சுநவநவேடி சுயவடி -விலும் காட்டுவ தற்கு அரசு என்ன நட வடிக்கைகளை மேற்கொள்ள விருக்கிறது? குறிப்பாக, அரசுப் பள்ளிகளை நோக்கி, மாணவர்களை அதிகமாக ஈர்ப்பதற்கு அரசு என்ன விதமான நடவடிக்கைகளை எடுப் பதற்கு முன் வந்திருக் கிறது? அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்: உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்டதைபோல, சயவடி என்று சொல்லப்படு வது ஒன்றுக்கொன்று மாறுபட்டிருக்கிறது என்பதை அரசு கவனத் தில் எடுத்துக்கொண்டு தான் இந்த ஆண்டு பல்வேறு மாற்றங்களை இந்த அரசு உருவாக்கி வருகிறது தங்கம் தென்னரசு: இப்போது அரசு, பாடத் திட்டங்களிலே ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. புதிய பாடப்புத்தகங்கள்கூட அச்சடிக்கப்பட்டு மாண வர்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறது. அதிலே உடிசந ளரதெநஉவள என்று இருக்கக்கூடிய இயற்பி யல் அல்லது வேதியியல், கணக்கு போன்ற பாடங் கள் இருக்கிறபோது, மொழிப் பாடங்களாக இருக்கக்கூடிய தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய வற்றிக்கான, அந்த உடிவேநவே அதிகமாக இருக்கின் றன. எனவே, நம்முடைய மாணவர்கள் பல இடங் களுக்கு--குசநஉ-க்குஎடுத் துக்கொண்டு போகக் கூடிய நிலையும் வந்திருக் கிறது என்கின்ற ஒரு பரவலான கருத்தும் இருக்கின்றது. எனவே, மொழிப் பாடம் என்பது ஒரு சுமையாக இல்லா மல் அது ஒரு சுகமாக இருக்கக்கூடிய வகையில் அதை மாற்றுவதற்கு அரசு ஏதேனும் சிறப்பு நடவடிக்கைகளை எடுப் பதற்கு முன் வந்திருக் கிறதா? அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்: உறுப்பினர் அவர்களின் நல்ல ஆலோசனை நேற்றையதினம் தான் ஆணையாகப் பிறப்பிக் கப்பட்டிருக்கிறது. 1980 ஆம் ஆண்டு முதல் 2 தாள்கள் என்று சொல்லப்படுகின்ற மொழிப் பாடத்திற்காக, 1, 2 என்ற இரண்டு தாள்கள் இருந்திருக் கிறது. ஆகவே, மாணவர் களும், பெற்றோர்களும், அதேநேரத்தில் ஆசிரியர் பெருமக்களும், கல்வி யாளர்கள் ஆகியோர் கருத்துகளை அறிந்து இந்த அரசு 6 தேர்வுகளை எழுதுவதற்காக அரசு நடவடிக்கைகள் மேற் கொண்டிருக்கின்றன. 8 தேர்வுகள் எழுதிக் கொண்டிருந்த மாற் றத்தை உருவாக்கி, அண்டை மாநிலங்களாக இருக்கக்கூடிய ஆந்திரா, தெலுங்கானா, கர் நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் மொழிப் பாடம் என்பது ஒரு பாடம் என்றுதான் இருக் கிறதே தவிர, இரண்டு தாள்களாக இல்லை, இரண்டு பாடங்களாக இல்லை என்பதை மன தில் கொண்டு, ஏறத்தாழ 38 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் புதிய மாற்றம் உருவாக்கப்பட் டிருக்கிறது. ஆசிரியர்களுக்கும் கூடுதல் பணிச் சுமை இல்லாமல், மாணவர் களுக்கு மன அழுத்தம் இல்லாத நிலையை இந்த அரசு உருவாக்கியிருக் கிறது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.