இந்தியாவில் எந்தத் தலைவரும் சிந்தித்திராத

திருவாரூர், ஜூன் 13- மாநில உரிமைகளுக் காக, இந்தியாவில் எந்தத் தலைவரும் சிந்தித்திராத வகையில், தலைவர் கலை ஞர் அவர்கள் மாநில சுயாட்சி கொள்கையை முதன் முதலில் முழங்கிய வர் என்று திருவாரூரில் நடைபெற்ற கலைஞர் 95 பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டார். திருவாரூரில் தலைவர் கலைஞர் 95 விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசிய தாவது:- தலைவர் கலைஞர் அவர்களின் 95 வது பிறந்த நாள் விழா அவர் பிறந்த இந்த மண்ணில் நடைபெற்றுக் கொண்டி ருப்பது மிகப் பொருத்த மானது. இந்த திருவாரூர் தொகுதி நீண்ட காலம் தனித் தொகுதியாக இருந் தது. அண்மையில்தான் இது பொதுத்தொகுதி ஆனது. பொதுத்தொகுதி ஆனதுமே தலைவர் கலைஞர் அவர்கள் இந்தத் தொகுதியில் போட்டி யிட விருப்பம் தெரிவித்து இருந்தார். அந்த அள வுக்கு தான் பிறந்த தாய் மண் திருவாரூரின் மீது தலைவர் கலைஞர் அவர் களுக்கு தீராத பற்று இருப்பதை நாம் அறிய முடிந்தது. தலைவர் கலைஞர் பிறந்த நாள் விழாவிலே மேடையில் தோழமைக் கட்சி தலைவர்கள் எல் லாம் பேசவேண்டும், சுருக்கமாக நானும் பேசி முடிக்க வேண்டும். தலை வர் கலைஞர் அவர்களின் அருமை பெருமைகளை இங்கே திருவாரூரில் பேசு வது என்பது கொல்லன் தெருவிலே ஊசி விற்பது போன்றது. தலைவர் கலைஞர் அவர்கள் திரா விட முன்னேற்றக் கழகத் தின் தலைமைப் பொறுப்பை ஏற்காமல் இருந்திருந் தால் திராவிட முன்னேற் றக் கழகம் என்கிற இந்த இயக்கம், பெரியாரின் கொள்கைகளை உள் வாங்கிய இந்த இயக்கம் இந்த அளவுக்கு பெருமை பெற்ற இயக்கமாக இருந் திருக்குமா? என்பதை நாம் எண்ணிப் பார்க்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். அண்ணாவின் மறை விற்கு பிறகு இனி இந்த இயக்கம் இருக்குமா? என கனவு கண்டவர்கள் பலர். இந்த இயக்கம் சிதைந்து போகும் என எண்ணிய வர்கள் பலர். பெரியாரின் கொள்கைகளை உயர்த் திப் பிடிக்கும் இந்த இயக் கம் இருக்கக் கூடாது என கருகியவர்கள் பலர். அப் படிப்பட்ட அந்த கால கட்டத்தில் தந்தை பெரி யார் வகுத்த கொள்கை களை பேரறிஞர் அண்ணா வழியில் கட் டிக் காக்க கூடிய ஒரு மகத்தான தலைமையாக தலைவர் கலைஞர் அவர்கள் உரு வெடுத்தார். அண்ணாவின் இதயம் பேரறிஞர் அண்ணா அவர்களுடைய மறைவை யொட்டி தலைவர் கலை ஞர் எழுதிய அஞ்சலி கவி தையில் அவர் ஆக்கிய அந்த கவிதாஞ்சலியில் நிறைவாக அவர் முடிப் பார் அண்ணா உன் இத யத்தை இரவலாக தந் திடண்ணா, மறுபடியும் அதை உன் காலடியில் பத்திரமாக கொண்டு வந்து சேர்ப்பேன் அண்ணா என்று அண்ணாவின் இத யத்தை இரவலாக கேட் டவர் தலைவர் கலைஞர். மன்னர்களுடைய ஆட்சி காலத்திலே புலவர்கள் என்னென்னவோ பரிசில் கள்களை கேட்டு பெற்று இருக்கிறார்கள். ஆனால் ஒருபுலவன், அல்லது ஒரு கவிஞர், அல்லது ஒரு தொண்டன் தன் தலை வனது இதயத்தை இரவ லாக கேட்டார் என்று சொன்னால் இது உலகத் திலேயே தலைவர் கலை ஞர் ஒருவர் தான். ஏன் இதயத்தை இரவ லாக கேட்டார் ?எதையும் தாங்கும் இதயம் அண் ணாவின் இதயம்.இந்த அரசியல் வஞ்சகங்கள் நிறைந்தது.இந்த அரசியல் அவதூறுகள் நிறைந்தது. இந்த அரசியல் சூதுகள் சூழ்ச்சிகள் நிறைந்தது, இந்த அரசியல் துரோ கங்கள் நிறைந்தது. அதை சந்திக்க வேண்டும் என் றால் எதையும் தாங்கும் இதயம் வேண்டும். எனவே தான் அண்ணா உன் இத யத்தை இரவலாக தந் திடண்ணா என்று தலை வர் கலைஞர் அவர்கள் அண்ணாவின் இதயத்தை பெற்று தனக்கு எதிராக கட்டப் பட்ட அனைத்து பகைக் கோட்டைகளை யும் தகர்த்து எறிந்தவர் தலைவர் கலைஞர் அவர் கள். 45 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட முன் னேற்றக் கழகத்தை தலைமை ஏற்று கட்டிக் காத்து, 5 முறை முதல்வ ராக அந்த நாற்காலியில் அமர்ந்து சமூக நீதியை பாதுகாத்த பெருமை தலைவர் கலைஞர் அவர் களைச் சாரும் . உழைப்பு! அரவணைப்பு! நான் தலைவர் கலை ஞர் அவர்கள் எப்படி ஒரு வெற்றிகரமான தலைவராக விளங் குகிறார் என உற்று நோக்கி நுட் பமாக பார்க்கின்ற போது, இரண்டு உண்மைகள் வெளிப்படுகின் றன. ஒன்று அவரு டைய ஓய்வறியாத உழைப்பு. இன் னொன்று தொண் டர்களிடம் காட் டுகின்ற அரவ ணைப்பு. உடன் பிறப்பே என்று சொன்னால் லட் சக்கணக்கா ணோர் கைகளை உயர்த்தி தட்டி எழுப்பிகிற ஓசை உறங் கிக் கொண்டு இருக்கிற ஒட்டுமொத்த தமிழினத் தையும் தட்டி எழுப்பும். இந்த உடன்பிறப்பே என் கிற ஒற்றைச் சொல்லுக்கு இந்த தொண்டர்கள் கட் டுண்டு கிடந்தார்கள். அந்த அளவுக்கு தொண் டர்களோடு அவர் கொண்டிருந்த அரவ ணைப்பும் ஓய்வறியா உழைப்பும்தான். அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதாக சொல்வார்கள் நான் உறங்குகிற வரை என் னோடு இருந்து அதன் பின்போகும் என்தம்பி கருணாநிதி, அவன் எப் போது உறங்குகிறான் என் பதே தெரியாது, அதி காலையிலேயே முர சொலிக்கு கடிதம் எழுதி விட்டு வந்து என்னை எழுப்புகிற தம்பியாக இருக்கிறான். எத்தனை மணி நேரம் என்தம்பி கருணாநிதி உறங்குவான் என்று எனக்கு தெரிய வில்லை.என அறிஞர் அண்ணா பாராட்டிய தாக நாம் அறிவோம். மிகச் சிறந்த நினைவாற்றல்! அப்படி ஓய்வறியாத உழைப்பு, தொண்டர் களிடம் அவர் காட்டுகிற அரவணைப்பு, எந்த ஊருக்கு போனாலும் பெயர் சொல்லி தொண் டனை அழைக்கின்ற அள வுக்கு நினைவாற்றல் கொண்ட ஒருதலைவ னாக இருப்பவர். தொண் டர்களின் உழைப்பை அங்கீகரிக்கிற தலைவராக ஒரு தலைவர். அப்படிப் பட்ட அந்த தலைவருக்கு குடும்ப வாரிசாக அல்ல அரசியல் வாரிசாக இந்த களத்திலே நிலைநிற்பவர் தளபதி அவர்கள். தன்னு டைய ஓய்வறியா உழைப் பின் மூலமும், தொண்டர் களிடம் காட்டும் பரிவின் மூலமும் தலைவர் கலை ஞரை பிரதிபலித்து இன்று தளபதி அவர் களும் இந்த களத்திலே காலூன்றி நிற்கிறார். பேராசிரியர் ஏற்றுக் கொண்டார்! 35 ஆண்டுகளுக்கு முன்னால் பெரியார் திட லில் பேராசிரியருக்கு மணி விழா நடந்தது. அந்த மணி விழாவை தலைவர் கலைஞர் அவர் கள் முன்னின்று நடத்தி னார். அன் றைக்கு சிலர் தலைவர் கலைஞரை விட்டு பேராசிரியர் வில கப் போகிறார் என்று வதந்தியை பரப்பி விட்டி ருக்கிறார்கள். வதந்தி பர விக்கொண்டு இருந்தது. அப்படிப்பட்ட நேரத் தில் மணிவிழாவை முன் னின்று நடத்திய தலை வர் கலைஞர் அவர் களை ப்பற்றி பேராசிரி யர் அவர்கள் தன்னு டைய உரையிலே குறிப் பிட்டார், நான் ஏன் கலைஞரின் தலை மையை ஏற்றுக் கொண் டேன் என்றால், என்னை விட கலைஞர் ஒருவயது இளையவர்தான், பேர றிஞர் அண்ணாவின் தலைமையை ஏற்றுக் கொண்ட நான் கலைஞ ரின் தலைமையை ஏன் ஏற்றுக் கொண்டேன் என்று சொன்னால் தமிழை காப்பாற்ற, தமிழ் மக்களை காப் பாற்ற, தமிழ் நாட்டை காப்பாற்ற கலைஞரை விட்டால் வேறு நாதி இல்லை என்பதால் கலைஞரின் தலை மையை நான் ஏற்றுக் கொண்டேன். அவரு டைய ஓய்வறியா உழைப்பு அதனால் அவரை நான் தலைவ ராக ஏற்றுக் கொண் டேன் என்று பேராசிரியர் அன்று அந்த மணிவிழா விலே உரையாற்றினார். இந்த பேராசிரியர், அண்ணாவை தலைவ ராக ஏற்றுக் கொண்ட பேராசிரியர், தலைவர் கலைஞரின் தலை மையை அங்கீகரித்த பேராசிரியர், இன்றைக்கு அண்ணன் தளபதி அவர் களின் தலைமையை அங் கீகரித்து இருக்கிறார். இதுதான் அண்ணன் தளபதி அவர்களுக்கு கிடைத்த முதல் அங்கீ காரம் என்று நான் சுட் டிக்காட்ட விரும்புகி றேன். கலைஞரின் பிள்ளை என்பதால் தள பதி தலைவர் ஆகிவிட வில்லை. சிறுபொறுப் பில் இருந்து தன்னுடைய உழைப்பின் மூலம் உயர்ந்து தனக்கு தலை மைப் பண்பு இருக்கிறது என்பதை பல்வேறு சந் தர்ப்பங்களிலே நிலை நாட்டிய பிறகுதான் இந்த இடத்திற்கு அவர் வந்தி ருக்கிறார். மிசா காலத் தில் அடக்கு முறைகளை சந்தித்து உயிர் தப்பி பிழைத்து இந்த இயக் கத்தை கட்டி காப்பாற்ற ஒரு தலைமை இப்போது தேவை என்பதன் அடிப் படையிலே தன்னுடைய உழைப்பின் மூலமாக இந்த அரசியல் வாரிசு தலைமையை அண்ணன் தளபதி அவர்கள் ஏற்று இருக்கிறார். மாநில உரிமைக்கு குரல் கொடுத்தவர்! தலைவர் கலைஞர் அவர்கள் இந்தியாவின் வேறு எந்த முதலமைச் சரும் சிந்தித்திராத வகை யில் மாநில சுயாட்சி பற்றி சிந்தித்தவர். மாநில சுயாட்சி பற்றி முதல் குரலை எழுப்பிவர் தலை வர் கலைஞர். ஆளும் கட் சியான காங்கிரஸை தவிர்த்த பிற கட்சிகளின் முதலமைச்சர்களை பிற மாநிலங்களில் ஒருங்கி ணைத்தவர். மேற்கு வங் கத்தில் இருந்த அண் ணன் ஜோதி பாசுவாக இருந்தாலும், ஜார்ஜ் பெர்னாண் டஸ் அவர் களாக இருந்தாலும் எல் லேரையும் கூட்டி மாநாடு நடத்தி மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். தலைவர் கலைஞர் அவர்களின் ஐம்பெரும் முழக்கங்களை நாம் அறி வோம். அது எந்த ஒரு மாநிலமும் எழுப்பாத முழக்கம். மத்தியில் கூட் டட்சி மாநிலத்தில் சுயாட்சி, இந்தியாவில் வேறு எந்த அரசியல் தலைவரும் இந்த கோணத்தில் சிந்தித்தது இல்லை. தேசிய அளவில் தலைவரை உருவாக்கும் திறமை பெற்றவராக, வலிமை பெற்றவராக தலைவர் கலைஞர் அவர் கள் திகழ்ந்தார்கள். அதே போல தேசிய அளவில் தலைவர்களை ஒருங்கி ணைக்கும் வலிமை பெற் றவராகத் தான் அண் ணன் தளபதி அவர்களை நாங்கள் பார்க்கிறோம் . தேசிய அளவில் ஒன்றிணைப்பு! தேசிய அளவில் மதச் சார்பற்ற சக்திகளை நாம் ஒருங்கிணைக்க வேண் டும். தேசிய அளவில் மாநில உரிமைகளை பேசு கிற தலைவர்களை நாம் ஒன்றிணைக்க வேண்டும். அதுதான் இன்றைய தேவையாக இருக்கிறது. ஏனென்றால் இன்றைக்கு மத்திலே ஆளுகின்ற கட்சி தான் மாநிலங்களை யும் ஆளவேண்டும் என் கிற ஒரு சதித்திட்டத்தை தீட்டி வருகிறார்கள். அதன் படியே செயல்திட் டங்களையும் வகுத்து வருகிறார்கள். இந்த நிலையிலே மையத்திலே ஆளுகிற ஆட்சி கூட் டாட்சியாக இருக்க வேண்டும். அது ஒரு கூட் டுத் தலைமையாக இருக்க வேண்டும். அது மாநில உரிமைகளை அங் கீகரிக்கிற தலைமையாக இருக்க வேண்டும். மாநில சுயாட்சியை ஏற்றுக் கொள்ளுகிற தலைமை யாக இருக்க வேண்டும். அதற்கு ஒத்தக் கருத்து டைய தேசிய தலைவர் களை ஒருங்கிணைக்க வேண்டும். அந்த சக்தியும் திறமையும் தளபதி அவர் களிடத்தில் தான் இருக் கிறது. அதற்கான அடை யாளம்தான் இந்த மேடை. இடதுசாரிகள் உட்பட, காங்கிரஸ் கட்சி உட்பட அண்ணன் தள பதி அவர்களின் தலை மையை ஏற்று, மதச்சார் பற்ற சக்திகளை ஒன்றி ணைக்க கைகோர்த்து நின்று காவேரி மேலாண்மை வாரி யத்தை அமைக்க நாம் போராடியிருக்கிறோம். காவிரி உரிமை மீட்புப் போராட்டம்! அண்ணன் தளபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அந்த காவேரி போராட்டத் தின் விளைவின் தாக்கம் தான் இன்றைக்கு காவேரி மேலாண்மை ஆணையம் அமைக்கப் பட்டு இருக்கிறது. அது நமது கூட்டணிக்கு கிடைத்த மகத்தான வெற்றி. ஆகவே அண் ணன் முத்தரசன் அவர் கள் சொன்னதைப் போல இந்த அணி ஒரு அவசியமாக, வரலாற்று தேவையாக இருக்கிறது. வெறும் தேர்தலுக்கான தற்காலிக கூட்டணியாக இல்லாமல், தேர்தல் உற வாக இல்லாமல், மதச் சார்பற்ற சக்திகளை ஒன் றிணைக்கிற சக்தியாக இந்த அணி இருக்க வேண்டும் என்பதே இப் போது காலத்தின் கட்டா யமாகி இருக்கிறது. மாநில சுயாட்சியின் தேவையை பறைசாற்றும் அணியாக இது இருக்க வேண்டிய கட்டாயம் ஏற் பட்டு இருக்கிறது. 15வது நிதிக் குழுவால் பாதிப்பு! அண்ணன் தளபதி அவர்கள் கலைஞர் அவர் கள் வழியிலே செயல்படு கிறார், அகில இந்திய அளவிலே விழிப்பு ணர்வை ஏற்படுத்து கிறார் என்பதற்கு ஒரு சான்று, வேறு எந்த மாநி லத் தலைவர்களும் சிந் திக்காத ஒன்றினை அண் ணன் அவர்கள் சிந்தித்து செயல்பட்டு இருக்கிறார். மத்திய அரசின் 15 வது நிதிக்குழு நமக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற் படுத்தும் என்பதனை சுட்டிக் காட்டி அனை வருக்கும் கடிதம் எழுதி னார். அதன் பிறகுதான் பாரதிய ஜனதா ஆளாத பிற மாநிலங்களில் எந்த அளவுக்கு 15 வது நிதிக் குழு நிதி ஒதுக்கீட்டில் பாதிக்கப்படும் என்பதை சுட்டிக் காட்டி, கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் உட்பட பல ருக்கு எழுதிய கடிதம், தென்னிந்திய முதலமைச் சர்களிடையே ஒரு ஒருங் கிணைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த அடிப்படையில் தான் தெலுங்கானா முத லமைச்சர் சந்திரசேகர் ராவ் அவர்கள் தளபதி அவர்களின் இல்லத் திற்கே தேடி வந்து சந் தித்து விட்டுப் போனார். ஆகவே தேசிய அளவில் மாநில உரிமைகளுக்காக, மாநில சுயாட்சிக்காக அவர்களை ஒருங்கி ணைப்பதற்கான ஆற்றல் வாய்ந்த தலைவராக அண்ணன் தளபதி அவர் கள் திகழ்கிறார்கள். பேர றிஞர் அண்ணாவுக்கு பிறகு தலைவர் கலைஞர் அவர்கள் திராவிட முன் னேற்ற கழகம் என்கிற இந்த சமூகநீதி இயக் கத்தை கட்டிக காத்த தைப் போல, தலைவர் கலைஞர் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக செயல்பட முடியாத நிலையில், தி.மு.க.வை ஒழித்துவிட்டால் பெரி யாரின் கருத்துக்களை செயலாக்குவதை ஒழித்து விட முடியும் என்று சிலர் சதித்திட்டம் தீட்டி கனவு கண்டு கொண்டு இருக்கி றார்கள். சமூக நீதியைக் காப்பாற்றிட! திராவிட முன்னேற்ற கழகத்தை கட்டிக்காக்கிற தலைவர் கலைஞர் அவர் களைப் போல ஆற்றல் வாய்ந்த தலைமை, ஓய் வறியா உழைப்பை பெற்ற தலைமை, தொண் டர் களை அரவணைக்க கூடிய தலைமை, மாநில உரிமைகளை பாதுகாக் கிற தலைமை, சமூக நீதியை காப்பாற்றுகிற தலைமை, மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக் கிற தலைமை அண்ணன் தளபதி அவர்களின் தலைமை, இது பேராசிரி யர் அவர்களால் அங்கீ கரிக்கப்பட்ட தலைமை . இந்த கட்சியில் இருந்து எம்.ஜு.ஆர். போனார், கட்சியில் ஒரு பிளவு ஏற்பட்டது. திரா விட முன்னேற்ற கழ கத்தை தலைவர் கலை ஞர் கட்டிக் காப்பாற்றி னார். நமது வைகே அவர் கள் கருத்து வேறுபாடு காரணமாக கட்சியை விட்டு போனார். வேறு கட்சியை உருவாக்கினார். அதை அவர் வழிநடத்தி யும் வருகிறார். அப்படிப் பட்ட வைகே அவர்களே அண்ணன் தளபதியின் தலைமையை அங்கீ கரித்து இருக்கிறார். அந்த வைகோ அவர்களே தள பதி அவர்களை முதல மைச்சராக ஆக்கியே தீரு வேன் என்று முழக்க மிட்டு இருக்கிறார்.அதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வழிமொழிகிறது. உங்களால்தான் மத வாத சக்திகளுக்கு எதி ராக பேராட முடியும், உங்களால் தான் மதச் சார்பற்ற சக்திகளை ஒன் றிணைக்கமுடியும் என் கிற நம்பிக்கை எங்களி டத்திலே இருக்கிறது. உங்கள் ஓய்வறிய உழைப் பின் மீதும், தொண்டர் களிடம் காட்டுகிற பரி வின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. தலைவர் கலைஞர் அவர் கள் எப்படி இந்த திரா விட முன்னேற்றக்கழகம் என்கிற சமூக நீதி இயக் கத்தை கட்டி காப்பாற்றி னாரோஅப்படி அடுத்த 40 ஆண்டு காலம் இந்த இயக்கத்தை கட்டிக் காப் பீர்கள் என்கிற நம் பிக்கை எங்களுக்கு இருக் கிறது. இன்று சாதியவாதி கள் கொட்டம் அடித்துக் கொண்டு இருக்கிறார் கள். இந்த நாட்டில் சாதிய வெறியை, மத வெறியை தூண்டுகிறார் கள். மக்களிடத்திலே சாதியின் பெயரால் மதத் தின் பெயரால் பிரிவி னையை உண்டாக்கி கல வரங்களை தூண்டி விட்டு ஒரு பிளவை ஏற் படுத்தப் பார்க்கிறார்கள். அதற்கு ஒருபோதும் இடம் கொடுத்துவிடக் கூடாது. பெரியாரின் துணிச்சல், பேரறிஞர் அண்ணாவின் அணுகு முறை, தலைவர் கலைஞர் அவர்களின் ஆற்றல் இவை அனைத்தையும் பயன்படுத்தி தமிழை காப்பாற்ற வேண்டும், தமிழ்மக்களை காப் பாற்றவேண்டும், தமிழ் நாட்டை காப்பாற்ற வேண்டும், அதோடு மட் டுமல்லாமல் மாநில சுயாட்சியை காப்பாற்ற தேசிய அளவிலே தலை வர்களை ஒன்றிணைத்து ஒரு மாநாட்டை நடத் திட வேண்டும் என்கிற கோரிக்கையை தலைவர் கலைஞர்பிறந்த இந்த நன்னாளில் வைக்கிறேன். இவ்வாறு தொல்.திரு மாவளவன் பேசினார்.