நீலகிரி மாவட்டத்தில் விளையும் பச்சைத்

சென்னை, ஜூன் 13- சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் (11-06-2018, கேள்வி நேரத்தின் போது நடைபெற்ற விவாதம் வருமாறு- நா.கார்த்திக்: நீலகிரி மாவட்டத்திலுள்ள பிரதான தொழில், தேயிலை விவசாயம். இந்தத் தேயிலை தொழி லில் சுமார் 65,000 சிறு, குறு தேயிலை விவசாயி கள் உள்ளனர். தேயிலைத் தொழிலை நம்பி சுமார் இரண்டு லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுக மாகவும் வேலைவாய்ப் பினைப் பெற்று வருகி றார்கள். இங்கு உற்பத்தியாகும் தேயிலை உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாட் டிலும் ஏற்றுமதி ஆகிறது. இங்கே விலை குறையும் தேயிலைக்கு சரியான விலை நிர்ணயம் செய்யப் படுவதில்லை. இதனால், தேயிலை விவசாயிகளும், தொழிலாளர்களும் பாதிக் கப்பட்டிருக்கின் றார்கள். தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த நேரத்தில், தேயிலை விலை குறையும் போது இரண்டு ரூபாய் மானி யம் வழங்கி வந்தார்கள். இன்றைக்கு வெளிச் சந்தையில் தேயி லைத் தூள் ரூ.300/-க்கு விற்பனையாகிறது. பச்சைத் தேயிலை கிலோ ரூ.10/-க்கு தான் இன்றைக்கு விற்பனை செய்யப்படுவதாக தேயிலை விவசாயிகள் அனைவரும் சொல்கி றார்கள். ஆகவே, அனைத்து விவசாயி களுக்கும் மானியம் வழங் கிட கேட்டுக் கொள் கிறேன் அதைப் போலவே அரசே ஸ்டேட் டிரேடிங் கார்ப் பரேஷன் மூலம்... பசுந்தேயிலை குறைந்த பட்சம் ரூ.30/-க்கு விலை நிர்ண யம் செய்ய முன் வருமா? அமைச்சர் பா. பென்ஜமின்: தொழிற் கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலைகளை நிர் ணயிக்கும் பசுந் தேயிலைக்கும் வாரியத் தின் மூலம் நிர்ணயிக்கும் தேயிலை வாரியத்தின் மூலம் நிர்ணயிக்கும் தேயிலையின் விலைக்கும் மாறுபாடு ஏற்படும் நிலையில், அதைப் போக்கும் வகையில் பசுந் தேயிலைக்கு ஆதார விலை வழங்க 2014-2015 ஆம் ஆண்டு ரூ.12 கோடி மதிப்பீட்டில் விலை நிறுத்துதல் நிதியம் அமைக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட திட்டங்களால் சிறு தேயிலை விவசாய உறுப் பினர்கள் வெளிச்சந்தை யில் வழங்கப்படும் பசந் தேயிலை விலையின் அளவிற்கு நியாயமான விலையினை நீலகிரி மாவட்டத்தில் பெற்று வருகின்றார்கள். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.