60 முதல் 70 கிலோ மீட்டர் பயணம்

சென்னை, ஜூன் 13- அணைக்கட்டு தொகுதியில் மகளிர் கல்லூரி துவக்க அரசு முன்வர வேண்டும் என்று பேரவையில் கழக உறுப் பினர் ஏ.பி.நந்தகுமார் வேண்டுகோள் விடுத் தார். இது தொடர்பான கேள்வி பதில் வருமாறு- ஏ.பி.நந்தகுமார்: அணைக்கட்டு தொகுதி யில் மகளிர் கல்லூரி துவக்க அரசு முன்வருமா? அமைச்சர் கே.பி. அன்பழகன்: அணைக் கட்டு தொகுதி யில் அரசு மகளிர் கலைக் கல்லூரி துவங்குவது குறித்த கருத்துரு ஏதும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை என்பதை தெரிவித் துக் கொள்கிறேன். ஏ.பி. நந்தகு மார்: எங்களுடைய செயல் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களை வணங்குகிறேன். அணைக்கட்டு தொகுதி, கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். அணைக்கட்டு தொகுதியில் ஒடுகத்தூர், அணைக்கட்டு, பள்ளி கொண்டா, பொய்கை, விருஞ்சிபுரம் மற்றும் தெள்ளூர் போன்ற பகுதி களில் சற்றேறக்குறைய 10,000 மாணவ, மாணவி யர்கள் படித்து கொண்டி ருக்கிறார்கள். அவர்கள் மேல்நிலைப் படிப்பை முடித்தபிறகு, மேற் படிப்புக்காக கல்லூரிக் குச் செல்ல வேண்டு மென்றால் வேலூருக்குத் தான் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. ஒடு கத்தூர், மேலரசம்பட்டி லிருந்து வேலூருக்குச் செல்ல வேண்டுமென் றால் 60 முதல் 70 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துதான் அவர்கள் படிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கின்ற காரணத்தாலும், ஏழை யெளிய மாணவர்களு டைய நலனைக் கருத் திற்கொண்டும், அவர்கள் பயன்பெறக்கூடிய வகை யிலும்தான், அணைக்கட் டில் ஓர் அரசு மகளிர் கலைக் கல்லூரி அமைக்க வேண்டுமென்று நான் கேட்டேன். அமைச்சர் அவர்கள் இதுகுறித்து மறு பரிசீலனை செய்து, அந்தப் பகுதி பின்தங்கிய பகுதியாக இருப்பதால், அந்த மாணவர்கள் படிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டுமென்று பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன். அமைச்சர் கே.பி. அன்பழகன்: வேலூர் கல்லூரியிலே அந்த மாணவர்கள் அதிகப்படி யாக சேரக்கூடிய வாய்ப்பை அரசானது உருவாக்கி கூடுதலாக புதிய பாடப்பிரிவுகள் எல்லாம் தந்ததன் காரண மாக மாணவர்களுடைய சேர்க்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் உயர்கல்வியைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஏ.பி. நந்தகுமார்: என்னுடைய அணைக் கட்டுத் தொகுதி வேலூ ரில் இருக்கின்ற முத்து ரங்கம் அரசு கலைக் கல்லூரிய னது சற்றே றக்குறைய 50 ஏக்கர் பரப்பரளவு கொண்ட ஒரு மிகப்பெரிய கல்லூரி. அந்தக் கல்லூரியில்--பல கல்லூரியில் இன்னும் மாணவர்கள் நிரப்பப்படாமல் இருக்கின் றார்கள் என்று அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள். சட்ட மன்ற உறுப்பினர்கள் என்கிற வகையிலே ஏறக் குறைய 100 கடிதங்களைக் கொடுத்திருப்பேன். கவுன்சிலிங் என்கின்ற முறையிலே பல மாணவர் கள் அங்கே படிக்கின்ற வாய்ப்பை இழந்திருக் கின்றார்கள். தயவு செய்து நம்முடைய அமைச்சர் அவர்கள், பரப்பளவு அதிகம் கொண்ட அந்தக் கல்லூரியிலே மேலும் பல துறைகளைச் சேர்த்து, பல வகுப்ப றைகளைக் கட்டி, ஏழை யெளிய மாணவர்கள்--அதிகம் பெறுகின்ற மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., இன்ஜினீய ரிங் போன்ற படிப்பு களுக்கு செல்கின்ற மாணவர்களைத் தவிர்த்து ஜஸ்ட் பாஸ் செய்கின்ற மாணவர் களைக் கல்லூரியில் சேர்க்காத நிலை இன்றும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றது. அமைச்சர் அவர்கள் மாணவர் சேர்க்கை இல்லை என்று பல கல்லூரிகளை பட்டிய லிட்டு காட்டினார்கள். எங்களுடைய பகுதியில் இருக்கின்ற முத்துரங்கம் கலைக் கல்லூரி சற்றே றக்குறைய 3,000 மாண வர்கள் படிக்கிறார்கள். மேற்கொண்டு படிக் கின்ற மாணவர்கள் அதிகமாக இருக்கக் கூடிய அந்தக் கல்லூரி யிலே மேலும் பல துறைகளை நிறுவி--ஏழையெளிய மாணவர் கள் யாரெல்லாம் பாஸ் செய்தார்களோ, அவர் களை சேர்ப்பதற்கு தனியார் கல்லூரிகள் இடம் தர முன்வராத தால், அரசாங்கம் அந்த மாணவர்களைக் கைவிடாமல் அவர் களைச் சேர்ப்பதற்கு வழிவகை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கின் றேன். அமைச்சர் கே.பி. அன்பழகன்: உறுப்பி னர்கள் அவர்கள் தான் சார்ந்திருக்கக்கூடிய மாவட்டத்தில் இருக்கக் கூடிய கல்லூரிக்கு கூடுத லாக பாடப் பிரிவுகள் வேண்டும், அதுவும் வேலூருக்கு வேண்டு மென்று கோடிட்டுக் காட்டினார்கள். தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கள் பேரவை விதி 110 இன்கீழ் 264 புதிய பாடப் பிரிவுகள் அறிவித் திருக்கிறார்கள். அந்த 264 புதிய பாடப் பிரிவுக ளிலே கூடிய விரைவிலே அரசாணை வெளியிடப் பட்டு அவர் சார்ந்திருக் கக் கூடிய வேலூர் மாவட்டத்தில் இருக்கக் கூடிய 4 கல்லூரிகளில் ஒரு கல்லூரி புதியது, மாதனூர் கல்லூரி .அதைத் தவிர்த்து மீதியி ருக்கக்கூடிய 3 கல்லூரி களிலும் தேவையான பாடப்பிரிவுகளை எல்லாம் கண்டறிந்து கண்டிப்பாக அரசு பரிசீலனை செய்து அந்தக் கல்லூரிக்கு வழங் கும்.